Identifying Fraction Notations | 4th Maths Term 2 Unit 6

Identifying Fraction Notations | 4th Maths Term 2 Unit 5
பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு | 4th Maths : Term 2 Unit 6 : Fraction

4 ஆம் வகுப்பு கணக்கு : பின்னக் குறியீடுகளை அடையாளங்காணுதல்

ஒரு முழுமையை உருவாக்கும் மொத்தப்பகுதிகளின் எண்ணிக்கையே பகுதி ஆகும். ஒரு முழுமையில் சம பகுதிகளின் எண்ணிக்கையை குறிப்பிடுவது தொகுதி ஆகும்.

பின்னக் குறியீடுகளை அடையாளங்காணுதல்:

ராமு மற்றும் அகில் தன்னுடைய நண்பர்களான ரங்கன் மற்றும் தங்கமுடன் விளையாடிக்கொண்டிருந்தனர். ராமுவின் அம்மாவிடம் ஒரு ஆப்பிள் இருந்தது, எனவே அவர் ராமுவையும் அகிலையும் அழைத்தார். அவர் அதனை இரண்டு அரைப்பகுதிகளாகச் செய்து அவர்களிடம் கொடுத்தார். ரங்கனையும், தங்கத்தையும் அவர் முழுமையாக மறந்துவிட்டார். எனவே, தன்னுடைய மகன்களிடமிருந்த இரண்டு துண்டுகளையும் திரும்பப்பெற்றுக் கொண்டார் பின்னர் அதனை நான்கு சமத் துண்டுகளாக்கி அவர்களிடம் கொடுத்தார்.

ராமுவின் அம்மாவால் கொண்டு வரப்பட்ட ஆப்பிள் = 1

Apple Concept 1

இங்கு 1 என்பது முழுமையைக் குறிக்கும் ஒரு ஆப்பிளின் இரண்டு சம பகுதிகள்.

ராமுவிடம் கொடுக்கப்பட்ட முதல் அரைப்பகுதி = 1/2 Fraction

அகிலிடம் கொடுக்கப்பட்ட மற்றொரு அரைப்பகுதி = 1/2 Fraction

ஒரு முழுமையானது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும்போது அதனுடைய பகுதி 2 ஆகும்.

ஒரு முழுமையானது இரு சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பிரிக்கப்பட்டதே பகுதியாகும். இங்கு 1/2 என்பதில் 2 என்பது பகுதியாகும், 1 என்பது தொகுதியாகும்.

Dividing Apple

இராமுவின் அம்மா, தன்னுடைய மகன்களிடமிருந்து இரண்டு சமபகுதிகளைப் பெற்றுக் கொண்டு அதனை மீண்டும் நான்கு சம பகுதிகளாக வெட்டினார்.

ஒரு முழுமையில் நான்கு சம பகுதிகள்

ராமுவிடம் கொடுக்கப்பட்ட ஒரு பகுதி = 1/4 Fraction

அகிலிடம் கொடுக்கப்பட்ட ஒரு பகுதி = 1/4 Fraction

ரங்கனிடம் கொடுக்கப்பட்ட ஒரு பகுதி = 1/4 Fraction

தங்கத்திடம் கொடுக்கப்பட்ட ஒரு பகுதி = 1/4 Fraction

ஒரு முழுமையானது நான்கு சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டால், அதனுடைய பகுதி 4 ஆகும். 1/4 Fraction இல், 4 என்பது பகுதி 1 என்பது தொகுதி ஆகும்.

ஒரு முழுமையை உருவாக்கும் மொத்தப்பகுதிகளின் எண்ணிக்கையே பகுதி ஆகும். ஒரு முழுமையில் சம பகுதிகளின் எண்ணிக்கையை குறிப்பிடுவது தொகுதி ஆகும்.

எடுத்துக்காட்டு

சம அளவுள்ள 10 கொய்யாப் பழங்கள் ஒரு கூடையில் உள்ளன.

இங்கு 10 கொய்யாப்பழங்கள் ஒரு முழுமையை உருவாக்குகின்றன.

Basket of Guavas

அதுதான் பகுதியாகும். (10 கொய்யாப்பழங்கள் − முழுமை)

அதிலிருந்து 4 கொய்யாப்பழங்கள் எடுக்கப்பட்டால் = 4 Guavas Taken

Guava Subtraction

தற்பொழுது 10 என்பது பகுதி, 4 என்பது தொகுதியாகும்.

கூடையில் மீதமுள்ள பழங்கள் = Remaining Guavas

Guava Calculation

தற்பொழுது 10 என்பது பகுதி, 6 என்பது தொகுதியாகும்.

பல்வேறு வடிவங்களின் தொகுதி மற்றும் பகுதி.

Square Divided into 4

சதுரமானது நான்கு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நான்கு (4) சம பாகங்களும் சேர்ந்தது பகுதி என அழைக்கப்படும். இந்த நான்கு சம பாகங்களில் ஒரு பாகம் வண்ணமிடப்பட்டுள்ளது. எனவே அந்த வண்ணமிடப்பட்ட ஒரு பாகம் தான் தொகுதியாகும். இதனை 1/4 Fraction (நான்கில் 1 பாகம்) என எழுதலாம்.

Circle Divided into 8

இந்த வட்டமானது எட்டு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே, இதனுடைய பாகங்கள் 8 ஆகும். இதுவே பகுதியாகும். இந்த எட்டுப் பாகங்களில் வண்ணமிடப்பட்ட மூன்று பாகங்கள் தொகுதி என்று அழைக்கப்படும். எனவே, இதனுடைய தொகுதி 3 ஆகும்.

தற்பொழுது இதனை 3/8 Fraction என எழுதலாம்

\( \frac{3}{8} = \) தொகுதி / பகுதி

Final 3/8 illustration

Tags: Fraction | Term 2 Chapter 6 | 4th Maths பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 2 Unit 6 : Fraction : To identify the notation of fractions Fraction | Term 2 Chapter 6 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் : பின்னக் குறியீடுகளை அடையாளங்காணுதல் - பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.