4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்
பயிற்சி 5.2
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : பயிற்சி 5.2 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 5.2
1. சரியா / தவறா எனக் கண்டறிக.
i. ஆண்டின் முதல் மாதம் ஜனவரி.
விடை: சரி
ii. செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்திற்கு இடையில் மார்ச் மாதம் உள்ளது.
விடை: தவறு
iii. ஆண்டின் கடைசி மாதம் ஜுலை.
விடை: தவறு
iv. பிப்ரவரி மாதத்தில் 30 நாள்கள் உள்ளது.
விடை: தவறு
v. ஏப்ரல் மாதத்திற்கு அடுத்த மாதம் மே ஆகும்.
விடை: சரி
2. விடுபட்ட மாதத்தை எழுதுக.
i. ஜூன், ___________, ஆகஸ்ட், செப்டம்பர்.
விடை: ஜுலை
ii. மார்ச், ஏப்ரல், _________ , ________ .
விடை: மே, ஜுன்
iii. ___________, அக்டோபர், நவம்பர்.
விடை: செப்டம்பர்