4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : எனது உடல்
பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு அறிவியல் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 4th Science : Term 1 Unit 1 : My Body
கேள்விகள் மற்றும் பதில்கள்
4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : எனது உடல் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், மதிப்பீடு, சரியான விடையைத் தேர்ந்தெடு, கோடிட்ட இடத்தை நிரப்புக, சரியா அல்லது தவறா எனக் கூறுக, பொருந்தாத ஒன்றை வட்டமிடு, பொருத்துக, சுருக்கமாக விடையளி, விரிவாக விடையளி, உயர் சிந்தனை வினாக்கள்.
மதிப்பீடு
அ. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆ. அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு படத்தை நிரப்புக.
(வாயில் முத்தமிடல், தாத்தா-பாட்டியின் அன்பு, பிட்டத்தைத் தட்டுதல், அப்பா தலையில் வருடுதல், பெற்றோரின் அணைப்பு மற்றும் முத்தம், பாலியல் தொடர்பான படங்களைக் காண்பித்தல்)
நல்ல தொடுதல்
- (i) தாத்தா-பாட்டியின் அன்பு
- (ii) அப்பா தலையில் வருடுதல்
- (iii) பெற்றோரின் அணைப்பு மற்றும் முத்தம்
தவறான தொடுதல்
- (i) வாயில் முத்தமிடல்
- (ii) பிட்டத்தைத் தட்டுதல்
- (iii) பாலியல் தொடர்பான படங்களைக் காண்பித்தல்
இ. கீழ்க்காணும் குறிப்புகளுக்கான விடைகளைக் கண்டறிந்து அவற்றை வட்டமிடவும். (உங்களுக்காக முதல் குறிப்பிற்கு மட்டும் விடை காட்டப்பட்டுள்ளது)
ஈ. சரியா? தவறா? என்று கூறுக.
உ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) இதயம் ஆ) நுரையீரல் இ) சிறுநீரகம் ஈ) மூளை
அ) கழுத்து ஆ) இதயம் இ) இரைப்பை ஈ) மூக்கு
அ) ஒரு ஆ) இரண்டு இ மூன்று ஈ) நான்கு
அ) நலமற்ற ஆ) மோசமான இ) பாதுகாப்பற்ற ஈ) நலமான
அ) எண்ணெய் ஆ) தண்ணீர் இ) பொட்டலமிடப்பட்ட பானம் ஈ) உப்பு நீர்
ஊ. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்க
1. நிறைய பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருள்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. இனிப்பான பானங்களுக்குப் பதிலாக நீர் அல்லது பாலை அருந்துங்கள்.
3. முடிந்த அளவு மிட்டாய், கேக், பனிக்கூழைக் (Ice Cream) குறைவாக உண்ணுங்கள்.
இதயம் – கொழுப்பு நிறைந்த உணவைத் தவிர்த்தல்.
சிறுநீரகம் – அதிகளவு தண்ணீர் குடித்தல்.
● கண்டிப்பாக “என்னைத் தொடாதே” என்று உரக்க சத்தமிடுவேன்.
● அந்த இடத்தை விட்டு விரைவாகச் சென்று விடுவேன்.
● பெற்றோர் அல்லது ஆசிரியர் போன்றவர்களிடம் கூறி உதவி கேட்பேன்.
எ. சிந்தித்து விடையளிக்க.
ஏ. செயல்திட்டம்
- உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருள்களின் உதவியுடன் நுரையீரல் மாதிரியைத் தயாரிக்க.
- உடல் உள் உறுப்புகளின் படங்களைச் சேகரித்து படத்தொகுப்பை உருவாக்குக.
நினைவு கூர்வோமா!
கீழே உள்ள கட்டத்தில் சில உடல் பாகங்களின் பெயர்கள் மறைந்திருக்கின்றன. அவற்றைக் கண்டறிந்து வட்டமிடுக.
பதிலளிப்போமா!
1. மூளை (மூக்கு/மூளை) ஓர் உள்ளுறுப்பாகும்.
2. தவறு நம் உடலின் உள்ளுறுப்புகளை நம்மால் பார்க்க இயலும். (சரி/தவறு)
விளையாடுவோமோ!
நினைவாற்றல் சங்கிலி - மூளை விளையாட்டு (ஆசிரியர் உதவியுடன் செய்க.)
எப்படி விளையாடுவது?
- மாணவர்களை வட்டமாக அமர வைக்கவும்.
