4th Standard Science Term 1 Unit 2 Matter and Materials Questions with Answers

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 2 : பருப்பொருள் மற்றும் பொருள்கள்

4th Science : Term 1 Unit 2

பருப்பொருள் மற்றும் பொருள்கள்

கேள்விகள் மற்றும் பதில்கள் (Questions and Answers)

மதிப்பீடு

பொருந்தாததைக் கண்டுபிடி
  1. 1. செங்கல், கயிறு, பட்டுத் துணி, அன்னாசிப்பழம்
    விடை : அன்னாசிப்பழம்
  2. 2. கல், இரப்பர் வளையம், சைக்கிள் டியூப், மின் கம்பி
    விடை : கல்
  3. 3. சூரியன், மெழுகுவத்தி, டார்ச், பேனா
    விடை : பேனா
  4. 4. குடை, நீர்புகா மேலாடை, இறுக்கமான சட்டை (ஜெர்கின்), ஸ்பாஞ்ச்
    விடை : ஸ்பாஞ்ச்
  5. 5. கண்ணாடிப் புட்டி, தேர்வு அட்டை, காகிதத் தட்டு, மரப்பலகை
    விடை : கண்ணாடிப் புட்டி
கோடிட்ட இடத்தை நிரப்புக
  1. 1. எளிதில் அழுத்தப்படக்கூடிய அல்லது வெட்டப்படக்கூடிய பொருள்கள் ___________ பொருள்கள் எனப்படும்.
    விடை : மென்மையான
  2. 2. தங்கமும் வைரமும் __________ பொருளுக்கான எடுத்துக்காட்டுகள்.
    விடை : பளப்பளப்பான
  3. 3. எளிதாக வளைக்கப்படக்கூடிய, நீட்டப்படக்கூடிய பொருள்கள் __________ பொருள்கள் எனப்படும்.
    விடை : நெகிழ்வுத்தன்மை உள்ள
  4. 4. ________ பொருள்கள் ஒளியை முழுமையாகத் தம் வழியே கடந்து செல்ல அனுமதிக்கின்றன.
    விடை : ஒளிபுகும்
  5. 5. ________ பொருள்களைத் தெளிவாகப் பார்க்க உதவும் இயற்கை மூலம் ஆகும்.
    விடை : ஒளி
பொருத்துக
வினா
  1. ஒளி மூலம் – கண்ணாடி
  2. நீர்புகாத் தன்மை – தாவர எண்ணெய்
  3. ஒளி ஊடுருவுதல் – சூரியன்
  4. ஒளிகசியும் – உலோகம்
  5. ஒளிபுகா – நீர்புகா மேலாடை
விடை
  1. ஒளி மூலம் – சூரியன்
  2. நீர்புகாத் தன்மை – நீர்புகா மேலாடை
  3. ஒளி ஊடுருவுதல் – கண்ணாடி
  4. ஒளிகசியும் – தாவர எண்ணெய்
  5. ஒளிபுகா – உலோகம்
சரியா? தவறா? என எழுதுக
  1. 1. சொரசொரப்பான பொருள்களை எளிதாக நம்மால் அழுத்தவோ, வெட்டவோ, வளைக்கவோ முடியாது.
    விடை : சரி
  2. 2. மங்கலான பொருள்கள் ஒளியைப் பிரதிபலிக்கின்றன.
    விடை : தவறு
  3. 3. உப்புத்தாள் மென்மையான பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
    விடை : தவறு
  4. 4. ஒளிபுகாப் பொருள்கள் ஒளியை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை.
    விடை : சரி
  5. 5. கண்ணாடிகள் அவற்றின் மீது விழும் ஒளியின் திசையை மாற்றிவிடுகின்றன.
    விடை : சரி
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க
1. ஒரு பொருள் நீர்புகாத் தன்மை உடையது என்று எப்பொழுது கூற முடியும்?
விடை :
நீரைத் தன்னுள் ஊடுருவிச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் நீர்புகாப் பொருள்கள் எனப்படும்.
எ.கா: நீர்புகா மேலாடை, அலுமினியத் தகடு, மாத்திரை அட்டை.
2. ஒளி மூலம் என்றால் என்ன?
விடை :
ஒளியைக் கொடுக்கும் பொருள்கள் ஒளி மூலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
3. ஒளிபுகும் மற்றும் ஒளிபுகாப் பொருள்களுக்கு இடையேயான வேறுபாடு யாது?
விடை :
ஒளிபுகும் பொருள்கள்: தம் வழியே ஒளியை முழுமையாக ஊடுருவ அனுமதிக்கும் பொருள்கள் ஒளிபுகும் பொருள்கள் எனப்படும். எனவே, இவற்றின் வழியே மறுபக்கம் உள்ள பொருள்களையும் தெளிவாக நாம் பார்க்க முடியும்.
எ.கா: காற்று, கண்ணாடி, தூய நீர்.

