4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2
விலங்குகளின் வாழ்க்கை
கேள்விகள் மற்றும் பதில்கள் | மதிப்பீடு
I. நான் யார்?
1. எனது குழு காலனி என்று அழைக்கப்படுகிறது.
விடை: எறும்பு
2. எங்களின் வீடு கூடாகும்.
விடை : பறவை
3. மணலில் நடப்பதற்காக என் கால் பாதங்கள் அகலமாக உள்ளன.
விடை : ஒட்டகம்
4. எனது பாதையில் உள்ள பொருள்களைக் கண்டுபிடிக்க மீயொலியைப் பயன்படுத்துவேன்.
விடை : வௌவால்
5. நான் பகலிலும், இரவிலும் சுறுசுறுப்பாக இருப்பேன்.
விடை : சிங்கம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்குகளை ----------- என்று அழைப்பர்.
விடை : இரவில் இரைதேடும் விலங்குகள்
2. ----------- பெற்றோர் பராமரிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
விடை : கங்காரு
3. ஆந்தைகளின் குழு -------- எனப்படும்.
விடை : கூட்டம்
4. -------- தேன் கூட்டில் வாழ்கின்றன.
விடை : தேனீக்கள்
5. --------------- நம் இரத்தத்தை உறிஞ்சும்.
விடை : கொசு
III. பொருத்துக
கேள்விகள் (Questions)
(1) இறக்கையற்ற பூச்சி – நுகர்தல்
(2) யானை – செவுள்கள்
(3) ஒட்டகச்சிவிங்கி – மந்தை
(4) எறும்புகள் – நீண்ட கழுத்து
(5) மீன் – புத்தகப்பூச்சி
விடைகள் (Answers):
(1) இறக்கையற்ற பூச்சி – புத்தகப்பூச்சி
(2) யானை – மந்தை
(3) ஒட்டகச்சிவிங்கி – நீண்ட கழுத்து
(4) எறும்புகள் – நுகர்தல்
(5) மீன் – செவுள்கள்
IV. பின்வரும் கேள்விகளுக்குச் சுருக்கமாகப் பதிலளிக்க
1. பறவைகள் ஏன் கூடுகளைக் கட்டுகின்றன?
பறவைகள் தம் இளம் பறவைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு கூடுகளை கட்டுகின்றன
2. உடல் தகவமைப்பு என்றால் என்ன?
வாழ்விடத்திற்கு ஏற்ப விலங்குகளின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் உடல் தகவமைப்பு எனப்படும்.
3. எதிரொலித்து இடமறிதல் - வரையறு.
வௌவால் இரவில் தங்கள் வழியைக் கண்டுபிடிப்பதற்கும், அவற்றின் பாதையில் உள்ள பொருள்களை தெரிந்து கொள்வதற்கும் மீயொலியை பயன்படுத்துகிறது. இதனையே நாம் எதிரொலித்து இடமாக்கல்’ என்கிறோம்.
4. எறும்புகள் அதிர்வுகளை எவ்வாறு உணர்கின்றன?
எறும்புகள் கால்களினால் தரையின் அதிர்வுகளை உணர்கின்றன.
5. குழுக்களாக வாழும் மூன்று விலங்குகளை எழுதுக.
யானைகள், மான்கள், வரிக்குதிரைகள்
6. பறவைகள் ஏன் 'V' வடிவத்தில் பறக்கின்றன?
காற்றின் எதிர்ப்பைக் குறைக்க பறவைகள் ‘V’ வடிவத்தில் பறக்கின்றன. பறவைகள் V’ வடிவத்தில் பறப்பதால் அவை அதிக அளவு ஆற்றலை சேமிக்கின்றன.
V. பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க
1. விலங்குகள் ஏன் குழுக்களாக வாழ்கின்றன?
உணவைத் தேடவும், வாழிடங்களை தேர்ந்தெடுக்கவும், தமது இனத்தைப் பாதுகாக்கவும் மற்றும் பேணுவதற்கும் விலங்குகள் சேர்ந்து வாழ்கின்றன.
2. பூச்சியின் மூன்று முக்கிய உடல் பகுதிகளை விளக்குக.
தலை : தலையில் காணக்கூடிய முக்கிய பாகங்கள் பெரிய கூட்டுக் கண்கள், உணர்வு நீட்சிகள் மற்றும் வாயுறுப்புகள் ஆகும்.
மார்புப் பகுதி : இது உடலின் நடுப் பகுதியை குறிப்பதாகும். இது மூன்று இணை கால்களையும் இரண்டு இணை இறக்கைகளையும் பெற்றுள்ளது.
வயிற்றுப் பகுதி : இது பூச்சிகளின் கடைசி உடற் பகுதியாகும். பெரும்பாலான பூச்சிகளின் வயிற்றுப் பகுதிகள் கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
மார்புப் பகுதி : இது உடலின் நடுப் பகுதியை குறிப்பதாகும். இது மூன்று இணை கால்களையும் இரண்டு இணை இறக்கைகளையும் பெற்றுள்ளது.
வயிற்றுப் பகுதி : இது பூச்சிகளின் கடைசி உடற் பகுதியாகும். பெரும்பாலான பூச்சிகளின் வயிற்றுப் பகுதிகள் கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
3. இரவில் இரைதேடும் விலங்குகள் பற்றி எழுதுக.
சில விலங்குகள் இரவில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன. இத்தகைய விலங்குகளை இரவில் இரைதேடும் விலங்குகள் என்று அழைக்கின்றார்கள். (எ.கா. ஆந்தை, வௌவால்). இரவில் இரைதேடும் விலங்குகள் பொதுவாக மிகவும் சிறந்த செவிப்புலன், நுகர்தல் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கண்பார்வை ஆகியவற்றைப் பெற்றுள்ளன.
முயல்வோம் (Let's Try)
விலங்குகளை அவற்றின் குழு நடத்தையுடன் பொருத்துக.
கீழ்க்கண்ட வினாக்களைப் படித்து ஏற்ற விடையைக் கண்டறிந்து எழுதுக. நான் யார்?
விடுபட்ட வார்த்தையை நிரப்புக.
பட்டாம்பூச்சி மற்ற பூச்சிகளைப் போல மூன்று உடல் பாகங்களைக் கொண்டுள்ளது. அவை தலை, மார்புப் மற்றும் வயிற்றுப் பகுதி ஆகும். பட்டாம்பூச்சியின் மார்புப் பகுதிபகுதியில் நான்கு இறக்கைகள் மற்றும் ஆறு கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி அதன் இரண்டு உணர் நீட்சிகளினால் நுகர்கின்றது.
கண்டறிவோம்
இரவில் நடமாடும் விலங்குகளை வட்டமிடு.
நிரப்புவோம்
விலங்குகளை உற்றுநோக்கி அவற்றின் செயல்களை எழுதுக