4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்
எண் தொடர் 10,000 வரை
அலகு − 2
எண்கள்
எண் தொடர் 10,000 வரை
தீபாவளி காலங்களில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க, நவம்பர் 3 முதல் 5 வரை 10,000 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்தது. 9,967 சிறப்பு பேருந்துகளில், 6,367 பேருந்துகள் சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கும், 3,600 பேருந்துகள் மாவட்டத்திற்குள்ளும் இயக்கப்படும்.
கீழ்க்காணும் வினாக்களைப் பயன்படுத்தி கலந்துரையாடுவோம்.
999 உடன் 1ஐக் கூட்ட 1000 கிடைக்கும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக 2000, 3000,... 9000 வரை எண்களை அறிந்து கொள்வோம்.
9999 உடன் 1ஐக் கூட்ட
10000 கிடைக்கும்.
இதன் எண்பெயர் பத்தாயிரம்.
செயல்பாடு
கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கேற்ப ஆணிமணிச்சட்டத்தில் மணிகளை வரைக.
எடுத்துக்காட்டு
1283 ன் எண்பெயரை எழுதுக.
தீர்வு
முதலில் கொடுக்கப்பட்ட எண்ணை விரிவாக்கம் செய்வோம். அவற்றின் எண்பெயர்களை ஒவ்வொன்றின் கீழேயும் எழுதி, அவற்றைச் சேர்த்து எண்பெயரைக் காண்போம்.
எனவே 1283 என்ற எண்ணின் எண்பெயர் ஆயிரத்து இருநூற்று எண்பத்து மூன்று.