4th Social Science Term 1 Unit 3 Municipality and Corporation Questions Answers

4th Social Science Term 1 Unit 3 Municipality and Corporation
4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 : அலகு 3

நகராட்சி மற்றும் மாநகராட்சி (Municipality and Corporation)

வினா விடை | Questions with Answers

அ. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. தமிழ்நாட்டின் மிகப்பழைமையான மாநகராட்சி __________ ஆகும்.
விடை: சென்னை
2. உள்ளாட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் __________.
விடை: ரிப்பன் பிரபு
3. __________ ஆம் ஆண்டு பல்வந்த்ரா ராய் மேத்தா குழு அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை: 1957
4. நகராட்சியின் பணிக்காலம் __________ ஆண்டுகள் ஆகும்.
விடை: ஐந்து
ஆ. பொருத்துக.

கேள்விகள் (Questions):

1. கிராமப்புற உள்ளாட்சி - குடவோலை 2. ரிப்பன் கட்டிடம் - நகரியம் 3. நெய்வேலி - கிராம ஊராட்சி 4. பேரூராட்சி - மாநகராட்சி 5. மேயர் - ரிப்பன் பிரபு

விடைகள் (Answers):

1. கிராமப்புற உள்ளாட்சி - கிராம ஊராட்சி 2. ரிப்பன் கட்டிடம் - ரிப்பன் பிரபு 3. நெய்வேலி - நகரியம் 4. பேரூராட்சி - குடவோலை 5. மேயர் - மாநகராட்சி
இ. காலி இடங்களை நிரப்புக.
Local Bodies Chart
ஈ. சுருக்கமாக விடையளிக்கவும்.
1. மாநகராட்சியின் பணிகள் யாவை?
மாநகராட்சியின் பணிகளாவன: (1) நகரச் சாலைகள் அமைத்து பராமரித்தல். (2) குடிநீர் வசதி செய்து கொடுத்தல். (3) குப்பைகளை அகற்றுதல். (4) நூலகங்களை அமைத்துப் பராமரித்தல். (5) பூங்காக்களை அமைத்துப் பராமரித்தல். (6) பிறப்பு மற்றும் இறப்புப் பதிவேடுகளைப் பராமரித்தல்
2. உள்ளாட்சியின் அமைப்பு பற்றி குறிப்பு வரைக?
3. நகராட்சியின் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
நகராட்சியின் தலைவரை மக்களே நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கின்றனர்.
4. தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை யாது?
தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 14 ஆகும்.
1. சென்னை 2. தூத்துக்குடி 3. மதுரை 4. திருப்பூர் 5. கோயம்புத்தூர் 6. ஈரோடு 7. திருச்சிராப்பள்ளி 8. தஞ்சாவூர் 9. சேலம் 10. திண்டுக்கல் 11. திருநெல்வேலி 12. ஓசூர் 13. வேலூர் 14. நாகர்கோவில்
5. நகராட்சியின் வருவாய் ஆதாரங்கள் யாவை?
(1) மத்திய, மாநில அரசு வழங்கும் நிதி. (2) வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர் வரி, கடை வரி, சாலை வரி மற்றும் கழிவுநீர் அகற்றல் வரி.

Tags: Municipality and Corporation | Term 1 Chapter 3 | 4th Social Science நகராட்சி மற்றும் மாநகராட்சி | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல். 4th Social Science : Term 1 Unit 3 : Municipality and Corporation : Questions with Answers. Municipality and Corporation | Term 1 Chapter 3 | 4th Social Science in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.

Municipality and Corporation - Term 1 Unit 3 - 4th Social Science

Municipality and Corporation - 4th Social Science

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 : அலகு 3
நகராட்சி மற்றும் மாநகராட்சி

4th Social Science : Term 1 Unit 3 : Municipality and Corporation

கற்றல் நோக்கங்கள்

  • (i) நகராட்சி மற்றும் நகராட்சியின் பணிகளைப் பற்றி அறிந்து கொள்ளல்
  • (ii) உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றி புரிந்து கொள்ளல்
  • (iii) மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் பணிகள் பற்றி அறிந்து கொள்ளல்
  • (iv) நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் வருவாய் ஆதாரங்கள் பற்றி அறிதல்
Learning Objectives Image
Municipality Lesson Image 1

கோடை விடுமுறையின்போது முகிலன் தன் மாமா வீட்டிற்குச் சென்றான். ஒரு நாள் அவன் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது நகராட்சிப் பணியாளர்கள், வீட்டிற்கான சொத்துவரி மற்றும் இதர வரிகள் பற்றி அறிவித்ததைக் கேட்டான். உடனே முகிலன் மாமாவிடம் ஓடி வந்தான்.

