5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 அலகு 1 : பண்டைய அகழ்வாராய்ச்சி
வினா விடை | Ancient Excavation Book Back Questions
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
1) அகழ்வாராய்ச்சியின் மூலம் மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த இடங்கள் பற்றிய வரலாற்றினைப் படிப்பவர்கள் --------------------
விடை : இ) அகழ்வாராய்ச்சியாளர்
2) எகிப்தில் உள்ள சிறிய பிரமிடுகள் --------------------- காக உருவாக்கப்பட்டன.
விடை : இ) அரசி
3) சிந்துவெளி நாகரிகம் ---------------- நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
விடை : ஆ) ஹரப்பா
4) ஆதிச்சநல்லூர் ------------------ இல் உள்ளது
விடை : அ) தூத்துக்குடி
5) கீழடி ------------------------ காலம் என்பதனைத் தெரிவிக்கிறது.
விடை : ஆ) ஹரப்பா
II. பொருத்துக
சிந்தித்துப் பார்க்க: இடது பக்கம் உள்ள சொற்களுக்குப் பொருத்தமான விடையை வலது பக்கத்திலிருந்து கண்டறியவும்.
1. பிரமிடுகள்
ஆதிச்சநல்லூர்
2. சுட்ட செங்கற்கள்
கீழடி
3. மட்பாண்டம்
ரோமன் விளக்கு
4. சிவகங்கை
சிந்து நாகரிகம்
5. அரிக்கமேடு
எகிப்து
சரியான விடை:
1) பிரமிடுகள் - எகிப்து
2) சுட்ட செங்கற்கள் - சிந்து நாகரிகம்
3) மட்பாண்டம் - ஆதிச்சநல்லூர்
4) சிவகங்கை - கீழடி
5) அரிக்கமேடு – ரோமன் விளக்கு
2) சுட்ட செங்கற்கள் - சிந்து நாகரிகம்
3) மட்பாண்டம் - ஆதிச்சநல்லூர்
4) சிவகங்கை - கீழடி
5) அரிக்கமேடு – ரோமன் விளக்கு
III. சரியா தவறா?
1) அகழ்வாராய்ச்சியின்போது தொல்கைவினைப் பொருள்கள்கள் கண்டறியப்பட்டன. (விடை : சரி)
2) சிந்துவெளி நாகரிகம் ஹரப்பாவில் உள்ளது. (விடை : சரி)
3) ஆதிச்சநல்லூர் என்ற தொல்பொருள் ஆய்வு இடம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ளது. (விடை : தவறு)
4) கீழடியில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சி, கீழடி ஒரு வளர்ச்சியடைந்த நகரம் என்பதனைத் தெரிவிக்கிறது. (விடை : சரி)
5) ரோமன் விளக்குகள், கண்ணாடிப் பொருள்கள், விலை உயர்ந்த கற்கள் போன்றவை அரிக்கமேடு என்ற இடத்தில் கண்டறியப்பட்டன. (விடை : சரி)
IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1) அகழ்வாராய்ச்சி என்றால் என்ன?
(i) அகழ்வராய்ச்சி என்பது பூமியின் மேற்பரப்பின்கீழ் என்ன இருக்கிறது என்பதைப்பற்றி ஆராய்வதாகும்.
(ii) இந்த ஆய்வு, வரையறைக்குட்பட்டு நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலான அகழ்வராய்ச்சிகள் முன்னரே திட்டமிட்டு தாம் நடைபெறுகின்றன.
2) தொல்பொருள் ஆய்வாளர் என்பவர் யார்?
தொல்பொருள் ஆய்வாளர்கள் அக்காலத்தில் மக்கள் எவ்விதம் வாழந்தனர் என்பதனை அவர்களின் வீடுகள், உடைகள், எலும்புகள் மற்றும் பிற பொருள்களைக் கொண்டு கூறுகின்றனர்.