ஒளிபுகாப் பொருள்கள்: தம் வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் ஒளிபுகாப் பொருள்கள் எனப்படும். எனவே இதனால் அதன் மறுபக்கம் உள்ள பொருள்களை நம்மால் பார்க்க முடியாது.
எ.கா: மரம், கல், உலோகங்கள்.
4. ஒளி எதிரொளிப்பு வரையறு.
விடை :
ஒளியானது பளபளப்பான பரப்பின் மீது பட்டுத் திருப்பி அனுப்பப்படுவதையே ஒளி எதிரொளிப்பு என்கிறோம்.
5. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களுள் எவை ஒளிபுகும், ஒளி கசியும் அல்லது ஒளிபுகாப் பொருள்கள் என வகைப்படுத்துக.

(காற்று, பாறை, நீர், அலுமினியத்தகடு, கண்ணாடி, பனி, மரப்பலகை, பாலிதீன் பை, குறுந்தகடு, எண்ணெயில் நனைத்த காகிதம், கண்ணாடிக் குவளை மற்றும் நிறக் கண்ணாடி)

Classification of Materials Answer Key
செயல்திட்டம்

உனது சுற்றுப்புறத்திலிருந்து சொரசொரப்பான மற்றும் வழவழப்பான பொருள்களைச் சேகரிக்கவும்.

பதிலளிப்போமோ!

கீழ்க்காணும் பொருள்கள் எவற்றால் ஆனவை எனக் கண்டறிந்து எழுதுக.

(காகிதம், களிமண், கண்ணாடி, மரம், நெகிழி, உலோகம், இரப்பர், மெழுகு)

Materials Identification
பதிலளிப்போமோ!

ஒரே வித பொருளால் தயாரிக்கப்பட்ட பொருள்களை இணைக்க.

Matching Same Materials
பதிலளிப்போமா!

கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் கடினமானவையா, மென்மையானவையா என எழுதுக.

Hard vs Soft Objects
பதிலளிப்போமோ!

கொடுக்கப்பட்ட பொருள்களை சொரசொரப்பானவை அல்லது வழவழப்பானவை என வகைப்படுத்துக.

Rough vs Smooth Objects
செயல்பாடு: நெகிழ்வுத் தன்மையைச் சோதித்தல்

மாணவர்களிடம் ஒரு நெகிழி அளவுகோல் மற்றும் மர அளவுகோலைக் கொடுத்து அவற்றை வளைத்துப் பார்த்து உற்றுநோக்கியதை அட்டவணைப்படுத்தச் செய்க.
(வளைகிறது. வளையவில்லை)

Flexibility Test
சிந்தித்து விடையளிக்க

உங்களிடம் நீர்புகா மேலாடை உள்ளதா? அதன் பயன் என்ன?

Raincoat
செயல்பாடு: மிதக்குமா? மூழ்குமா?

ஒரு கண்ணாடிக் கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் முக்கால் பங்கு அளவிற்கு நீரை நிரப்பவும். அதில் ஓர் ஆரஞ்சுப்பழத்தை தோலுடனும் மற்றொன்றைத் தோல் இல்லாமலும் போடவும். அவற்றுள் எந்த ஆரஞ்சுப் பழம் மிதக்கிறது என்பதை உற்றுநோக்கி அதற்கான காரணத்தைக் கூறு.

