4th Science Term 3 Unit 3 Air We Breathe Questions and Answers

4th Science Term 3 Unit 3 Air We Breathe

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : நாம் சுவாசிக்கும் காற்று

4th Science : Term 3 Unit 3 : Air We Breathe | Questions and Answers

பாடம் உள்ளடக்கம்: புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், மதிப்பீடு, சரியான விடையைத் தேர்ந்தெடு, கோடிட்ட இடத்தை நிரப்புக, சரியா அல்லது தவறா எனக் கூறுக, பொருந்தாத ஒன்றை வட்டமிடு, பொருத்துக, சுருக்கமாக விடையளி, விரிவாக விடையளி, உயர் சிந்தனை வினாக்கள்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. காற்று ஒரு ---------------
(அ) கலவை
(ஆ) சேர்மம்
(இ) கூட்டு
[விடை : (அ) கலவை]
2. காற்றில் ஆக்சிஜன் ----------- சதவீதம் உள்ளது.
(அ) 21
(ஆ) 78
(இ) 1
[விடை : (அ) 21]
3. சில தாவரங்களின் வேர் முடிச்சுகளில் --------- உள்ளது.
(அ) ஆக்சிஜன்
(ஆ) நைட்ரஜன்
(இ) நியான்
[விடை : (ஆ) நைட்ரஜன்]
4. காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம்
(அ) கழிவு
(ஆ) புகை
(இ) நீராவி
[விடை : (ஆ) புகை]

II. நான் யார்?

(மிதிவண்டி, கார்பன் டைஆக்சைடு, காற்று, மரம்)

1. நான் வாயுக்களின் கலவை.
விடை : காற்று
2. நான் உங்களுக்கு ஆக்சிஜனைத் தருகிறேன்.
விடை : மரம்
3. நான் எரிவதற்கு உதவி செய்பவன் அல்ல.
விடை : கார்பன் டைஆக்சைடு
4. என் மீது சவாரி செய்வதன் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம்.
விடை : மிதிவண்டி

III. சரியா தவறா என எழுதுக

1. தாவரங்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன் தேவை.
[சரி]
2. காற்றில் ஆக்சிஜன் வாயு மட்டுமே உள்ளது.
[தவறு]
3. பொருள்களை எரிக்க ஆர்கான் வாயு பயன்படுகிறது.
[தவறு]
4. கார்பனேற்றப்பட்ட குளிர் பானங்கள் உடல் நலத்திற்குத் தீங்கானவை.
[சரி]

IV. பொருத்துக

கேள்விகள்

1. நைட்ரஜன்

2. பலூன்

3. புகை

4. நுரையீரல்

சாத்தியமான விடைகள் (மாற்றி அமைக்கப்பட்டுள்ளது)

– காற்று மாசுபாடு

– புகை மற்றும் மூடுபனி

– 78%

– காற்று

சரியான விடை:

1. நைட்ரஜன் – 78%
2. பலூன் – காற்று
3. புகை – காற்று மாசுபாடு
4. நுரையீரல் – புகை மற்றும் மூடுபனி

V. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. காற்று என்பது பல -------- கலவையாகும்.
விடை : வாயுக்களின்
2. காற்றில் ------------ % அளவு கார்பன் டைஆக்சைடு உள்ளது.
விடை : 0.04%
3. நாம் ---------------- வாயுவை உள்ளிழுக்கிறோம்.
விடை : ஆக்ஸிஜன்
4. ------------- வாயு தீ அணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.
விடை : கார்பன் டை ஆக்சைடு

VI. சுருக்கமாக விடையளி

1. நமது அன்றாட வாழ்வில் காற்றின் முக்கியத்துவம் என்ன?
விடை:
மழையை உருவாக்குவதற்கும், பயிர்களின் வளர்ச்சிக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசிப்பதற்கும் காற்று அவசியமானது.
2. காற்றின் கூறுகள் யாவை?
விடை:
ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஆர்கான், கார்பன் டை ஆக்சைடு, நீராவி
3. காற்று மாசுபடுவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:
உலக வெப்பமயமாதல், பனிப்புகை உருவாக்கம், அமில மழை உருவாக்கம், ஏரோசால் உருவாக்கம், ஓசோன் குறைதல்.
4. ஆக்சிஜனின் பயன்கள் யாவை?
விடை:
சுவாசித்தல், எரிதல், உலோகங்களை உருக்கி இணைத்தல் ஆகியவை ஆக்ஸிஜனின் பயன்கள் ஆகும்.