Municipality Lesson Image 2
மாமா : ஏன் ஓடிவருகிறாய்? என்ன நடந்தது?
Uncle Image
முகிலன் : மாமா! நகராட்சி என்றால் என்ன? நாம் ஏன் வரி கட்டவேண்டும்?
Mugilan Image
மாமா : முகிலா! நகராட்சி என்பது உள்ளாட்சியின் ஓர் அமைப்பு. இங்கு 50,000 முதல் 1,00,000 வரை மக்கள் வாழ்கின்றனர். இது பல நமது வீடு அமைந்துள்ளது. நமது நகராட்சியில் ஏறத்தாழ 30 வார்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் 152 நகராட்சிகள் உள்ளன.
Uncle Explaining
முகிலன் : நகராட்சியின் தலைவர் யார்?
Mugilan Asking
Municipality Office
மாமா : முகிலா! நகராட்சியின் தலைவர் நகராட்சியின் தந்தை' என அழைக்கப்படுகிறார். நகராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். நகராட்சி உறுப்பினர்களின் பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். நகராட்சியின் உறுப்பினர்களில் ஒருவர் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Uncle Explaining Head
முகிலன் : மாமா! நகராட்சியின் பணிகள் யாவை?
Mugilan Asking Functions
மாமா :
  • (i) தெருவிளக்கு அமைத்தல்.
  • (ii) நூலகம் அமைத்துப் பராமரித்தல்
  • (iii) அங்காடியைப் (சந்தையை) பராமரித்தல்.
  • (iv) குடிநீர் வசதிகளை வழங்குதல்.
  • (v) குப்பைகளை அகற்றுதல்.
Uncle Listing Functions
Municipality Works
முகிலன் : இப்பணிகளை மேற்கொள்ள நகராட்சிக்கு வருவாய் எப்படி கிடைக்கிறது?
Mugilan Asking Revenue
மாமா : இத்தகைய பணிகளை நகராட்சி மேற்கொள்வதற்கு மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்குகின்றன. மேலும் மக்கள் செலுத்தும் வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர் வரி, கடை வரி, சாலைவரி மற்றும் கழிவுநீர் அகற்றல் வரி போன்ற வரிகளின் மூலமும் வருவாய் கிடைக்கிறது.
Uncle Explaining Revenue

தெரிந்து கொள்ளலாமா?

உள்ளாட்சி அமைப்பின் தந்தை - ரிப்பன் பிரபு

Lord Ripon
மாமா : நகராட்சி தவிர கீழ்க்காண்பனவும் உள்ளாட்சி அமைப்பின் கீழ் வருகின்றன.
  • (i) டவுன்ஷிப் நகரியம்)- (எ.கா) நெய்வேலி
  • (ii) கண்டோன்மென்ட் (இராணுவக் கட்டுப்பாட்டு வாரியங்கள்) (எ.கா) குன்னூர், பரங்கிமலை
  • (iii) அறிவிக்கப்பட்ட பகுதிகள்.
Uncle Explaining Other Bodies
Township Image
முகிலன் : மாநகராட்சி என்றால் என்ன?
Mugilan Asking Corporation
மாமா : தமிழ்நாடு அரசு, மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் சில நகராட்சிகளை தரம் உயர்த்தும். அவை மாநகராட்சி என்று அழைக்கப்படும். உதாரணமாக, நாம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை மற்றும் சேலம் போன்றவற்றை மாநகராட்சிகள் என அழைக்கிறோம்.
Uncle Explaining Corporation
Example Cities

தெரிந்து கொள்ளலாமா?

