Class 1 EVS: Living and Non-living Things | Term 1 Unit 1 | Samacheer Kalvi

Class 1 EVS: Living and Non-living Things | Term 1 Unit 1 | Samacheer Kalvi

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 1 அலகு 1 : உயிருள்ள, உயிரற்ற பொருள்கள்

1st EVS Environmental Science : Term 1 Unit 1 : Living and Non-living Things

கற்றல் நோக்கங்கள்

❖ உயிருள்ள, உயிரற்ற பொருள்களை அடையாளம் கண்டு. அவற்றின் வேறுபாடுகளை அறிதல்

❖ உயிருள்ள, உயிரற்ற பொருள்களுக்கு இடையேயான தொடர்பினை புரிந்து கொள்ளுதல்

என் பெயர் அரசி. என்னிடம் ஒரு நாய்க்குட்டி உள்ளது. நான் அதை சுட்டி என அழைப்பேன். நான் அதனுடன் விளையாடுவேன். அது என் மீது குதிக்கும்.

நான் அதற்கு உணவு தருவேன், அது உணவை வேகமாக சாப்பிடும். எனக்கு அதனை மிகவும் பிடிக்கும்.

அரசி மற்றும் அவளது நாய்க்குட்டி சுட்டி

என்னிடம் ஒரு பொம்மை உள்ளது. நான் அதை அம்மு என அழைப்பேன். நான் அதற்கு உணவளிக்க முயற்சித்தேன். அது சாப்பிடவில்லை.

நான் அதன் சாவியைத் திருகினால் மட்டுமே. அதனால் நகர முடியும். எனக்கு என் பொம்மையை மிகவும் பிடிக்கும்.

அரசி. தன் நாய்க்குட்டி மட்டும் உணவு சாப்பிட்டது ஆனால், தன் பொம்மையால் ஏன் சாப்பிட முடியவில்லை என வியந்தாள்!

அது ஏன் என உனக்குத் தெரியுமா? அதை நாம் அறிவோமா!

உயிருள்ள பொருள்கள்

உயிருள்ள பொருள்கள்

உயிருள்ள பொருள்கள் உணவு உண்ணும், வளரும், நகரும் மற்றும் இளம் உயிரிகளைப் பெற்றிருக்கும். இவற்றால் சுவாசிக்கவும், உணரவும் முடியும்.

நான் சாப்பிடுகிறேன்

நான் வளர்கிறேன்

நான் விளையாடுகிறேன்.

உயிருள்ள மனிதன்

நான் ஓர் உயிருள்ள மனிதன்

உயிருள்ளவைகளின் பண்புகள்

❖ உயிருள்ளவை உணவு உண்ணும்.

உயிருள்ளவை உணவு உண்ணும்

❖ உயிருள்ளவை வளரும்.

உயிருள்ளவை வளரும்

செயல்பாடு

❖ ஒரு விதையை விதைத்து அதன் வளர்ச்சியைக் கவனிப்போமா!

விதையின் வளர்ச்சி

செயல்பாடு

❖ படங்களை வரிசைப்படுத்துவோமா!

படங்களை வரிசைப்படுத்துதல்

செயல்பாடு

❖ உயிர் வாழ உணவு தேவைப்படுபவைகளுக்கு (✔) குறியிட்டுக் காட்டலாமா!

உணவு தேவைப்படும் உயிரினங்கள்

உயிருள்ளவைகள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும்.

உயிருள்ளவை நகரும்

உயிருள்ளவைகளுக்கு இளம் உயிரிகள் உண்டு.

இளம் உயிரிகள்

சிந்தனைப் பகுதி

படகு நகருமே! அது உயிருள்ள பொருளா?

விடை : இல்லை

உயிருள்ளவைகளுக்கு உணர்ச்சிகள் உண்டு. உயிருள்ளவைகள் சுவாசிக்கும்.

உணர்ச்சிகள் மற்றும் சுவாசம்

செயல்பாடு

இப்பூனை பசியாக உள்ளது. பால் இருக்கும் இடத்தை அடைய பூனைக்கு உதவுங்களேன்.

பூனைக்கு வழிகாட்டுதல்

செயல்பாடு

இளம் உயிரியை அதன் தாயுடன் கோடிட்டுச் சேர்ப்போமா!

இளம் உயிரிகளை தாயுடன் சேர்த்தல்

உயிரற்ற பொருள்கள்

நாம் பேசுவோமா!

உயிரற்ற பொருள்:

நகராது

வளராது

சுவாசிக்காது

உணவு உண்ணாது

இளம் உயிரிகள் கிடையாது

உயிரற்ற பொருள்கள்

செயல்பாடு

படத்தில் உள்ளவற்றின் பெயர்களின் முதல் எழுத்தைப் பயன்படுத்தி அரசி, காது என்ற வார்த்தைகளைப் பெறவும்.

வார்த்தை விளையாட்டு

படத்தைப் பார்

படத்தில் மலை, ஆறு, குளம், ஏரியை உங்களால் பார்க்க முடிகிறதா? மலை என்பது பாறைகள் மற்றும் மண்ணால் ஆனது. ஆறு. குளம் மற்றும் ஏரி போன்றவை நீரால் நிரம்பி உள்ளன. மண் மற்றும் நீர் போன்றவை தாவரங்கள் வளர உதவுகின்றன. தாவரங்களிலிருந்து நாம் உணவைப் பெறுகிறோம். நாம் காற்றைச் சுவாசிக்கிறோம். காற்று, நீர் மற்றும் மண் போன்றவை உயிரற்றவை. இவையின்றி நம்மால் உயிர் வாழ முடியுமா?

இயற்கை காட்சி

சொற்களஞ்சியம்

காற்று, நீர், மண், ஆறு, மலை, குளம், ஏரி, கடல்.

நீர் வாழ் உயிரினங்கள் அடங்கிய படத்தை உற்றுநோக்கு. இது ஒரு கடலின் படம். கடலில் பல்வேறு உயிரினங்கள் காணப்படுகின்றன.

நீர் வாழ் உயிரினங்கள்

பாடல் நேரம்

நீல வானில் உயரே பறக்கும் கழுகு ஆவோமே.

ஆழ்கடலின் மேலே குதிக்கும் டால்பின் ஆவோமே.

ஆற்று மணலில் ஊர்ந்து செல்லும் நண்டு ஆவோமே.

கடல், வானம், மணலுக்கு எல்லாம் உயிரில்லையே. கழுகு. நண்டு. டால்பினுக்கு உயிரிருக்குமே.

பாடல் காட்சி

செயல்பாடு

புள்ளி (●) உள்ள இடங்களில் மஞ்சள் வண்ணமும், பெருக்கல் குறி (X) உள்ள இடங்களில் பச்சை வண்ணமும், மற்ற இடங்களுக்கு நீல வண்ணமும் தீட்டிய பின் என்ன காண்கிறீர்கள்?

வண்ணம் தீட்டும் பயிற்சி

செயல்பாடு

படத்தை உற்று நோக்கவும். உயிருள்ளவைகளை உயிரற்ற பொருள்களில் இருந்து வேறுபடுத்தவும். காரணம் கூறவும்.

உயிருள்ளவை மற்றும் உயிரற்றவை வேறுபடுத்துதல்