4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4
அளவைகள் (Measurements)
சென்டிமீட்டருக்கும் மில்லிமீட்டருக்கும் இடையேயான தொடர்பு
மாணவர்கள் தங்கள்:
i. காலணி அளவைக் கண்டறிய பாத அளவை அளந்து பார்க்கவும்.
ii. சட்டையின் கை அளவையும் அளந்து பார்க்கவும்.
iii. சட்டையின் அகலத்தையும் அளந்து பார்க்கவும்.
கவிதாவும் அவளது தோழிகளும்
கவிதாவும் அவள் தோழிகளும் திருவிழாவிற்குச் சென்றனர். அங்குள்ள கடைகளில் பல பொருள்களை வாங்கினர். வீடு திரும்பியதும் அப்பொருள்களைப் பற்றி உரையாடினர்.
கவிதா : நான் ஒரு புல்லாங்குழல் வாங்கினேன். மாலா, நீ என்ன வாங்கினாய்?
மாலா : நான் ஒரு மட்டைப்பந்து வாங்கினேன். மேரி நீ வாங்கிய பொம்மைகளைக் காட்டு.
மேரி : நான் ஒரு தொடர்வண்டி பொம்மை வாங்கினேன்.
சர்மிளா : நான் ஒரு அழகான மகிழுந்து பொம்மை வாங்கினேன்.
பானு : எனக்குப் பிடித்தமான சரக்குந்து பொம்மை மிகவும் அழகாக உள்ளது.
கவிதா : எல்லா பொம்மைகளும் ரொம்ப அழகு! நாம் வாங்கிய பொம்மைகளை அளந்து அவற்றில் எது மிக நீளமானது எனக் கண்டறிவோம்.
அளவிடும் செயல்பாடு
கவிதா தன்னுடைய புல்லாங்குழலை அளக்கிறார்.
மாலா தன்னுடைய மட்டைப் பந்தை அளக்கிறார்.
மேரி தன்னுடைய தொடர்வண்டி பொம்மையை அளக்கிறார்.
சர்மிளா தன்னுடைய மகிழுந்தை அளக்கிறார்.
பானு சரக்குந்தை அளக்கிறார்.
கொடுக்கப்பட்ட பொருள்களின் முனை வரை அளவுகோலைக் கொண்டு அளக்க முடியுமா?
அளவைகள் விளக்கம்
சென்டிமீட்டர் என்பதை "செ.மீ" என சுருக்கமாக எழுதலாம். நாம் அளவுகோலைக் கொண்டு சிறிய அளவுகளை அளக்கலாம். விளையாட்டுத் திடல் வகுப்பறையின் உயரம், ஆகியவற்றை அளவுநாடா கொண்டு அளந்து அறியலாம்.
சிந்திக்க: விழுப்புரத்திற்கும் கடலூருக்கும் இடைப்பட்ட தொலைவை நீ எப்படி அளப்பாய்?
குழந்தைகளைக் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் நீளங்களை அளக்கச் செய்து அளவுகளை கண்டறியச் செய்யலாம்.
அ) கரும்பலகை : 7 மீ
ஆ) அலமாரி : 3 மீ 3 செ.மீ
இ) மேசை : 6 மீ 15 செ.மீ
ஈ) அகராதி : 4 மீ
உ) உலக வரைபடம் : 1 செ.மீ
ஆசிரியர் குழந்தைகளுக்கு அளவுகோலை சரியாகப் பயன்படுத்த உதவலாம்.
கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அளந்து அட்டவணையை நிறைவு செய்க.