  • 1957 ஆம் ஆண்டு 'பல்வந்த்ரா ராய் மேத்தா குழு' அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1978 ஆம் ஆண்டு 'அசோக் மேத்தா குழு' அறிக்கையின்படி இந்தியாவில் இரண்டடுக்கு பஞ்சாயத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
முகிலன் : மாமா ! தமிழ்நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன?
Mugilan Asking Count
மாமா : தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் சென்னை மாநகராட்சி மிகவும் பழைமையானது.
Uncle Answering Count
Chennai Corporation
முகிலன் : மாமா! மாநகராட்சியின் தலைவரும், உறுப்பினர்களும் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
Mugilan Asking Election
மாமா : மாநகராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். மாநகராட்சியின் தலைவர் 'மேயர்' எனப்படுகிறார். அவரை மாநகராட்சியின் தந்தை எனவும் அழைப்பர். மாநகராட்சி உறுப்பினர்களின் பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்திய நிர்வாக அதிகாரிகள் மற்றும் இதற்கு இணையானவர்கள் அரசால் மாநகராட்சியில் பணியமர்த்தப்படுகிறார்கள். பல நகர்ப்புறங்கள் மாநகராட்சிகளைக் கொண்டுள்ளன.
Uncle Explaining Mayor

உங்களுக்குத் தெரியுமா?

மாநகராட்சி

  • 1. சென்னை
  • 2. மதுரை
  • 3. கோயம்புத்தூர்
  • 4. திருச்சிராப்பள்ளி
  • 5. சேலம்
  • 6. திருநெல்வேலி
  • 7. திருப்பூர்
  • 8. ஈரோடு
  • 9. வேலூர்
  • 10. தூத்துக்குடி
  • 11. தஞ்சாவூர்
  • 13. ஓசூர்
  • 14. நாகர்கோவில்
  • 15. ஆவடி
  • 16. தாம்பரம்
  • 17. காஞ்சிபுரம்
  • 18. கரூர்
  • 19. கும்பகோணம்
  • 20. கடலூர்
  • 21. சிவகாசி
Map of TN
முகிலன் : மாநகராட்சியின் பணிகள் என்ன?
Mugilan Asking Functions 2
மாமா :
  • (i) நகரச் சாலைகளை அமைத்தல் மற்றும் பராமரித்தல்.
  • (ii) குடிநீர் வசதிகளை அமைத்தல்.
  • (iii) குப்பைகளை அகற்றுதல்.
  • (iv) நூலகங்களை அமைத்துப் பராமரித்தல்.
  • (v) பூங்காக்களை அமைத்துப் பராமரித்தல்.
  • (vi) பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளைப் பராமரித்தல்
Corporation Functions
முகிலன் : மாநகராட்சிக்கு வருவாய் எவ்வாறு கிடைக்கிறது?
Mugilan Asking Revenue 2
மாமா : மாநகராட்சிக்கு வருவாயானது தொழில் வரி, சொத்துவரி, பொழுதுபோக்கு வரி, சுங்கவரி மற்றும் சாலை வரிகள் மூலம் வருவாய் கிடைக்கிறது.
Uncle Explaining Rev 2
முகிலன் : நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தவிர வேறு என்ன அமைப்புகள் உள்ளன?
மாமா : மாநகராட்சி, நகராட்சிக்கு அடுத்து பேரூராட்சி என்ற ஒரு அமைப்பு உள்ளது. இதன் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும். நிர்வாக அதிகாரிகளால் பேரூராட்சி நிர்வகிக்கப்படுகிறது. பேரூராட்சி என்பது 5,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டதாகும்.
Town Panchayat
முகிலன் : மாமா! உங்களால் நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களைப் பற்றி தெரிந்துக் கொண்டேன். நன்றி மாமா!
Thanks
மாமா : நன்று! வா, கை கழுவிக் கொண்டு நாம் மதிய உணவு சாப்பிடலாம்.

செயல்பாடு

  • 1. உனது வார்டில் உள்ள பூங்கா மற்றும் நூலகங்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பற்றி உனது வகுப்பில் கலந்துரையாடு.
  • 2. உனக்கு அருகில் உள்ள மாநகராட்சிக்கு, உனது ஆசிரியருடன் சென்று அங்கு நடக்கும் சபைக் கூட்டத்தைக் கவனி.
  • 3. உனது பெற்றோர் என்னென்ன வரிகளை செலுத்துகின்றனர்?
Activity

