4th Standard Maths Term 2 Unit 5 Fractions - Defining Fractions

4th Maths Term 2 Unit 5 Fractions

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள்

பின்னங்களை வரையறை செய்தல்

வரையறை: பின்னம் என்பது ஒரு முழுமையில் எத்தனை பகுதி (அ) பகுதிகளைப் பெற்றிருக்கிறது என்பதாகும்.

பின்னம் = தொகுதி / பகுதி

சுவாதி நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். மாநில அளவில் நடத்த சதுரங்க போட்டியில் வெற்றிபெற்றதை முன்னிட்டு அவளது வகுப்பு ஆசிரியர் ஒரு கேக்கை (cake) வாங்கி வந்து வெட்டச் செய்தார். அவளுடைய வகுப்பில் மொத்தம் 19 மாணவர்கள் உள்ளனர். ஆசிரியரோடு சேர்த்து மொத்தம் 20 பேர்.

இங்குக் கேக் என்பது முழுமை பகுதியாகும். சுவாதி இதனை 20 சம பகுதிகளாகப் பிரித்தால் அனைவருக்கும் ஒவ்வொரு துண்டு கிடைக்கும்.

ஒரு மாணவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு துண்டு என்பது 20 இல் ஒன்று ஆகும்.

இதனை 1/20 Fraction என எழுதலாம்.

Example ஐப் போல எண்கள் இருந்தால், அதனை பின்னம் என்று அழைப்போம்.

1/20 components இல் 1 என்பது தொகுதி, 20 என்பது பகுதியாகும். தொகுதியும் பகுதியும் இணைந்த ஒரு கலவையான எண்ணைப் பின்னம் என அழைக்கலாம்.

பின்னம் என்பது ஒரு முழுமையில் எத்தனை பகுதி (அ) பகுதிகளைப் பெற்றிருக்கிறது என்பதாகும்.

பின்னம் = தொகுதி / பகுதி

Fraction Components Diagram

பின்வருவனவற்றை உற்று நோக்குக:

Circle divided into 4 parts

ஒரு வட்டமானது நான்கு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு சம பாகங்களில் ஒரு பாகம் நிழிலிடப்பட்டுள்ளது. நிழலிடப்பட்ட பாகத்தினை பின்னம் 1/4 அல்லது நான்கில் ஒரு பாகம் என்று கூறலாம்.


வரையறை: முழுமையைப் பிரித்தல்:

Visual for 1/2

ஒரு முழுப் பகுதியானது இரு சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இந்த இருபகுதிகளில் ஒரு பகுதியானது நிழலிடப்பட்ட அல்லது வண்ணமிடப்பட்ட பகுதியாகும். நிழலிடப்பட்ட பகுதியின் பின்னம் = 1/2 (அரை).


Visual for 2/3

முழுப் பகுதியும் மூன்று சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் இரண்டு பகுதிகள் நிழலிடப்பட்டிருந்தன. நிழலிடப்பட்ட பகுதியின் பின்னம் - 2/3 (மூன்றில் இரண்டு).


Visual for 3/8

முழுப் பகுதியும் எட்டுச் சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் மூன்று பகுதிகள் நிழலிடப்பட்டிருந்தன. நிழலிடப்பட்ட பகுதியின் பின்னம் 3/8 (எட்டில் மூன்று)

Visual for 3/8 large

முழுப் பகுதியும் எட்டுச் சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் மூன்று பகுதிகள் நிழலிடப்பட்டிருந்தன. நிழலிடப்பட்ட பகுதியின் பின்னம் 2/4 (நான்கில் இரண்டு)

Fraction list போன்றவை பின்னங்களுக்குச் சில எடுத்துக்காட்டுகளாகும்.