4th Std Maths Term 2 Unit 5 Fractions - Usage of Half, Quarter, Three Fourth & Semi

4th Maths Term 2 Unit 5 Fractions

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள்

பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - அரை, கால், முக்கால், பாதி, பாகபகுதி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல் | 4th Maths : Term 2 Unit 6 : Fraction

அரை, கால், முக்கால், பாதி, பாகபகுதி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல்

அரை, கால், முக்கால், பாதி, பாகபகுதி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல்.

இரவிக்கு கபிலன், அகிலன் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவர் கபிலனுக்குக் பென்சிலும் (pencil), அகிலனுக்கு மாதுளம் பழமும் வாங்கினார் அகிலனிடம் பென்சில் இல்லை. பின்னர் கபிலன் "நான் உனக்கு பாதி பென்சில் தருகிறேன்" என்று கூறினான். எனவே, கபிலன் புதிய பென்சிலை இரண்டு அரைப்பகுதிகளாக வெட்டி, ஒரு பாதியை தன்னுடைய சகோதரன் அகிலனுக்கு கொடுத்து விட்டு மற்றொரு பாதியைத் தான் வைத்துக் கொண்டான்.

அகிலன் கபிலனிடம் மிகவும் நன்றியுடன் இருந்தான். எனவே, அவன் மாதுளம் பழத்தை நான்கில் ஒரு பாகம் அல்லது காற்பகுதி அவனுக்குத் தருவதாகக் கூறினான். அகிலன் பழத்தை இரண்டு அரைப்பாகங்களாக வெட்டி, அதில் ஒரு அரைப் பாகத்தை எடுத்து மீண்டும் அதனை இரு சம அரைப்பாகங்களாக, அதாவது காற்பகுதிகளாக (நூன்கில் ஒன்று) வெட்டினான். தற்பொழுது அகிலன் நான்கில் ஒரு பாகத்தை Quarter Fruit கபிலனிடம் கொடுத்தான், மற்ற பாகங்களை Remaining Fruit தனக்காக வைத்துக்கொண்டான்.

செயல்பாடு

ஒரு செவ்வக வடிவத் தாளை எடுத்துக்கொண்டு அதனைச் சம பாகங்களாக மடிக்கவும், மடித்த இடமானது, இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது.

Folding Paper Activity

தாளை இரண்டு சம (அரை) பாகங்களாக வெட்டுக.

Cutting Paper

வெட்டப்பட்ட தாளிலிருந்து ஒரு பாகத்தை எடுத்து, அதனை மீண்டும் இரண்டு பாகங்களாக (கால்பகுதி) மடிக்கவும்.

செயல்பாடு

மாணவர்களை ஒரு ரிப்பனை அரைப் பகுதிகளாகவும் அரைப்பகுதியை நான்கில் ஒரு பகுதியாகவும், ஒரு அரைப் பகுதியையும் நான்கில் ஒரு பகுதியையும் சேர்த்து முக்கால் பகுதியாகவும் உருவாக்கச் செய்தல். கடைசியில் அனைத்தையும் இணைக்கும் பொழுது ஒரு முழு ரிப்பன் கிடைக்கிறது.

நம்மால் முடியுமா?

Ribbon Activity

அரையை முழுமையாக்கல்

Completing the half

மேலே உள்ள படங்கள் இரண்டு சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியும் அரை (அ) பாதி எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, அதனை அரை (அ) பாதி என அழைக்கலாம்.

Tags: Fraction | Term 2 Chapter 6 | 4th Maths பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு. 4th Maths : Term 2 Unit 6 : Fraction : Use the vocabulary as half, quarter, three fourth, semi, partial and whole Fraction | Term 2 Chapter 6 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் : அரை, கால், முக்கால், பாதி, பாகபகுதி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல் - பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.