2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 11
தமிழ்ச்சொல் அறிந்து பயன்படுத்துவோம்: கேள்விகள் மற்றும் பதில்கள்
பொருத்துக
படங்களைப் பார்த்து சரியான தமிழ்ச்சொல்லுடன் பொருத்த முயற்சி செய்க.
(i) அடையாள அட்டை
(ii) கரிக்கோல்
(iii) அழிப்பான்
(iv) துருவி
- Pencil
- Eraser
- Sharpener
- Identity Card
விடைகளைக் காண்க
(i) அடையாள அட்டை - Identity Card
(ii) கரிக்கோல் - Pencil
(iii) அழிப்பான் - Eraser
(iv) துருவி - Sharpener
சரியான சொல்லால் நிரப்புக
கீழ்க்காணும் வாக்கியங்களில் கோடிட்ட இடங்களைச் சரியான சொற்களைக் கொண்டு நிரப்புக.
(i) அம்மா ___________ வாங்கி வரச் சொன்னார்.
(ii) தம்பி ___________ தின்றான்.
(iii) அப்பா ___________ எடுத்துச் சென்றார்.
விடைகளைக் காண்க
(i) அம்மா பாகுக்காய் வாங்கி வரச் சொன்னார்.
(ii) தம்பி பனிப்பூழ் தின்றான்.
(iii) அப்பா கைபேசி எடுத்துச் சென்றார்.

படித்துப் பார்
கீழே உள்ள சொற்றொடர்களைப் படித்துப் பழகுக.
(i) அலைபேசி வேண்டாம்
(ii) தொலைக்காட்சி பாராதே
(iii) கணினியில் விளையாடு
சொல்லக் கேட்டு எழுதுக
கீழே உள்ள சொற்களைப் பிழையின்றி எழுதப் பழகுக.
(i) தொலைக்காட்சி
(ii) கணினி
(iii) அலைபேசி
(iv) பனிப்பூழ்
(v) பாகுக்காய்
