Comparing Fractions with Equal Numerators - 5th Maths Term 3 Unit 6 Tamil Medium

Comparing Fractions with Equal Numerators - 5th Maths
பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - சம தொகுதிகளைக் கொண்ட பின்னங்களை ஒப்பிடுதல் | 5th Maths : Term 3 Unit 6 : Fractions

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள்

சம தொகுதிகளைக் கொண்ட பின்னங்களை ஒப்பிடுதல்

1 ஐ தொகுதியாக கொண்ட பின்னங்களின் பகுதி அதிகரிக்க அவற்றின் மதிப்பு குறைகிறது எனக் கற்றுள்ளீர்கள். தொகுதி 1 இல்லை என்றாலும், பொதுவான தொகுதியைக் கொண்ட அனைத்து பின்னங்களுக்கும் இதே விதியே பொருந்தும் எடுத்துக்காட்டாக, கீழேயுள்ள படங்களைக் காண்போம் அனைத்து பட்டைகளிலும் நிழலிடப்பட்டப் பங்குகள் ஒன்றே ஆகும்.

சம தொகுதிகளைக் கொண்ட பின்னங்களை ஒப்பிடுதல்

1 ஐ தொகுதியாக கொண்ட பின்னங்களின் பகுதி அதிகரிக்க அவற்றின் மதிப்பு குறைகிறது எனக் கற்றுள்ளீர்கள்.

தொகுதி 1 இல்லை என்றாலும், பொதுவான தொகுதியைக் கொண்ட அனைத்து பின்னங்களுக்கும் இதே விதியே பொருந்தும் எடுத்துக்காட்டாக, கீழேயுள்ள படங்களைக் காண்போம் அனைத்து பட்டைகளிலும் நிழலிடப்பட்டப் பங்குகள் ஒன்றே ஆகும்.

பட்டையின் 3 சமபங்குகளில் 2 என்பது

Fraction strip 2/3

2/3 என வழங்கப்படுகிறது.

படத்தில் 4 சமபங்குகளில் 2 என்பது

Fraction strip 2/4

2/4 என வழங்கப்படுகிறது.

படத்தில் 5 சமபங்குகளில் 2 என்பது

Fraction strip 2/5

2/5 என வழங்கப்படுகிறது.

படத்திலிருந்து 2/3 > 2/4 > 2/5 comparison எனத் தெரிகிறது.

சம தொகுதி கொண்ட இரண்டு பின்னங்களில், பெரிய பகுதியைக் கொண்ட பின்னம் சிறிய பின்னம் ஆகும்.

வேற்றின பின்னங்களை ஒப்பிடுவதற்கு அவற்றின் பகுதிகளைச் சமமாக்குவதற்கு அவற்றின் சமான பின்னங்களாக மாற்ற வேண்டும்.