2nd Grade Tamil | Term 2 Chapter 4: Vazhthalam Vanga | Samacheer Kalvi

2nd Grade Tamil | Term 2 Chapter 4: Vazhthalam Vanga | Samacheer Kalvi

பருவம் 2 இயல் 4 | 2 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்த்தலாம் வாங்க

2nd Tamil : Term 2 Chapter 4 : Valthalam Vanka

வாழ்த்தலாம் வாங்க

பர்வீன் மயில் படம் வரைதல்

வாழ்த்தலாம் வாங்க

பர்வீன் படம் வரைந்துகொண்டு இருந்தாள். அப்போது அஜ்மல் வந்தான்.

"ஐ! மயில். அழகாக உள்ளது, அக்கா" என்றான் அஜ்மல்.

"வா! வா! உனக்குப் பிடிக்குமே.... வண்ணம் தீட்டுகிறாயா?" என்றாள் பர்வீன்.

"ஓ!" ஆர்வத்துடன் அமர்ந்தான் அஜ்மல்.

"இறகின் நடுவில் எழுத இடம் விட்டு வண்ணம் தீட்டு அஜ்மல்" என்றாள் பர்வீன்.

"ஏன் அக்கா?" என்று கேட்டான் அஜ்மல்.

அஜ்மல் மயிலுக்கு வண்ணம் தீட்டுதல்

"அந்த இடங்களில் ஆங்கில மாதங்களின் பெயர்களை எழுதப் போகிறேன்" என்றாள் பர்வீன்.

"இது நாள்காட்டியா அக்கா?" என்று கேட்டான் அஜ்மல்.

"இல்லை. இது நினைவூட்டி" என்றாள் பர்வீன்.

"நினைவூட்டியா.... புரியும்படி சொல்லேன் அக்கா" சிணுங்கினான் அஜ்மல்.

"இதை ஆசிரியரிடம் தருவேன். அந்தந்த மாதத்தில் பிறந்தவர்களின் பெயர்களை எழுதுவோம்." என்றாள் பர்வீன்.

"எதற்காக அக்கா?" என்றான் அஜ்மல்.

"மறக்காமல் வாழ்த்து சொல்லத்தான் இந்தப் பிறந்தநாள் நினைவூட்டி" என்றாள் பர்வீன்.

"நன்றாக இருக்கிறதே. எங்கள் வகுப்புக்கும் ஒன்று செய்யலாமா அக்கா?" என்றான் அஜ்மல்.

"ஓ, செய்யலாமே! இனி எல்லாரின் பிறந்தநாளிலும் மறக்காமல் வாழ்த்தலாம்".

முடிக்கப்பட்ட பிறந்தநாள் நினைவூட்டி மயில்