2nd Tamil Term 1 Chapter 3: Pesathavai Pesinal - Questions and Answers | பேசாதவை பேசினால்

2nd Tamil Term 1 Chapter 3: Pesathavai Pesinal - Questions and Answers

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3

பேசாதவை பேசினால்

புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : பேசாதவை பேசினால்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்.

பேசாதவை பேசினால் - பாடம் அறிமுகம்

பொருத்துக

1. பூக்கள் - குப்பையைத் தொட்டியில் போடுவீர்

2. ஊஞ்சல் - பூக்களைப் பறிக்காதீர்

3. தண்ணீர்க்குழாய் - உணவை வீணாக்காதீர்

4. குப்பைத்தொட்டி - மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர்

5. உணவு மேசை - தண்ணீரை வீணாக்காதீர்

விடை

1. பூக்கள் - பூக்களைப் பறிக்காதீர்

2. ஊஞ்சல் - மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர்

3. தண்ணீர்க்குழாய் - தண்ணீரை வீணாக்காதீர்

4. குப்பைத்தொட்டி - குப்பையைத் தொட்டியில் போடுவீர்

5. உணவு மேசை - உணவை வீணாக்காதீர்

வாய்மொழியாக விடை தருக

1. மல்லி பூங்காவில் என்னென்ன செய்தாள்?

2. இக்கதையிலிருந்து நீ அறிந்தவற்றைக் கூறுக.

3. மல்லியின் எந்தச் செயல் உனக்குப் பிடித்திருக்கிறது?

விடை எழுதுக

1. உணவைக் கீழே இறைக்கக்கூடாது ஏன்?

உணவைக் கீழே இறைக்கக்கூடாது: ஈக்கள் மொய்க்கும்.

2. பூங்காவில் எழுதப்பட்டிருந்த ஏதேனும் இரண்டு அறிவிப்புகளை எழுதுக.

பூங்காவில் எழுதப்பட்டிருந்த ஏதேனும் இரண்டு அறிவிப்புகள்:

(i) குப்பையை குப்பைத் தொட்டியில் போடுவீர்

(ii) தண்ணீரை வீணாக்காதீர்

பூங்கா அறிவிப்புகள் - விடை எழுதுக