4th Science Term 1 Unit 3 Work and Energy Questions Answers

4th Science Term 1 Unit 3 Work and Energy Questions and Answers

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : வேலை மற்றும் ஆற்றல்

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடப் பகுதி: மதிப்பீடு, சரியான விடையைத் தேர்ந்தெடு, கோடிட்ட இடத்தை நிரப்புக, சரியா அல்லது தவறா எனக் கூறுக, பொருந்தாத ஒன்றை வட்டமிடு, பொருத்துக, சுருக்கமாக விடையளி, விரிவாக விடையளி, உயர் சிந்தனை வினாக்கள்.

அ. சரியான சொல்லைப் பயன்படுத்தி, கோடிட்ட இடங்களை நிரப்புக.

(சரிவுப்பாதை, எளிய இயந்திரங்கள், வேலை, ஆற்றல், கப்பி)
1. ஒரு விசை செயல்படும்போது செய்யப்பட வேண்டியது ---------- ஆகும்.
விடை : வேலை
2. வேலை செய்யத் தேவைப்படும் திறன் என்பது -------------
விடை : ஆற்றல்
3. இயந்திரம் சக்கரம் மற்றும் கயிற்றால் ஆனது.
விடை : கப்பி
4. வேலையை எளிதாக்க உதவுகிறது.
விடை : எளிய இயந்திரம்
5. சாய்தளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
விடை : சரிவுப் பாதை

ஆ. எழுத்துகளை மாற்றியமைத்து, கருவிகளின் பெயர்களைக் கண்டுபிடி.

Scrambled Words Activity

இ. பொருத்துக

1. இரண்டாம் வகை நெம்புகோல் – நீர் இறைத்தல்

2. கப்பி – மிதிவண்டி

3. முதல் வகை நெம்புகோல் – கொட்டை உடைப்பான் .

4. சக்கரம் மற்றும் அச்சு – காற்று

5. புதுப்பிக்க இயலும் வளம் – சாய்ந்தாடி


விடை :

1. இரண்டாம் வகை நெம்புகோல் – கொட்டை உடைப்பான்

2. கப்பி – நீர் இறைத்தல்

3. முதல் வகை நெம்புகோல் – சாய்ந்தாடி

4. சக்கரம் மற்றும் அச்சு – மிதிவண்டி

5. புதுப்பிக்க இயலும் வளம் – காற்று

ஈ. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வகைப்படுத்துக.

Classify the Objects

உ. வினாக்களுக்கு விடையளி.

1. ஆற்றலின் அலகு யாது?
விடை: ஆற்றலின் அலகு ஜுல் ஆகும்.
2. எளிய இயந்திரங்கள் சிலவற்றைக் கூறு.
விடை: கப்பி, ஆப்பு, சாய்தளம், திருகு, நெம்புகோல், சக்கரம் மற்றும் அச்சு ஆகியவை எளிய இயந்திரங்கள் ஆகும்.
3. முதல் வகை நெம்புகோல் என்றால் என்ன?
விடை: ஆதராப் புள்ளி திறனுக்கும் பளுவுக்கும் இடையில் உள்ளது. முதல் வகை நெம்புகோல் ஆகும்.
4. எலுமிச்சை சாறுபிழியும் கருவி எந்த வகை நெம்புகோலைச் சார்ந்தது? ஏன்?
விடை: எலுமிச்சை சாறுபிழியும் கருவி இரண்டாம் வகை நெம்புகோல் ஆகும். இங்கு பளு (எலுமிச்சை), திறனுக்கும் ஆதாரப் புள்ளிக்கும் இடையில் உள்ளது.
5. வேலை வரையறு.
விடை: ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு அப்பொருள் நகரும் செயல் வேலை எனப்படும்.
6. எவையேனும் மூன்று வகையான ஆற்றலை எழுதுக.
விடை: மின் ஆற்றல், வெப்ப ஆற்றல், வேதி ஆற்றல்