4th Social Science Term 1 Unit 2 Five Landforms Question Answer

4th Social Science Term 1 Unit 2 Five Landforms

பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல்

4th Social Science : Term 1 Unit 2 : Five Landforms

வினா விடை (Questions & Answers)
மதிப்பீடு - அ. பட்டியலிடு
1. உங்கள் மாவட்டத்தில் உள்ள மலைகளையும் அவை அமைந்துள்ள ஊர்களையும் எழுதுக.
Mountains in the district
2. உங்கள் பள்ளியைச் சுற்றியுள்ள மரங்க பெயர்களை எழுதுக.
Trees around school
ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக
(i) பரந்த சமமான நிலப்பரப்பு சமவெளி எனப்படுகிறது.
(ii) உலகின் மிகப்பழைமையான நான்காவது பெரிய நீர்ப்பாசனவசதி கொண்ட நீர்த்தேக்கம் கல்லணை
(iii) கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள காடுகள் கீரிப்பாறை காப்புக்காடு
(iv) வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் ஆகும்.
(v) பிச்சாவரம் இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடு ஆகும்.
(vi) மெரினா கடற்கரை கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது.
இ. பொருத்துக

பயிற்சி 1:

கேள்வி (Question)

1. முருகன் – முல்லை
2. திருமால் - பாலை
3. இந்திரன் - குறிஞ்சி
4. வருணன் - மருதம்
5. கொற்றவை - நெய்தல்

விடை (Answer):

1. முருகன் – குறிஞ்சி
2. திருமால் - முல்லை
3. இந்திரன் - மருதம்
4. வருணன் - நெய்தல்
5. கொற்றவை - பாலை

பயிற்சி 2:

கேள்வி (Question)

1. கடவுள் - கிழங்கு அகழ்தல்
2. மலர் - குறவர், குறத்தியர்
3. மக்கள் - குறிஞ்சி மலர்
4. தொழில் – முருகன்

விடை (Answer):

1. கடவுள் - முருகன்
2. மலர் - குறிஞ்சி மலர்
3. மக்கள் - குறவர், குறத்தியர்
4. தொழில் – கிழங்கு அகழ்தல்
ஈ. குறுகிய விடையளிக்க
1. ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் பெயர்களை எழுதுக.
(i) குறிஞ்சி - குறவர், குறத்தியர்.
(ii) முல்லை - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்.
(iii) மருதம் - உழவர்கள்.
(iv) நெய்தல் - பரதவர் (மீனவர்).
(v) பாலை - மறவர், மறத்தியர், எயினர், எயிற்றியர்.
2. முல்லை நிலத்தின் நான்கு கருப்பொருட்களைப் பட்டியலிடுக.
(i) கடவுள் - திருமால்.
(ii) மக்கள் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்.
(iii) தொழில் - கால்நடை மேய்த்தல், பழங்கள் சேகரித்தல், திருமணப் பயிர் வளர்த்தல்.
(iv) மரம், மலர் - கொய்யா, முல்லை மலர்.
(v) விலங்கு, பறவை - கரடி, முயல், கிளி.
(vi) இசைக்கருவி - முல்லை யாழ்.
3. செம்புலம் பற்றி நீ அறிவது யாது?
தமிழ்நாட்டில் காடுகள் நிறைந்த பகுதி முல்லை நிலம். இப்பகுதி செம்மண்ணைக் கொண்டிருப்பதால் செம்புலம் என அழைக்கப்படுகிறது.
4. பாலை நிலம் எவ்வாறு உருவானது?
குறிஞ்சியும், முல்லையும் வறண்டுவிடும் போது பாலை நிலம் உருவாகிறது
5. பாலை நிலத்தின் கருப்பொருள் யாது?
(i) கடவுள் - கொற்றவை.
(ii) மக்கள் - மறவர், மறத்தியர், எயினர், எயிற்றியர்.
(iii) தொழில் - கொள்ளையடித்தல்.
(iv) மரம், மலர் - உழிஞை, பாலை, கள்ளி, இழுப்பை.
(v) விலங்கு, பறவை - புலி, யானை, கழுகு.
(vi) இசைக்கருவி - பாலை யாழ்.
(vii) வேம்பு - உடலில் உள்ள கிருமிகளைக் கொள்ளும்.
(viii) முசுமுசுக்கை - நுரையீரல் சார்ந்த நோய்க்கு மருந்து.
(ix) கரிசலாங்கன்னி உடல் முதுமையைப் போக்கும்.

Tags : Five Landforms | Term 1 Chapter 2 | 4th Social Science பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.

