4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்
எண்களை ஒப்பிடுதல்
எண்களை ஒப்பிடுதல்
கொடுக்கப்பட்ட இலக்கங்களைக் கொண்டு மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய எண்களாக உருவாக்குதல்.
1. கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்களை ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தி மிகச்சிறிய எண்ணை எழுதுதல்
அ) கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்களில் எந்த இலக்கமும் பூச்சியமாக இல்லை எனில், அந்த இலக்கங்களை ஏறுவரிசையில் வரிசைப்படுத்தினால் மிகச்சிறிய எண் உருவாகும்.
ஆ) ஒரே ஒரு இலக்கம் பூச்சியம் எனில், நாம் இலக்கங்களை ஏறுவரிசையில் வரிசைப்படுத்திய பின் பூச்சியத்தை இடமிருந்து வலமாக இரண்டாமிடத்தில் இடும்போது மிகச்சிறிய எண் கிடைக்கும்.
2. கொடுக்கப்பட்ட இலக்கங்களை ஒரே ஒருமுறை பயன்படுத்தி மிகப்பெரிய எண்ணை எழுதுவதற்கு இலக்கங்களை இறங்குவரிசையில் வரிசைப்படுத்த வேண்டும்.