- ஒரு தட்டில் வெவ்வேறு உடல் பாகங்களின் பட அட்டைகளை வைக்கவும். மற்றொரு தட்டைக் காலியாக வைக்கவும்.
- இப்பொழுது மாணவன் ஒருவனை அழைத்து ஓர் அட்டையை எடுக்கச் சொல்லவும். அதிலுள்ள உடல் பாகத்தின் பெயரைச் கூறச் செய்து மற்றொரு தட்டில் அந்த அட்டையைப் போடவும்.
- வேறொரு மாணவனை ஒரு சீட்டை எடுத்து முதல் இரண்டு அட்டைகள் மற்றும் மூன்றாவது அட்டையிலுள்ள உடல் பாகங்களின் பெயர்களைக் கூறச் செய்யவும்.
- இப்போது அடுத்த மாணவனை அழைத்து மற்றோர் அட்டையை எடுத்து, முதல் மற்றும் இரண்டாவது அட்டையிலுள்ள பாகங்களின் பெயர்களைக் கூறச் சொல்லவும்.
- அதே போல் அனைத்து மாணவர்களையும் அட்டைகளை ஒவ்வொன்றாக எடுக்கச் செய்து, முந்தைய அட்டைகள் மற்றும் தாம் எடுத்த அட்டையிலுள்ள பெயர்கள் அனைத்தையும் கூறச் செய்வதன் மூலம் நினைவாற்றலைப் பெருக்கலாம்.
விளையாடுவோமோ!
பெரிது - சிறிது
(ஆசிரியர் எல்லாக் குழந்தைகளுக்கும் பலூன்களைக் கொடுக்கிறார்)
ஆசிரியர் : பலூனில் காற்றை ஊது. பலூன் என்ன ஆகிறது?
மாணவர்கள் : அது பெரிதாகி விட்டது.
ஆசிரியர் : இதுபோல, நாம் சுவாசிக்கும்போது காற்றை உள்ளிழுப்பதால் நுரையீரல் பெரியதாகும். சரி. பலூனிலிருந்து காற்றை வெளியே விட்டுவிட்டால் என்ன நடக்கும்?
மாணவர்கள் : பலூன் சிறியதாக மாறும்,
ஆசிரியர் : ஆமாம். இதே போல, சுவாசத்தின்போது காற்றை நாம் வெளியிடுவதால், நுரையீரல் சிறியதாக மாறிவிடும்.
நுரையீரல்கள் நமது மார்பின் உள்ளே இரண்டு பலூன்களைப் போல செயல்படுகின்றன. சுவாசித்தலில் காற்றை நாம் உள்ளிழுக்கும் போது நுரையீரல்கள் காற்றால் நிரம்புவதால் பெரியதாக மாறுகின்றன. மூச்சை வெளியே விடும்போது நுரையீரலிலிருந்து காற்று வெளியே தள்ளப்படுவதால் அவை சிறிதாக மாறும்.
மேலும் அறிந்து கொள்வோம்
இதயம் ஒரு நிமிடத்திற்கு சரசரியாக 72 முறை துடிக்கிறது.
தயாரிப்போமா!
இதயத்துடிப்புமானி (ஸ்டெதாஸ்கோப்)
நமக்குத் தேவையானவை: நெகிழ்வான ரப்பர் குழாய், இரண்டு சிறிய புனல்கள், ஒட்டு நாடா, நடுத்தர அளவு பலூன் மற்றும் கத்தரிக்கோல்.
தயாரிக்கும் முறை:
- நெகிழ்வுக் குழாயின் இரு முனைகளிலும் புனல்களின் சிறிய முனையை இறுக்கமாகச் செருகவும்.
- ஒட்டு நாடாவைப் பயன்படுத்தி, புனல்களை ஒட்டவும்.
- பலூனை ஊதி விரிவடையச் செய்யவும்.
- காற்றை வெளியேற்றி பலூனின் வாய்ப்பகுதியை வெட்டி விடவும்.
- பலூனின் எஞ்சிய பகுதியை புனலின் திறந்த முனையில் இறுக்கமாகக் கட்டி, அவ்விடத்தை ஒட்டு நாடாவால் ஒட்டவும்.
- உனது இதயத்தின் மீது இதயத்துடிப்பு மானியில் உள்ள ஒரு புனல் முனையை வைத்து, மற்றொரு புனல் முனையை உனது காதுக்கு அருகில் வைக்கவும்.
- தற்போது இதயத்தின் ஒலியை உன்னால் கேட்க முடிகிறதா?
omtexclasses.com | omtex.co.in