4th Social Science : Term 1 Unit 2 : Five Landforms : Questions with Answers Five Landforms | Term 1 Chapter 2 | 4th Social Science in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 : அலகு 2 : ஐவகை நில அமைப்பு : வினா விடை - பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Social Science Term 1 Unit 2 Five Landforms

4th Social Science Term 1 Unit 2 Five Landforms
பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - ஐவகை நில அமைப்பு
4th Social Science : Term 1 Unit 2 : Five Landforms

ஐவகை நில அமைப்பு

Five Landforms Banner

கற்றல் நோக்கங்கள்

  • பண்டைய தமிழகத்தின் பல்வேறுபட்ட நில அமைப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளல்
  • நில வகைப்பாடுகளின் கருப்பொருட்களை அறிதல் பல்வேறு நிலங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளைப் புரிந்து கொள்ளல்

முன்னுரை

  • உன் சொந்த ஊர் எது?
  • உன் சொந்த ஊர் அமைந்துள்ள மாவட்டம் எது?
  • உன் வீட்டைச் சுற்றி என்ன காண்கிறாய்?

நம் வீட்டைச்சுற்றி வயல்கள், வீடுகள், மரங்கள், கற்கள் மற்றும் வறண்ட நிலங்களைப் பார்க்கிறோம். நம் புவியில் இது போன்று மேலும் சிலவற்றைப் பார்க்கிறோம்.

Landforms Intro
  • புவியில் மலைக் குன்றுகளை எங்குக் காண்கிறாய்? மலைத் தொடர்களில்
  • விலங்குகளுடன் கூடிய அடர்ந்த மரங்களை எங்குக் காண்கிறாய்? காடுகளில்
  • நெற்பயிர் எங்கு வளரும்? வேளாண்மை நிலத்தில்
  • கடற்கரைப்பகுதிகளை எங்குக் காண்கிறாய்? கடல் மற்றும் கடற்கரைக்கு அருகில்
  • பயனற்ற நிலத்தின் பெயர் என்ன? தரிசு நிலம்

புவியின் மேற்பரப்பில் நாம் காணும் பல்வேறுபட்ட இடங்களையே நிலத்தோற்றம் என அழைக்கிறோம்.

பண்டைய தமிழ்நாட்டின். நிலங்கள் அவற்றின் தோற்றங்கள் காறும் மக்களின் செயல்பாடுகள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தன என்பதனை நாம் இப்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் நிலத்தோற்றமும் இயற்கை அமைப்பும்

சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து மூன்றாவதாக இருக்கும் கோள் 'புவி' ஆகும். இது உயிர்வளி (ஆக்சிஜன்) யையும் வாழத்தகுந்ததட்பவெப்பத்தினையும் கொண்டுள்ளது. எனவே 'புவி'யை நாம் 'உயிர்க்கோளம்' என்றழைக்கிறோம்.

Earth

புவி அல்லது உயிர்க்கோளம் என்பது இயற்கையின் ஐந்து அடிப்படைக் கூறுகளான நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் (வானம்) ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

Nature Elements
Five Elements

தமிழ்நாட்டின் நில அமைப்பு

சங்க காலத்தில், தமிழ்நாட்டின் நிலப்பகுதி மக்கள் செய்த தொழிலின் அடிப்படையில் ஐவகை நில அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

ஐவகை நிலங்களுள் நான்கு வகைகள் மட்டும் நிலையாக இருந்தது அவை குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் ஆகும். குறிஞ்சியும் முல்லையும் வறண்ட பின் உருவாகும் நிலமே பாலை ஆகும்.

அ. மலைகள் (குறிஞ்சி நிலம்)

மலை என்பது நம்மைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகளைவிட உயரமான சிகரங்களைக் கொண்ட ஒரு புவியியல் அமைப்பு ஆகும்.

மலையும் மலைசார்ந்த இடமும் 'குறிஞ்சி' என அழைக்கப்படுகிறது.

Kurinji Land

1. கருப்பொருள்

கருப்பொருள் என்பது கடவுள், மக்கள், தொழில், மரம், மலர், விலங்கு, பறவை மற்றும் இசைக் கருவி ஆகியவற்றைக் குறிப்பதாகும்.

