அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - அறிமுகம் | 4th Maths : Term 2 Unit 4 : Measurements
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்
அறிமுகம் (Introduction)
நிஷாவும், ஜோவும் நண்பர்கள், நிஷாவிடம் ஒரு செல்லப்பிராணி இருந்தது. அது ஒரு நாய். அதன் பெயர் அர்ஜுன். அது 25 கி.கி எடை கொண்டது. ஜோவிடம் ஒரு செல்லப்பிராணி இருந்தது. அது ஒரு, அதன் பெயர் பூஜா அதன் எடை 15 கி.கி ஆகும்.
செயல்பாடு (Activity)
கொடுக்கப்பட்டுள்ளவற்றின் எடைக்குப் பொருத்தமான அலகினை கிராம் அல்லது கிலோகிராம் (✔) செய்க.
எடையை அளவிடப் பல்வேறு விதமான எடைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பு: காய்கறிகள், பழங்கள் மற்றும் அரிசி கிலோகிராம்-இல் (கி.கி) அளவிடப்படுகின்றன.
செயல்பாடு (Activity)
கொடுக்கப்பட்டுள்ள படங்களை உற்றுநோக்கி, அவற்றின் தோராயமான எடையினை வட்டமிடுக.
எடைக் கற்கள் கிராம் மற்றும் கிலோகிராமில் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
கிராமைக் "கி" என எழுதலாம்.
குறிப்பு: தங்கம், வெள்ளி, மிளகு, தேநீர்த்தூள், குளம்பித்தூள் போன்றவை கிராமில் அளவிடப்படுகின்றன.
$$ 1 \text{ கிலோகிராம்} = 1000 \text{ கிராம்} $$
கிராம் மற்றும் கிலோ கிராமில் மாற்றுக.
- அ) $$ 1 \text{ கி.கி} = 1000 \text{ கி} $$
- ஆ) $$ 2 \text{ கி.கி} = \mathbf{2000} \text{ கி} $$
- இ) $$ \mathbf{3} \text{ கி.கி} = 3000 \text{ கி} $$
- ஈ) $$ 15 \text{ கி.கி} = 15000 \text{ கி} $$
- உ) $$ 23 \text{ கி.கி} = \mathbf{23000} \text{ கி} $$