1st Grade Maths: Subtraction | Numbers Unit 2 Term 1 | Samacheer Kalvi

1st Grade Maths: Subtraction | Numbers Unit 2 Term 1 | Samacheer Kalvi

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் - கழித்தல்

கழித்தல்

கலைச்சொற்கள்

நீக்குதல்

மீதி

கழித்தல்

வேறுபாடு

குறைவு

பயணம் செய்வோம்

பயணம் செய்வோம் - கழித்தல் அறிமுகம்

ஆசிரியருக்கான குறிப்பு

மேற்கண்ட படங்களைக் கதையாக விவரித்து வேறுபாடு, குறைவு, நகர்ந்து விட்டால், சென்றுவிட்டல் போன்ற கழித்தலைக் குறிக்கும் சொற்களை வலுப்படுத்தலாம்.

நீக்குதல்

கற்றல்

கழித்தல் என்பதன் பொருள் நீக்குதல்

கழித்தல் என்பதன் பொருள் நீக்குதல் உதாரணம்

செய்து பார்

கழித்தல் செய்து பார் பயிற்சி

கழித்தல் குறியீடு

கற்றல்

‘-‘ என்பது கழித்தல் குறியீடு ஆகும்

கழித்தல் குறியீடு உதாரணம்

செய்து பார்

கழித்தல் குறியீடு செய்து பார் பயிற்சி

கற்றல்: வட்டமிடுவதன் மூலம் கழித்தல்

வட்டமிடுவதன் மூலம் கழித்தல் கூற்றை முழுமையாக்குக.

வட்டமிடுவதன் மூலம் கழித்தல் உதாரணம்

செய்து பார்

வட்டமிட்டு கழித்தல் பயிற்சி

கற்றல்: நீக்குதல் மூலம் கழித்தல்

நீக்குதல் மூலம் கழித்தல் கூற்றை முழுமையாக்குக.

நீக்குதல் மூலம் கழித்தல் உதாரணம்

செய்து பார்

நீக்குதல் மூலம் கழித்தல் பயிற்சி

கோடுகளைப் பயன்படுத்திக் கழித்தல்

கற்றல்

கோடுகளைப் பயன்படுத்திக் கழித்தல் உதாரணம்

செய்து பார்

கோடுகளைப் பயன்படுத்திக் கழித்தல் பயிற்சி

6 - 1 = 5

5 - 2 = 3

9 - 4 = 5

மணிகளைப் பயன்படுத்திக் கழித்தல்

கற்றல்

மணிகளைப் பயன்படுத்திக் கழித்தல் உதாரணம்

5 – 1 = 4

செய்து பார்

மணிகளைப் பயன்படுத்திக் கழித்தல் பயிற்சி

6 - 1 = 5

5 - 2 = 3

9 - 4 = 5

முயன்று பார்

நீ விரும்பும் கழித்தல் கூற்றை உருவாக்கு.

5-1= 4

மனக்கணக்கு

3 கிடைக்குமாறு விடுபட்ட கட்டங்களை நிரப்புக.

மனக்கணக்கு பயிற்சி

மனக்கணக்கு (வாய்மொழி)

1. பாரி 7 வாழைப்பழங்களை வாங்கினான். அவற்றில் 2 பழங்களை அவனது தம்பி தின்றான் எனில், பாரியிடம் மீதம் எத்தனை வாழைப்பழங்கள் உள்ளன?

வாழைப்பழம் கணக்கு

7 – 2 = 5 வாழைப்பழங்கள்

2. மணி 6 முட்டைகளை வாங்கினான். அதில் 3 முட்டைகள் உடைந்துவிட்டன எனில், எத்தனை முட்டைகள் மீதி இருக்கும்?

முட்டை கணக்கு

6 – 3 = 3 முட்டைகள்

3. தென்றலின் வயது 8. அவளது தங்கை நிலா, அவளைவிட 2 வயது சிறியவள் எனில், நிலாவின் வயது என்ன?

வயது கணக்கு

8 − 2 = 6 வயது

நீயும் கணித மேதைதான்

8, 5, 3 என்ற எண்களைப் பயன்படுத்தி இந்தக் கட்டங்களை எவ்வாறு நிரப்பலாம்?

கட்டங்களை நிரப்புக பயிற்சி

8 - 5 = 3

மகிழ்ச்சி நேரம்

+ அல்லது – பயன்படுத்தி வட்டத்தை நிரப்புக.

கூட்டல் அல்லது கழித்தல் குறியீடு பயிற்சி

முயன்று பார்

நான் 5-ஐவிடப் பெரியவன், 8-ஐவிடச் சிறியவன். ஆனால் நான் 7 இல்லை எனில், நான் யார்?

விடை : 6

செயல்பாடு

நோக்கம்: கழித்தல் கதைகளை உருவாக்குதல்.

தேவையான பொருட்கள்: பின்வருவனவற்றைப் போன்ற கழித்தல் கூற்றுகள் எழுதிய மின்னட்டைகள்.

கழித்தல் கூற்று மின்னட்டைகள்

வழிமுறை:

  1. வகுப்பை இரு குழுக்களாகப் பிரிக்கவும்.
  2. குழுவில் உள்ள ஒருவர் மின் அட்டைகளிலிருந்து ஒன்றை எடுத்து அடுத்த குழுவிற்குக் காட்ட வேண்டும்.
  3. அக்குழு அந்த அட்டைக்கான கழித்தல் கதைகளை உருவாக்கவேண்டும்.
  4. இதே செயல்பாட்டை இரு குழுக்களும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றித் தொடர வேண்டும்.

ஆசிரியருக்கான குறிப்பு

மாணவர்கள் அவர்களாகவே கூட்டல் மற்றும் கழித்தல் கதைகளைக் கூறுவதற்கு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தவேண்டும். இது, கணிதக் கருத்துப் பரிமாற்றம் மேம்பட ஊக்கப்படுத்தும்.