3rd Grade Maths: Time - Cyclic Events in a Year | Term 3 Unit 6

3rd Grade Maths: Time - Cyclic Events in a Year | Term 3 Unit 6

நேரம்

3 ஆம் வகுப்பு கணக்கு | மூன்றாம் பருவம் | அலகு 6

ஒரு வருடத்தின் கால சுழற்சி நிகழ்வுகள்

ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுத்து இரவில் உறங்கச் செல்கிறோம்.

இந்தச் செயல்பாடு தினமும் நிகழ்கிறது.

தினமும் காலையில் சூரியன் உதித்து மாலையில் மறைகிறது.

ஒரே மாதிரியாக அதிக மாற்றமில்லாமல் திரும்பத் திரும்ப நடைபெறும் நிகழ்வுகள் ஒரு சுழற்சியைக் குறிக்கின்றன.

பகலும் இரவும் மாறி மாறி வருவது ஒரு சுழற்சியை ஏற்படுத்துகிறது.

மரம் வளர்தல், வீடு கட்டுதல் போன்ற சில நிகழ்வுகள் மீளவும் நிகழாது. இவை சுழற்சியை ஏற்படுத்தாது.

1. சுழற்சியை ஏற்படுத்தும் மற்றும் ஏற்படுத்தாத நிகழ்வுகளைப் பட்டியலிடுக.

i. பள்ளிக்கு வருதல்

ii. கடிகாரத்தின் சுழற்சி

iii. வாரத்தின் நாட்கள்

iv. உங்கள் செல்லப் பிராணியின் வளர்ச்சி

v. வீடு கட்டுதல்

vi. இட்லி தயாரித்தல்

சுழற்சியை ஏற்படுத்தும் மற்றும் ஏற்படுத்தாத நிகழ்வுகளை பட்டியலிடும் அட்டவணை

2. கொடுக்கப்பட்ட சுழற்சியின் நிகழ்வுகளை நிறைவு செய்க.

சுழற்சியின் நிகழ்வுகளை நிறைவு செய்யும் வரைபடம்

செயல்பாடு

ஒரு வருடத்தின் மாத சுழற்சியைத் தயாரித்தல்

❖ ஆசிரியர் மாதங்களின் பெயர் கொண்ட அட்டைகளைத் தயாரிக்கவும்.

❖ மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குழுவாகப் பிரிக்கவும்.

❖ ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தொகுதி அட்டையைக் கொடுக்கவும். ஒவ்வொரு அட்டைத் தொகுதியையும் மாற்றி வைக்கவும்.

❖ குழுக்களைச் சரியான மாத சுழற்சியின் படி வரிசைப்படுத்துமாறு கூறவும்.

ஒரு வருடத்தின் மாத சுழற்சி வரைபடம்