3) பிரமிடுகள் பற்றிய சிறுகுறிப்பு வரைக
பிரமிடுகள் பற்றிய அகழ்வராய்ச்சி செய்யப்பட்டபோது அரசிக்காக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிலான பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகச் சிறப்பான வடிவமைப்பினைக் கொண்ட மிகப்பெரிய கல்லறைகள் அரச குடும்பத்திறாகாகக் கட்டப்பட்டன என்பதனைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
4) ஆதிச்சநல்லூரில் கண்டறியப்பட்டத் பொருள்கள்கள் யாவை?
(i) ஆதிச்சநல்லூர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் முதுமக்கள் தாழிகள், பல்வகைப்பட்ட மட்பாண்டங்கள் (கருப்பு, சிவப்பு) இரும்பாலான குத்துவாள், கத்திகள், ஈட்டிகள், அம்புகள், சில கல்மணிகள், சில தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன.
(ii) வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகளான புலி, யானை, மான் போன்றவற்றின் வெண்கலத்தாலான உருவங்கள் கிடைத்துள்ளன.
(iii) மட்பாண்டங்கள் செய்தல், கல் மற்றும் மரங்களைப் பயன்படுத்திப் பொருள்கள் செய்தல் போன்ற திறன்களை மக்கள் பெற்றிருந்தனர்.
5) கீழடி எங்கு அமைந்துள்ளது?
கீழடி சிவகங்கை மாவட்டம், திருபுவனம் தாலுகாவிலுள் அமைந்துள்ளது.
V. விரிவான விடையளிக்க.
1) சிந்துவெளி நாகரிகம் பற்றி விவரி.
(i) சிந்துவெளி நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோண்டப்பட்ட முதல் தொல்லியல் ஆய்வு தளம் இதுவாகும். அங்கு சுட்ட செங்கற்கள் நிலத்தடியில் காணப்பட்டன.
(ii) நகரமானது நன்கு திட்டமிட்டும், சரியான வடிகால் அமைப்புகளுடனும், கிணறுகளுடனும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
(iii) மூடிய வடிகால்களுக்கு கழிவு நீரை அனுப்பும் வழி இருந்தது.
(iv) மேம்படுத்தப்பட்ட தானியக் களஞ்சியங்கள், பெரியகுளம் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் இருந்தன.
(v) நகரமும் அதன் நாகரிகமும் அவர்களின் காலத்தை விட மிக உயர்ந்த நிலையில் இருந்தன.
2) கீழடி பற்றி விவரி.
(i) இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை திருபுவனம் தாலுகாவிலுள்ள கீழடி கிராமத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த பழமையான நகரத்தை அகழ்ந்து ஆய்வு செய்துள்ளது.
(ii) செங்கற்களால் கட்டப்பட்ட கட்டங்கள், நன்கு அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு போன்ற சான்றுகள் இந்த ஆய்வில் கிடைத்துள்ளன.
(iii) மேலும், தமிழ் - பிராமி எழுத்துகள் - பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்கள், கண்ணாடியிலான மணிகள், செம்மணிகள், வெண்கல்படிகம், முத்துகள், தங்க ஆபரணங்கள், இரும்புப் பொருள்கள், சங்குவளையல்கள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை போன்றவையும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
3) அரிக்கமேடு பற்றி விரிவாக எழுதவும்.
(i) அரிக்கமேடு, புதுச்சேரி அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும். கடற்கரை கிராமமாக இருந்த அரிக்கமேடு, ரோம் நகருடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது என்பதனை அகழ்வாராய்ச்சி மூலம் அறிய முடிகிறது.
(ii) அங்கு ரோமானிய விளக்குகள், கண்ணாடிப்பொருள்கள், பலவகை கண்ணாடி மணிகள், விலை உயர்ந்த கற்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், மதுக்குடுவைகள் போன்றவற்றை தொல்பொருள் ஆய்வாளர் கண்டறிந்தார்.
(iii) அவர், மேலும் அக்கிராமத்திலுள்ள மீனவர்களுக்கு அந்தத் தொல்கைவினைப் பொருள்கள் யாவும் புதியனவாக இருந்தன என்பதனைக் குறிப்பிட்டுள்ளார்.
செயல்பாடு - செயல் திட்டம்
தமிழகத்தில் நடைபெறும் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும்.