3rd Maths: Term 3 Unit 5 Money | Addition and Subtraction of Money

3 ஆம் வகுப்பு கணக்கு: பணம் - கூட்டலும் கழித்தலும்

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : பணம்

பணத்தின் கூட்டலும் கழித்தலும்

பணத்தின் கூட்டலும் கழித்தலும் எண்களின் கூட்டல் கழித்தல் போன்றே செய்ய வேண்டும். ஆனால் கூடுதலாய் ரூபாய் மற்றும் பைசாவிற்கு இடையில் ஒரு புள்ளியை வைக்க வேண்டும்.

1. பின்வருவனவற்றைக் கூட்டுக.

பணத்தின் கூட்டல் கணக்குகள்

2. பின்வருவனவற்றைக் கழிக்க.

பணத்தின் கழித்தல் கணக்குகள்

அன்றாடச் சூழலில் பணத்தைக் கூட்டுதலும் கழித்தலும்

கார்குயில் ₹.20.50 இக்கு மற்றும் ₹.30.50 இக்கு வளையலும் வாங்கிய பின் கடைக்காரரிடம் ஒரு நூறு ரூபாய் கொடுத்தாள் எனில் கடைக்காரர் அவளுக்குத் தரவேண்டிய மீதித் தொகை எவ்வளவு?

1. வாங்கிய பொருள்களின் மொத்த விலையைக் கண்க்கிட வாங்கிய பொருள்களின் விலைகளை கூட்டவும்.

2. கடைக்காரர் கார்குயிலுக்கு மீதம் தரவேண்டிய தொகையை அறிந்துகொள்ள கார்குயில் கடைக்காரரிடம் கொடுத்த தொகையிலிருந்து மொத்த விலையைக் கழிக்க வேண்டும்.

பணத்தைக் கூட்டுதல்

சடை மாட்டியின் விலை = 20.50

வளையலின் விலை = 30.50

மொத்த விலை = 51.00

பணத்தைக் கழித்தல்

கார்குயில் கடைக்காரரிடம் கொடுத்த தொகை = 100.00

மொத்த விலை = 51.00

கடைக்காரர் தர வேண்டிய தொகை = 49.00

கார்குயிலுக்குக் கடைக்காரர் தந்த மீதித் தொகை = ₹ 49.00