எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - வரிசைப்படுத்துதல் | 4th Maths : Term 1 Unit 2 : Numbers
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்
வரிசைப்படுத்துதல்
எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசையில் வரிசைப்படுத்துதல்.
வரிசைப்படுத்துதல்
எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசையில் வரிசைப்படுத்துதல்.
ஏறுவரிசை
எண்களை மிகச்சிறிய எண்ணிலிருந்து மிகப்பெரிய எண்கள் வரை வரிசைப்படுத்துதல் ஏறுவரிசை ஆகும்.
எடுத்துக்காட்டு
4278, 4875, 4923, 4717
இங்கு ஆயிரமாவது இடத்தில் உள்ள அனைத்து எண்களும் சமம் எனவே நாம் நூறாவது இடத்தில் உள்ள இலக்கங்களை ஒப்பிடுவோம்.
\[ 4278 < 4717 < 4875 < 4923 \]
4278, 4717, 4875, 4923. இதுவே இவ்வெண்களின் ஏறுவரிசை ஆகும்
இறங்குவரிசை
எண்களை மிகப்பெரிய எண்ணிலிருந்து மிகச்சிறிய எண்வரை வரிசைப்படுத்துதல் இறங்குவரிசை ஆகும்.
எடுத்துக்காட்டு
5234, 6270, 4225, 3172, 7871
எண்களின் இறங்குவரிசை.
\[ 7871 > 6270 > 5234 > 4225 > 3172 \]
7871, 6270, 5234, 4225, 3172. இதுவே இவ்வெண்களின் இறங்குவரிசை ஆகும்.
உங்களுக்குத் தெரியுமா?
ஏறுவரிசையின் தலைகீழ் இறங்குவரிசையாகும்.
ஏறுவரிசையின் தலைகீழ் இறங்குவரிசையாகும்.