2nd Grade Tamil Term 1 Chapter 7: Vitu Selathey - Questions and Answers

2nd Grade Tamil Term 1 Chapter 7: Vitu Selathey - Questions and Answers

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 7

விட்டுச் செல்லாதே: கேள்விகள் மற்றும் பதில்கள்

விட்டுச் செல்லாதே பாடம்

சொன்னது யார்? பொருத்துக

யார் யாரிடம் சொன்னது என்று சிந்தித்துப் பொருத்துங்கள்.

கூற்றுகள்

  • 1. கயல் என்னை எடுக்காமல் சென்றுவிட்டாள்
  • 2. எழுதும்போது பிழையானால் என்னைத் தேடுவாளே
  • 3. இங்கேயும் இல்லையே
  • 4. இங்கேதானே வைத்தேன்
  • 5. எங்கே போனது?

பேசியவர்கள்

  • பாத்திமா
  • கயல்
  • முத்து
  • கரிக்கோல்
  • அழிப்பான்

வாய்மொழியாக விடை தருக

1. கரிக்கோல், துருவி, அழிப்பான் இவை மூன்றும் என்னென்ன நினைத்து வருத்தப்பட்டன?

கரிக்கோல்: கயல் எழுதும்போது என்னைத் தேடுவாளே

துருவி: கரிக்கோல் கூராக இருந்தால் தான் முத்துவுக்குப் பிடிக்கும்

அழிப்பான்: பாத்திமாவும் எழுதும்போது பிழையானால் என்னைத் தேடுவாளே என்று வருத்தப்பட்டன.

விடை எழுதுக

1. வகுப்பில் யார் யார் என்னென்ன பொருள்களை விட்டுச் சென்றனர்?

கயல் – கரிக்கோல்

முத்து – துருவி

பாத்திமா - அழிப்பான்

ஆகிய பொருள்களை வகுப்பில் விட்டுச் சென்றனர்.

2. விட்டுச்சென்ற பொருள்கள் உரியவர்களுக்குக் கிடைத்தனவா? எப்போது?

ஆமாம். விட்டுச்சென்ற பொருள்கள் உரியவர்களுக்கு மறுநாள் கிடைத்தன.

விட்டுச் செல்லாதே பயிற்சி

பொருத்தமான சொல்லை எழுதி நிரப்புக

(அது, அவன், அவள், அவை, அவர்கள்)

1. மதி ஒளி இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். அவள் அழகாக ஓவியம் வரைகிறாள்.

2. வளவன் மிதிவண்டி ஓட்டுகிறான். அவன் கடைக்குச் செல்கிறான்.

3. பயணிகள் பேருந்தில் ஏறுகின்றனர். அவர்கள் சுற்றுலா செல்கின்றனர்.

4. பூனை பால் குடிக்கிறது. அது எலியைப் பிடிக்கும்.

5. கதைப் புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவை அத்தை வாங்கித் தந்தவை.