4th Standard Social Science Term 2 Unit 3 Transport Question and Answers

4th Social Science: Term 2 Unit 3 - Transport Questions and Answers

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 : அலகு 3 : போக்குவரத்து

புத்தக வினாக்கள் மற்றும் கேள்வி பதில்கள்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. பின்வருவனவற்றுள் நிலவழிப் போக்குவரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு எது?
  • அ) மகிழுந்து
  • ஆ) கப்பல்
  • இ) ஹெலிகாப்டர்
  • ஈ) விமானம்
விடை: அ) மகிழுந்து
2. --------------------- ஆம் ஆண்டு முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.
  • அ) 2019
  • ஆ) 1853
  • இ) 1947
  • ஈ) 1950
விடை: ஆ) 1853
3. தங்க நாற்கரச் சாலை, முக்கிய நகரங்களுள் ஒன்றான
  • அ) சென்னை
  • ஆ) கன்னியாகுமரி
  • இ) மதுரை
  • ஈ) திருச்சி
விடை: அ) சென்னை
4. -------------- பழமையான போக்குவரத்து வகையாகும்.
  • அ) கப்பல்
  • ஆ) மிதிவண்டி
  • இ) நடைப்பயணம்
  • ஈ) மாட்டு வண்டி
விடை: அ) கப்பல்
5. போக்குவரத்து வகைகள் --------------- ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  • அ) 3
  • ஆ) 4
  • இ) 5
  • ஈ) 6
விடை: ஆ) 4

II. பொருத்துக (பயிற்சி)

முதலில் சிந்தித்து பொருத்த முயலவும்:

பகுதி அ
பகுதி ஆ
1. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையம்
பேருந்து
2. முக்கியமான மக்கள் போக்குவரத்து
சென்னை
3. கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு வரை செல்லும் இரயில்
திருச்சிராப்பள்ளி
4. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கப்பல் துறைமுகம்
2015
5. சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு
ஹிம்சாகர் விரைவு ரயில்

சரியான விடை :

(i) தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையம் - திருச்சிராப்பள்ளி
(ii) முக்கியமான மக்கள் போக்குவரத்து - பேருந்து
(iii) கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு வரை செல்லும் இரயில் - ஹிம்சாகர் விரைவு ரயில்
(iv) தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கப்பல் துறைமுகம் – சென்னை
(v) சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு - 2015

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

1. மக்களுக்குப் போக்குவரத்து தேவையானது அல்ல. விடை : தவறு

2. துறைமுகங்கள் முக்கிய வர்த்தக மையங்களாக உள்ளன. விடை : சரி

3. நாட்டின் பல பகுதிகளை சாலைவழிப் போக்குவரத்து இணைக்கவில்லை. விடை : தவறு

4. சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகச் சிறியதாகும். விடை : தவறு

5. தமிழ்நாட்டில் ஐந்து பெரிய துறைமுகங்கள் உள்ளன. விடை : தவறு

IV. குறுகிய விடையளி.

1. போக்குவரத்து- வரையறு.
மனிதர்கள், விலங்குகள் மற்றும் பொருட்கள் முதலியன ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்வது போக்குவரத்து ஆகும்.
2. பல்வேறு போக்குவரத்து வகைகளைப் பட்டியலிடுக.
(i) சாலை வழி
(ii) இரயில் வழி
(iii) நீர் வழி
(iv) வான் வழி
3. இரயில் போக்குவரத்து விளக்கநாட்டிலிருங்கி செல்லும் நீ முச்சியமான இரண்டு இரயில் இணைப்புகளின் பெயர்களைக் கூறுக.

(குறிப்பு: இது மூல உரையில் உள்ளவாறு வழங்கப்பட்டுள்ளது)

4. இரயில் போக்குவரத்தை விவரி. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் மிக முக்கியமான இரண்டு இரயில் இணைப்புகளின் பெயர்களைக் கூறுக.
(i) இந்தியாவின் பல மாநிலங்களை இணைக்கும் போக்குவரத்து முறையில் இரயில் போக்குவரத்து மிக முக்கியமானதாகும்.
(ii) 1853ல் மும்பை மற்றும் தானே இடையே முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.
(iii) இரயில் போக்குவரத்து வளர்ச்சி இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.

தமிழக முக்கிய இரயில் இணைப்புகள் :
(i) சென்னை - மும்பை - சென்னை விரைவு வண்டி
(ii) சென்னை - புதுதில்லி - தமிழ்நாடு விரைவு வண்டி
5. வான்வழிப் போக்குவரத்து என்றால் என்ன? வான்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும்.
(i) வான்வழிப் போக்குவரத்து என்பது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு மிக விரைவாகப் பயணம் செய்ய உதவும் போக்குவரத்து முறையாகும்.
(ii) விமானங்கள் மற்றும் சிறுவிமானங்கள் (ஹெலிகாப்டர்கள்) போன்றவை வான்வழிப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
6. போக்குவரத்தின் எவையேனும் மூன்று நன்மைகளை எழுதுக.
(i) வேளாண் மற்றும் தொழில்துறையின் உற்பத்தியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
(ii) நாட்டின் வர்த்தகத்தை மேம்படுத்துகிறது. நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
(iii) சுற்றுலாவை மேம்படுத்த உதவுகிறது.

செயல்திட்டம்

செய்தித்தாள்களைப் பயன்படுத்தி பேருந்து, ரயில், கப்பல் அல்லது விமானம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு மாதிரியை உருவாக்கி வகுப்பில் காண்பி.

Transport Image 1
Transport Image 2