இலக்கணம் : பெயர்ச்சொல், வினைச்சொல்
5 ஆம் வகுப்பு தமிழ் | பருவம் 1 இயல் 2 : கல்விஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
எடுத்துக்காட்டு சாந்தி, வகுப்பறை, சித்திரை, கண், கதிரவன், சந்திரன்.
ஒரு செயலைக் (வினையை) குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
எடுத்துக்காட்டு ஓடினான், விழுந்தது, எழுதினான்.
கீழுள்ள தொடர்களைக் கவனியுங்கள்.
1. இராமன் பாடம் படித்தான்.
இத்தொடரில்,
(i) இராமன், பாடம் – பெயர்ச்சொற்கள்
(ii) படித்தான் – வினைச்சொல்
இத்தொடரில்,
(i) இராமன், பாடம் – பெயர்ச்சொற்கள்
(ii) படித்தான் – வினைச்சொல்
2. மாடு புல் மேய்ந்தது.
இத்தொடரில்,
(i) மாடு, புல் - பெயர்ச்சொற்கள்
(ii) மேய்ந்தது - வினைச்சொல்
இத்தொடரில்,
(i) மாடு, புல் - பெயர்ச்சொற்கள்
(ii) மேய்ந்தது - வினைச்சொல்
ஒன்றன் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல்
ஒரு செயலைக் குறிப்பது வினைச்சொல்