4th Maths Term 3 Unit 2 Numbers Mental Arithmetic

4th Maths : Term 3 Unit 2 : Numbers - Mental Arithmetic

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - மனக் கணக்கு: மனதால் 10 மற்றும் 100 மடங்குகளைக் கூட்டல், கழித்தல் | 4th Maths : Term 3 Unit 2 : Numbers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

மனக் கணக்கு: மனதால் 10 மற்றும் 100 மடங்குகளைக் கூட்டல், கழித்தல்

மனக் கணக்கு

1. மனதால் 10 மற்றும் 100 மடங்குகளைக் கூட்டல், கழித்தல்,.

அதிக எண்ணிக்கையில் உள்ள பொருட்களை எண்ணுவதற்கு 10 மற்றும் 100 இன் மடங்குகள் பயன்படுகின்றன. (பணம் உள்பட)

10 இன் மடங்குகள்:
10, 20, 30, 40, 50....

பத்தின் மடங்குகளுடன் கூட்டுக

Mental Arithmetic Explanation

இங்குப் பூச்சியத்துடன் கூட்டும் பொழுது ஒன்றாம் மற்றும் நூறாம் இடம் மாறவில்லை, 10ஆம் இடம் மட்டும் மாறியுள்ளது.

(i) \( \mathbf{2} + \mathbf{1} = 3 \)
(ii) \( \mathbf{4} + \mathbf{1} = 5 \)

பின்வருவனவற்றைக் கூட்டுக.

எடுத்துக்காட்டு 1

கூட்டுக 374 + 10

Example 1

$$ 4 + 0 = 4 $$

$$ \mathbf{7} + \mathbf{1} = 8 $$

எனவே, $$ 374 + 10 = 384 $$

எடுத்துக்காட்டு 2

கூட்டுக 286 + 30

Example 2

$$ \mathbf{8} + \mathbf{3} = 11 $$

இங்கு 11 ஆனது இரண்டு இலக்கங்களைப் பெற்றுள்ளது. இதில் 1ஐ 10ஆம் இடத்தில் வைக்கவும். மற்றொரு 1ஐ நூறாம் இட இலக்கத்துடன் கூட்டவும்.

எனவே, $$ 286 + 30 = 316 $$

நூறின் மடங்குகளுடன் கூட்டுக

Hundreds Addition

இங்குப் பூச்சியத்துடன் கூட்டும் பொழுது ஒன்றாம் இடம் மற்றும் பத்தாம் இடம் மாறவில்லை, நூறாம் இடம் மட்டும் மாறியுள்ளது.

எடுத்துக்காட்டு 3

கூட்டுக 682 + 100

Example 3

$$ 2 + 0 = 2 $$

$$ 8 + 0 = 8 $$

$$ \mathbf{6} + \mathbf{1} = 7 $$

$$ \therefore 682 + 100 = 782 $$

எடுத்துக்காட்டு 4

835 ஐ 100 உடன் கூட்டுக.

Example 4

$$ \mathbf{8} + \mathbf{1} = 9 $$

$$ \therefore 835 + 100 = 935 $$

10 இன் மடங்குகளிலிருந்து கழித்தல்

கூடுதலுக்கு எந்த முறை பயன்படுத்தப்பட்டதோ, அதே முறையைக் கழித்தலுக்கும் பயன்படுத்துக. கூட்டுவதற்குப் பதிலாக, வட்டத்திலுள்ள எண்களைக் கழிக்கவும்.

எடுத்துக்காட்டு 5

625 இலிருந்து 10ஐக் கழிக்கவும்.

Example 5

$$ 5 – 0 = 5 $$

$$ \mathbf{2} – \mathbf{1} = 1 $$

$$ \therefore 625 – 10 = 615 $$

எடுத்துக்காட்டு 6

981இலிருந்து 50 ஐக் கழிக்கவும்.

Example 6

$$ \mathbf{8} – \mathbf{5} = 3 $$

$$ \therefore 981 − 50 = 931 $$

100 இன் மடங்குகளிலிருந்து கழித்தல்

எடுத்துக்காட்டு 7

546இலிருந்து 400 ஐக் கழிக்க

Example 7

$$ 5 – 4 = 1 $$

$$ \therefore 546 – 400 = 146 $$