Class 1 Maths Term 3 Unit 1: Geometry - Classifying Objects | Samacheer Kalvi

1 ஆம் வகுப்பு கணக்கு: பருவம் 3 அலகு 1 - வடிவியல்

வடிவியல்: பொருள்களை வகைப்படுத்துதல்

1 ஆம் வகுப்பு கணக்கு | பருவம் 3 | அலகு 1

அறிமுகம்

கலைச்சொற்கள்: சதுரம், செவ்வகம், முக்கோணம், வட்டம்

வடிவங்களை அறிவோம்

நான்தான் சதுரம். எனக்கு 4 மூலைகளும், 4 பக்கங்களும் உள்ளன. என்னுடைய எல்லாப் பக்கங்களும் சமம்.

சதுரம்

நான்தான் செவ்வகம். எனக்கு 4 மூலைகளும், 4 பக்கங்களும் உள்ளன. என்னுடைய எதிரெதிர்ப் பக்கங்கள் மட்டும் சமம்.

செவ்வகம்

நான்தான் முக்கோணம், எனக்கு 3 மூலைகளும், 3 பக்கங்களும் உள்ளன.

முக்கோணம்

நான்தான் வட்டம், நான் வளைவாக இருப்பேன். எனக்கு மூலைகளும் இல்லை, பக்கங்களும் இல்லை.

வட்டம்

செய்து பார்

முக்கோண வடிவப் படத்தை வட்டமிடுக.

முக்கோண வடிவத்தை வட்டமிடுக

செவ்வக வடிவப் படத்தை வட்டமிடுக.

செவ்வக வடிவத்தை வட்டமிடுக

முயன்று பார்

பொருள்களை அதன் அடிப்படை வடிவங்களுடன் பொருத்துக.

பொருள்களை வடிவங்களுடன் பொருத்துக

மகிழ்ச்சி நேரம்

சரியானதை (✔) செய்க.

4 பக்கங்களும் சமமாக உள்ள வடிவம் எது?
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் - சம பக்கங்கள்
எதிரெதிர் பக்கங்கள் மட்டுமே சமமாக உள்ள வடிவம் எது?
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் - எதிரெதிர் பக்கங்கள்
வளைவாக உள்ள வடிவம் எது?
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் - வளைவான வடிவம்

விளையாட்டு

நான் யார்? கண்டுபிடி?

மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்கவும். அவற்றில் குழு 'அ' கூறும் புதிர்களுக்கு, குழு 'ஆ' விடையளிக்க வேண்டும்.

❖ என்னுடைய 4 பக்கங்களும் சமமானவை எனில், நான் யார்?

சதுரம்

❖ எனக்கு 3 பக்கங்கள் மட்டுமே உள்ளன எனில், நான் யார்?

முக்கோணம்

❖ நான் வளைவானவன் எனில், நான் யார்?

வட்டம்

❖ எனக்கு 4 பக்கங்கள் உள்ளன. அவற்றில் எதிரெதிர்ப் பக்கங்கள் மட்டுமே சமம் எனில், நான் யார்?

செவ்வகம்

குழுக்களின் செயல்பாடுகளை மாற்றி, விளையாட்டினை மேலும் தொடர்க.