5th Standard Tamil Term 2 Chapter 1 Naanum Parakka Pogiren Supplementary Questions and Answers

5th Standard Tamil Term 2 Chapter 1 Naanum Parakka Pogiren

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம்

துணைப்பாடம் : நானும் பறக்கப் போகிறேன்

பருவம் 2 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம் : நானும் பறக்கப் போகிறேன் | 5th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal tholilnuppam

இயல் ஒன்று

துணைப்பாடம்

நானும் பறக்கப் போகிறேன்

5th Tamil Lesson Image 1

என்னம்மா செய்கிறாய்?

அப்பா, நான் பறக்கப் போகிறேன்.

இப்படியெல்லாம் பறக்கமுடியாது, அமுதா

பறவைகள் பறக்கின்றன. நான் பறக்க முடியாதா அப்பா?

ஓ! அதுவா, சொல்கிறேன். வா! தோட்டத்திற்குப் போகலாம்.

பறவைகள் உடலமைப்பு எப்படி உள்ளது என்று பார்.

படகின் துடுப்பு போல இருக்கிறது அப்பா.

ம்.. சரிதான் இதைத் தூக்கிப்பார்.

பார்க்கத்தான் பெரிதாக உள்ளதுபோல் தோன்றுகிறது. ஆனால், எடை குறைவாக இருக்கிறதே!

ஆமாம்... பறவையின் இறகுகளிலும் எலும்புகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. இவை, பறப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளன..

ஓ! அப்படியென்றால், பறவையைவிட அதிக எடையுடன் நான் இருப்பதால்தான் என்னால் பறக்க முடியவில்லையா?

அப்படியில்லை, அங்கே பார், காற்றைக் கிழித்து மேலே பறக்க, பறவைகளுக்கு இறக்கைகள் உதவுகின்றன.

ஆமாம்.. அப்பா.

பறவைகளின் பின்புற வால் துடுப்புபோல் செயல்பட்டுத் திசைமாறிப் பறக்க உதவுகிறது.

ஓ இத்தனை அமைப்புகள் இருப்பதால்தான் பறவைகளால் பறக்க முடிகிறதா?.

5th Tamil Lesson Image 2

“ஆம் மகளே.. மனிதன் பறவையைக் கண்டான்; விமானம் படைத்தான். அப்படி விமானத்தைக் கண்டுபிடித்தவர் யாரென்று உனக்குத் தெரியுமா?

எனக்குத் தெரியுமே! ரைட் சகோதரர்கள் அல்லவா!

சரியாகச் சொன்னாய். ' பாராட்டுகள். அவர்களும் உன்னைப்போல் பறக்க ஆசைப்பட்டவர்கள்தாம்

அதற்காக அவர்கள் என்ன முயற்சி செய்தார்கள்?

சிறுவயதிலே இருவரும் பறவைகளைப் பார்ப்பது, பல வகைகளில் பட்டங்கள் செய்து பறக்கவிடுவது என ஆர்வமாக இருந்தனர்.

அருமை. இயற்கையைப் பார்த்து வியப்பது, விளையாடுவது இவற்றிலிருந்துகூட நம்மால் நிறைய கற்றுக்கொள்ள முடியுமா ?

ஆம். ரைட் சகோதர்கள் தாங்கள் பறப்பதற்காகப் பலமுறை முயற்சி செய்தனர் அனைத்திலும் தோல்வியே. ஆனாலும், தோல்வியிலிருந்து நிறைய கற்றுக்கொண்டார்கள்.

ஓட்டப் பந்தயத்தில் தோற்றால்கூட சிலர் அழுகிறார்களே, அப்பா.

ஆம். நாம் எதிலும் தொடர்ந்து முயற்சி செய்தால், கட்டாயம் ஒருநாள் வெற்றி பெறலாம்.

அப்போ... ரைட் சகோதர்கள் இதில் எப்படி வெற்றி பெற்றார்கள்?

அவர்கள் செய்த முயற்சிகளில் உள்ள குறைகளைச் சரிசெய்து கொண்டே வந்தார்கள். ஒரு நாள் பறப்பதற்கான கருவியைக் கண்டுபிடித்து விட்டார்கள்.

அது எப்போது நடந்தது?.

1903 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று 12 நொடிகள் ரைட் சகோதரர்களில் ஒருவர். தாங்கள் சொந்தமாக உருவாக்கிய விமானத்தில் உயர்ந்த பகுதியிலிருந்து சிறிது தூரம் பறந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

நானும்கூட அப்படி ஒருநாள் பறந்துகாட்டுவேன், மேலும் சாதனைகள் படைப்பேன் அப்பா.

நல்லது, முயற்சி செய்