5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை
துணைப்பாடம் : தப்பிப் பிழைத்த மான்
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை : துணைப்பாடம் : தப்பிப் பிழைத்த மான் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்
இயல் மூன்று
துணைப்பாடம்
தப்பிப் பிழைத்த மான்
கா... கா....
காகம் கரைந்து தன் நண்பனான மானைத் தேடியபடி அழைத்தது
இதோ வந்துவிட்டேன் என்று கூறியபடி துள்ளிக் குதித்து ஓடி வந்தது மான்.
காகமும் மானும் நல்ல நண்பர்களாக நெடுநாள்கள் இணைந்திருப்பதை நரி ஒன்று கவனித்தது. தன் மனத்திற்குள், கொழு கொழுவென இருக்கும் இந்த மானை நாம் எப்படியாவது கொன்று தின்றுவிட வேண்டும். அதற்கு, எப்பொழுதும் இணைந்தே இருக்கும் இவர்கள் இருவரையும் தனித்தனியே பிரிக்கவேண்டும். அப்போதுதான், மானை இரையாக்க முடியும் என எண்ணியது.
நரி, தன் இருப்பிடம் நோக்கிச் சென்று விடுகிறது
அடுத்த நாள் காலை நரி மானை சந்திக்கிறது.
நரி, மானை விவசாயி ஒருவனின் விளைச்சல் நிலத்தில் கொண்டு விடுகிறது. மான் பயிரை நன்கு மேய்ந்து பசியாறிய பிறகு இருப்பிடத்திற்குத் திரும்புகிறது. இச்செயல் காகத்திற்குத் தெரியாமலேயே தொடர்ந்து நீடிக்கிறது.
விவசாயி தன் விளைச்சலைப் பாழாக்கும் விலங்கைப் பிடிக்க முடிவு செய்கிறான். .
அடுத்த நாள் வழக்கம் போல் மான் நரியோடு அந்த வயலுக்குச் சென்று பயிரை மேய்கிறது. அந்த நேரத்தில் விவசாயி வருவதைப் பார்த்தவுடன், தப்பிக்க நினைத்த மான், வேகமாக ஓடும்போது அருகிலிருந்த கம்பிவேலியில் எதிர்பாராமல் சிக்கிக் கொள்கிறது.
இதையறிந்த நரி, எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாய்ப்பு வந்துவிட்டதை நினைத்து மகிழ்ந்தது. மானை அப்படியே தவிக்க விட்டுவிட்டு ஓடிப்போய் அருகிலுள்ள கரும்பு வயலில் மறைந்து கொண்டு நடக்க இருப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தது.
காகம் தேடி வருகிறது
என் ஆருயிர் நண்பா ! இங்கேயா இருக்கிறாய்? ஆ! வேலியில் மாட்டிக்கொண்டாயே கத்துவதற்குக்கூட முடியாத நிலையில் இப்படி கம்பிவேலியில் சிக்கிக் கொண்டாயே.
சரி, சரி நீ தப்பித்துக் கொள்ள ஒரு யோசனை சொல்கிறேன். விவசாயி அருகில் வரும்வரை நீ இறந்ததுபோல் அசையாமல் இரு விவசாயி உன்னை வேலியிலிருந்து விடுவித்தவுடன், நான் மரத்திலிருந்து கா கா "கா என்று குரல் கொடுக்கிறேன், உடனே தப்பித்து விடு.
அப்போது, காகம் கரைகிறது, அதுவரை இறந்தவாறு நடித்துக்கொண்டிருந்த மான் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் பிழைத்தால் போதும் எனத் துள்ளிப் பாய்ந்து வேகமாக ஓடியது.
தன் நீண்ட தடியை எடுத்து, ஓடும் மானை நோக்கி வேகமாக வீசுகிறான். அந்தத் தடி பதுங்கியிருந்த நரியின்மேல் பட்டு, நரி மயங்கிக் கீழே விழுகிறது. விவசாயி ஏமாந்து போகிறான்.
சிறிது நேரத்திற்குப் பின் மயக்கம் தெளிந்து எழுந்த நரியிடம்,
5th Tamil : Term 1 Chapter 3 : Iyarkai : Supplementary: Thappi pilaitha maan Term 1 Chapter 3 | 5th Tamil in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை : துணைப்பாடம் : தப்பிப் பிழைத்த மான் - பருவம் 1 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.