பருவம் 1 இயல் 5 | 2 ஆம் வகுப்பு தமிழ் - வண்ணம் தொட்டு
2nd Tamil : Term 1 Chapter 5 : Vannam thottu

பொருத்துக
கொடுக்கப்பட்டவற்றை சரியாகப் பொருத்துக:
1. கடலலையில்
2. பூக்கள் போல
3. வண்ணம் தொட்டு
4. மரக்கிளையில்
- படங்கள் வரையலாம்
- கால்கள் நனைக்கலாம்
- ஊஞ்சல் ஆடலாம்
- பூத்துச் சிரிக்கலாம்
விடை:
1. கடலலையில் - கால்கள் நனைக்கலாம்
2. பூக்கள் போல - பூத்துச் சிரிக்கலாம்
3. வண்ணம் தொட்டு - படங்கள் வரையலாம்
4. மரக்கிளையில் - ஊஞ்சல் ஆடலாம்
பேசுவோம் வாங்க!
வானவில்லைத் தொட்டு என்னென்ன வரைந்தார்கள்?

பாடலைத் தொடர்ந்து பாடுக
கருப்பு தொட்டு கருப்பு தொட்டு
காகம் வரையலாம்
காகம் போல காகம் போல
கரைந்து பார்க்கலாம்
வெள்ளை தொட்டு வெள்ளை தொட்டு
கொக்கு வரையலாம்
கொக்கு போல கொக்கு போல
காத்து இருக்கலாம்