விடை:
தோலுள்ள ஆரஞ்சுப்பழம் மிதக்கிறது. ஏனெனில் ஆரஞ்சுத் தோல் நீர் புகாப் பொருளாகும். தோல் இல்லாத பழத்திற்குள் நீர் புகுவதால் அது மூழ்கி விடுகிறது.
சிந்தித்து விடையளிக்க

கண்ணாடிக்குப் (ஒளிபுகும் பொருள்) பதிலாகச் செங்கல் (ஒளிபுகாப் பொருள்) கொண்டு வீட்டின் சுவர்களை ஏன் கட்ட வேண்டும்?

செயல்பாடு: பணித்தாள்

வாக்கியத்தை உங்கள் சொந்த சொற்களைக் கொண்டு பூர்த்தி செய்க.

  1. 1. ஒளிபுகும் பொருள்கள் ஒளியை தன் வழியே ஒளியை முழுமையாக ஊடுருவ அனுமதிக்கும்.
  2. 2. ஒளிகசியும் பொருள்கள் ஒளியை தன் வழியே சிறிதளவு ஒளியைமட்டும் கடந்து செல்ல அனுமதிக்கும்.
  3. 3. ஒளிபுகாப் பொருள்கள் ஒளியை தன் வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்காது.
பதிலளிப்போமா!

பின்வரும் பொருள்களுள் எவையெவை ஒளிபுகும், ஒளி கசியும் அல்லது ஒளிபுகாத் தன்மை கொண்டவை என்பதை எழுதுக.

Light Transmission Worksheet
பதிலளிப்போமா!

கண்ணாடி, தேர்வு அட்டை, மேசையின் மேற்பகுதி, ஒரு தட்டில் உள்ள தண்ணீர் போன்ற சில பொருள்கள் மீது உங்கள் முகத்தைப் பார்க்க முயற்சிக்கவும். உங்கள் முகத்தைத் தெளிவாகக் காட்டும் பொருள்கள் எவை? அது ஏன் என உங்களுக்குத் தெரியுமா?

விடை:
கண்ணாடி என் முகத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. ஏனெனில் கண்ணாடியில் ஒளி முழுமையாக எதிரொளிப்பு அடைகிறது.
செயல்பாடு: ஒளி எதிரொளிப்பு

தேவையான பொருள்கள்: முகம் பார்க்கும் கண்ணாடி மற்றும் டார்ச் விளக்கு

செய்முறை:

  1. ஓர் அறையின் கதவு மற்றும் சாளரங்களை மூடி இருட்டாக்கவும்.
  2. உன் நண்பனிடம் கையில் ஒரு கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு அறையின் ஒரு மூலையில் நிற்கச் சொல்லவும்.
  3. அறையின் மற்றொரு மூலையில் கையில் டார்ச் விளக்குடன் நீ நிற்கவும்.
  4. இப்போது டார்ச் விளக்கை ஒளிரச் செய்யவும்.
  5. டார்ச் வெளிச்சத்தைக் கண்ணாடியின் மீது நேரடியாகப் படுமாறு செய்யவும். என்ன நிகழ்கிறது?
Light Reflection Activity

6. உனது உற்றுநோக்கலிலிருந்து பின்வருவனவற்றிற்கு பதிலளிக்கவும்.

அ) நீங்கள் கண்ணாடியின் கோணத்தை மாற்றும்போது ஒளியில் என்ன மாற்றம் நிகழ்கிறது?
விடை:
கண்ணாடியின் கோணத்தை மாற்றும் போது எதிரொளிக்கும் ஒளியின் கோணமும் மாறுகிறது.
ஆ) கண்ணாடியின் மூலம் எதிரொளிக்கப்பட்ட ஒளியின் திசையை மாற்ற இயலுமா?
விடை:
ஆம். கண்ணாடியின் மூலம் எதிரொளிக்கப்பட்ட ஒளியின் திசையை மாற்ற இயலும்.
மேலும் தெரிந்து கொள்வோமா!

ஆடிகளால் ஒலி அலைகளையும் பிரதிபலிக்க முடியும். எனவேதான் எதிரி விமானத்திலிருந்து வரும் ஒலிகளைக் கண்டறிய இரண்டாம் உலகப் போரின்போது இவை பயன்படுத்தப்பட்டன.