VII. விரிவாக விடையளி

1. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வழிமுறைகள் யாவை?
விடை:
● காற்று ஆற்றல் ஆதாரத்தை (எ.கா. சூரிய ஆற்றல்) பயன்படுத்த வேண்டும்.
● தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் காற்றில் கலப்பதைத் தடுக்க காற்று வடிகட்டிகளை பயன்படுத்தவேண்டும்.
● மோட்டார் வாகனங்களின் சான்றிதழ் மற்றும் புகை உமிழ்வு சோதனையினை செயல்படுத்தப்பட வேண்டும்.
● கார்பன் டைஆக்சைடை உறிஞ்சுவதற்கு அதிகமான மரங்களை நட்வேண்டும்.
2. காற்று மாசுபடுவதால் ஏற்படும் நோய்கள் யாவை?
விடை:
● சுவாச நோய்கள். எ.கா. காய்ச்சல், காசநோய்
● இருதய இரத்தநாள பாதிப்பு
● சோர்வு, தலைவலி மற்றும் பதட்டம்
● நரம்பு மண்டல பாதிப்பு
3. கார்பன் டைஆக்சைடின் பயன்களை எழுதுக.
விடை:
● ஒளிச்சேர்க்கையில் பயன்படுகிறது.
● தீ அணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.
● குளிர்சாதனப் பெட்டிகளில் உலர் பனிக்கட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.
● நெகிழி மற்றும் பலபடிமம் (Polymer) தயாரிக்கப் பயன்படுகிறது.

செய்து மகிழ்வோம்

காலியான நெகிழி தண்ணீர்ப்பாட்டிலின் மூடியில் ஒரு சிறு துளையிட்டு, அம்மூடியால் பாட்டிலை இறுக்கமாக மூடவும். அம்மூடி உங்கள் முகத்தின் அருகே இருக்கும் வகையில் வைத்து பாட்டிலின் மையத்தில் உங்கள் கையால் அழுத்தவும். நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?

Activity Image
விடை: காற்று வேகமாக வெளிவருவதை உணரமுடியும்.

முயல்வோம்

காற்று / வாயு உள்ள பொருள்களை (✔) குறியிடுக.

Check Items Activity

முயல்வோம்

எவற்றிலிருந்து நீராவி வெளிவரும்? (✔) குறியிடுக.

Steam Activity

நிரப்புவோம்

காற்றில் இருக்கும் வாயுக்களின் சதவீதத்தை எழுதுக.

Air Composition Chart

விவாதிப்போம்

சில பல்பொருள் அங்காடிகளில், நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பல வண்ணங்கள் கொண்ட பெரிய பலூன்கள் பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் நைட்ரஜன் வாயுவை நிரப்புவதற்கான காரணத்தை உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடுக.

விடை: நைட்ரஜன், காற்றை விட சிறிது லேசான, மந்தமான வாயுவாகும். எனவே பலூன் அதிக உயரத்தில் பறக்கத் தேவையில்லாதபோது நைட்ரஜன் அதில் பயன்படுத்தப்படுகிறது.

முயல்வோம்

பின்வருவனவற்றை வகைப்படுத்துக. (நாய், பூனை, தென்னை மரம், குரங்கு, கத்திரிக்காய் செடி, பப்பாளி செடி)

Classification Activity

செயல்பாடு

உங்கள் வீடு / பள்ளியின் ஜன்னல் வழியாக நுழையும் சூரிய ஒளிக் கதிர்களைப் பாருங்கள். மிகச்சிறிய தூசித் துகள்கள் காற்றில் நகர்வதைப் பார்க்க முடியும். நாம் இதேபோல இருளில் மின் விளக்கு ஒளியின் உதவியுடன் இதைப் பார்க்க முடியும்.

Dust Activity

முயல்வோம்

புவி வெப்பமயமாதலுக்குக் காரணமானவற்றை (✔) குறிப்பிடுக.

Global Warming Activity

முயல்வோம்

Try This Image

● அருகிலுள்ள இடங்களுக்கு நடந்தோ மிதிவண்டியிலோ செல்லுங்கள்.

● அதிக மரக்கன்றுகளை நட முயற்சி செய்யுங்கள்.

செயல்பாடு

காற்று மாசுபாட்டின் விளைவுகள் குறித்த விளம்பர சொற்றொடர்களை எழுதி காட்சிக்கு ஒட்டவும்.

Slogan Activity
விடை:
1. உலகனைத்திற்கும் ஒரு தாய் மடியாம் புவி இயற்கையை காப்போம்.
2. மரத்தின் சேவை நமக்கு தேவை.
3. இன்று காற்று மாசுபாடு நாளை நுரையீரல் அழிபாடு.
4. மரம் வளர்ப்போம் தூய காற்று சுவாசிப்போம்.