4th Maths Term 3 Unit 3 Exercise 3.3 Measurements Subtraction in Tamil

4th Maths Term 3 Unit 3 Exercise 3.3 Measurements
அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.3 (திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கழித்தல் (லி/மிலி)) | 4th Maths : Term 3 Unit 3 : Measurements

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்

பயிற்சி 3.3 (திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கழித்தல் (லி/மிலி))

பயிற்சி 3.3

I. பின்வருவனவற்றைக் கூட்டுக.

Exercise I Problems

II. பின்வருவனவற்றைத் தீர்க்க.

Exercise II Problems

III. பின்வருவனவற்றைத் தீர்க்க.

1. ராமு தன்னுடைய இரண்டு கார்களிலும் பெட்ரோலை நிரப்பினார். முதல் கார் 23 லி 500 மிலி கொள்ளளவும், இரண்டாவது கார் 15 லி 750 மிலி கொள்ளளவும் பிடிக்கும் எனில், மொத்தக் கொள்ளளவைக் காண்க.

தீர்வு: Solution for Q1 மொத்த கொள்ளளவு = 39 லி 250 மிலி

2. கண்ணனிடம் சில பசுக்கள் இருக்கின்றது. அவை முதல் வாரத்தில் 48 லி 480 மிலி இரண்டாவது வாரத்தில் 57லி 530 மிலி பால் கொடுக்கின்றது எனில், பாலின் மொத்த அளவைக் காண்க.

தீர்வு: Solution for Q2 மொத்த கொள்ளளவு = 106 லி 010 மிலி

3. ஒரு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்ட பழச்சாறுகளின் கொள்ளளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Juice Table

மேற்கண்ட அட்டவணையில், பயன்படுத்தப்பட்ட மொத்த சாறுகளின் அளவுகளைக் காண்க.

i. ஆப்பிள் சாறு + எலுமிச்சை சாறு = 36 லி 850 மிலி
ii. மாம்பழச்சாறு + எலுமிச்சை சாறு = 43 லி 510 மிலி
iii. எலுமிச்சை சாறு + மாம்பழச்சாறு = 43 லி 510 மிலி

4. ஒரு கடைக்காரரிடம் 43 லி 750 மிலி கடலை எண்ணெய் இருந்தது. அதில் 24 லி 350 மிலி எண்ணெய்யை விற்றுவிட்டார் எனில், அவரிடம் மீதமிருந்த எண்ணெய் எவ்வளவு?

தீர்வு: Solution for Q4 மீதமுள்ள எண்ணெயின் அளவு = 19 லி 400 மிலி

5. ஒரு பக்கெட்டில் 15 லி 500 மிலி தண்ணீர் இருந்தது. கோபி 5 லி 200 மிலி தண்ணீரை செடிகளுக்கு ஊற்றினார் எனில், அந்த பக்கெட்டில் மீதமுள்ள தண்ணீர் எவ்வளவு?

தீர்வு: Solution for Q5 மீதமுள்ள தண்ணீ ரின் அளவு = 10 லி 300 மிலி

6. நான் 73 லி பால் வாங்கினேன். அதில் 34 லி 500 மிலி பாலை என் தங்கை எடுத்துக் கொண்டாள் எனில், என்னிடம் மீதமுள்ள பால் எவ்வளவு?

தீர்வு: Solution for Q6 மீதமுள்ள பாலின் அளவு = 38 லி 500 மிலி

7. இந்த இரண்டு கொள்கலனில் உள்ள திரவங்களின் அளவுகளுக்கு இடையேயான வித்தியாசத்தை காண்க.

Containers for Q7
தீர்வு: Solution for Q7 வித்தியாசம் = 8 லி 200 மிலி