5th Standard Maths Term 1 Unit 2 Numbers: Complete Division Guide

5th Maths: Term 1 Unit 2: Numbers - Division Guide
எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - வகுத்தல் | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

வகுத்தல்

பொதுவாக கூட்டல், கழித்தல் மற்றும் பெருக்கல் கணக்குகள் செய்யும்போது ஒன்றாம் இடமதிப்பிலிருந்து தொடங்கி பெரிய இடமதிப்பு வரை (வலமிருந்து இடமாக) செல்வோம். ஆனால் வகுத்தல் கணக்குகளை பொறுத்தமட்டில் பெரிய இடமதிப்பிலிருந்து தொடங்கி சிறிய இடமதிப்பிற்கு (இடமிருந்து வலமாக) கணக்கினை செய்ய வேண்டும்.

5. வகுத்தல்

சபரி என்பவர் கோவலூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அவர் ஒரு விவசாயி, அவருக்கு பசுமாடு ஒன்றும் இருந்தது. அந்த பசுமாடு நாளொன்றுக்கு 8 லிட்டர் பால் கொடுத்தது. ஒரு மாதத்திற்கு 240 லிட்டர் பால் கிடைத்தது.

தினசரி ஒவ்வொரு வீட்டிற்கும் 1 லிட்டர் என 8 வீடுகளுக்கு வழங்கி வந்தார் எனில் ஒவ்வொரு வீட்டினரும் எவ்வளவு பால் ஒரு மாதத்தில் வாங்கி இருப்பர்?

நாம் இப்போது 240 ஐ 8 பாகமாக பிரிக்க வேண்டும்.

Division Equation

இதை நாம் வருத்தல் அல்லது திட்ட வகுத்தல் படிகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.

படி : 1

240 ஐ வகுக்கப் போகிறோம் 240 ஐ வகுபடும் எண் என்கிறோம்.

Step 1
படி : 2

240 ஐ 8 பாகங்களாக பிரிக்கிறோம் எனவே 8 என்பது வகுக்கும் எண் ஆகும்.

Step 2
படி : 3

இங்கு 24-ல் மூன்று எட்டுகள் உள்ளன (8 + 8 + 8 = 24). 3 ஐ கோட்டுக்கு மேல் எழுதவும் \(3 \times 8 = 24\). இங்கே காண்பித்துள்ளதுபோல் 24 ஐ 240 க்கு கீழே இடதுபக்கமாக எழுத ஆரம்பிக்கலாம்.

Step 3
படி : 4

அடுத்ததாக '0' வை கீழே இறக்கவும். '0' வை 8 – ஆல் வகுக்க இயலாது. எனவே மேலே 3 க்கு பக்கத்தில் '0' வை போடவும் 30 ஈவு ஆகும். ஆகவே ஒவ்வொரு வீட்டினரும் ஒரு மாதத்திற்கு 30 லிட்டர் பால் வாங்குகிறார்கள்.

Step 4
குறிப்பு: பொதுவாக கூட்டல், கழித்தல் மற்றும் பெருக்கல் கணக்குகள் செய்யும்போது ஒன்றாம் இடமதிப்பிலிருந்து தொடங்கி பெரிய இடமதிப்பு வரை (வலமிருந்து இடமாக) செல்வோம். ஆனால் வகுத்தல் கணக்குகளை பொறுத்தமட்டில் பெரிய இடமதிப்பிலிருந்து தொடங்கி சிறிய இடமதிப்பிற்கு (இடமிருந்து வலமாக) கணக்கினை செய்ய வேண்டும்.

2. ஈவுமத்தும் மீதியைக் கண்டுபிடி \(53675 \div 8\)

Large Division Example

வகுபடும் எண் = 53675

வகு எண் = 8

ஈவு = 6709

மீதி = 3

குறிப்பு:
வகுபடும் எண் = (வகுக்கும் எண் \(\times\) ஈவு) + மீதி
Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு. 5th Maths : Term 1 Unit 2 : Numbers : Division Algorithm Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : வகுத்தல் - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.