Kurinji Theme
  • கடவுள் - முருகன்
  • மக்கள் - குறவர், குறத்தியர்
  • தொழில் - வேட்டையாடுதல், தேன் மற்றும் கிழங்கு சேகரித்தல்
  • மரம்/ மலர் - மூங்கில், வேங்கை/ குறிஞ்சி மலர்
  • விலங்கு/பறவை - குரங்கு, மான் / மயில், கிளி
  • இசைக் கருவி - குறிஞ்சி யாழ்
Kurinji Features

2. மக்களும் அவர்தம் தொழில்களும்

  • பொருப்பன் - வீரர்கள்
  • வெற்பன் - இனத் தலைவன், ஆயுதம் ஏந்தியவர்.
  • சிலம்பன் - வீரதீரக்கலையில் வல்லவர்.
  • குறவர் - வேட்டையாடுபவர், உணவு சேகரிப்பவர்
  • கானவர் - காடுகளில் வாழ்பவர்.

3. குறிஞ்சி நில மண்

கருப்பு மற்றும் சிவப்பு நிறமுடைய பாறைகளையும் கூழாங்கற்களையும் உள்ளடக்கியது ஆகும்.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய மலைகள்:
கொல்லி மலை, சேர்வராயன் மலை, கல்ராயன் மலை, நீலகிரி மலை, ஜவ்வாது மலை, ஏலகிரி மலை.

அதிசய மலர்- குறிஞ்சி

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர் குறிஞ்சி ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் நன்கு வளர்கிறது. ஜூலை - செப்டம்பர் மாதங்களில் இது பூக்கும். இம்மலர் மருத்துவ குணம் கொண்டதாகும்.

Kurinji Flower

ஆ. காடுகள் (முல்லை நிலம்)

அடர்ந்தீ மரங்களைக் கொண்ட பெரும், நிலப்பகுதிகள் காடுகள் என்று அழைக்கப்படுகிறது. காடுகள் நிறைந்த பகுதியை 'முல்லை நிலம்' என அழைப்பர். இப்பகுதி செம்மண்ணைக் கொண்டிருப்பதால் 'செம்புலம்' எனவும் அழைக்கப்படுகிறது.

Mullai Land

அ) கருப்பொருள்

Mullai Theme
  • கடவுள் - திருமால்
  • மக்கள் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
  • தொழில் - கால்நடை மேய்த்தல். பழங்கள் சேகரித்தல், தினைப்பயிர் வளர்த்தல்
  • மரம்/மலர் - கொய்யா/ முல்லை மலர்
  • விலங்கு/பறவை - கரடி, முயல்/ கிளி
  • இசைக் கருவி - முல்லை யாழ்
Mullai Features

2. மக்களும் அவர்தம் தொழில்களும்

  • இடையர் - பால் விற்பவர்
  • ஆயர் - கால்நடை மேய்ப்பவர்

3. முல்லை நில மண்

கற்கள் மற்றும் கூழாங்கற்களைக் கொண்டு செம்மண்

4. தமிழ்நாட்டின் காடுகள்

  • சதுப்புநிலக் காடுகள் - பிச்சாவரம், கடலூர் மாவட்டம்
  • மலைக்காடுகள் - நீலகிரி மாவட்டம்
  • காப்புக்காடு - கன்னியாகுமரி மாவட்டம்
  • ஈரக்காடுகள் - கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்

தெரிந்து கொள்ளலாமா?

உற்பத்திப் பொருட்கள் - பயன்படும் மரங்கள்

  • தாள் (காகிதம்) - மூங்கில், தைல மரம், குடைவேல்
  • தீக்குச்சிகள் - அயிலை, முள் இலவு
  • நறுமணப் பொருட்கள் - சந்தன மரம்
  • தைலம், சோப்பு - ஐவகை நில அமைப்பு

புகழ் பெற்ற பிச்சாவரம் காடுகள்

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகில் பிச்சாவரம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள சதுப்பு நிலக்காடுகள் (அலையாத்தி காடுகள்) இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரியதாகும். இது சிறு தாவரங்களையும் நீர் விலங்குகளையும் ஈரமான வெப்பநிலையையும் கொண்டுள்ளது.

Pichavaram Forest

இ. வயல்கள் (மருத நிலம்)

பரந்த, சமமான நிலப்பரப்பு சமவெளி எனப்படுகிறது. வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் 'மருதம்' என அழைக்கப்படுகிறது.

Marutham Land

1. கருப்பொருள்கள்

Marutham Theme
  • கடவுள் - இந்திரன் (வேந்தன்)
  • மக்கள் - உழவர், உழத்தியர்
  • தொழில் - உழவுத் தொழில்
  • மரம்/ மலர் - காஞ்சி, மருதம்/ தாமரை, குவளை
  • விலங்கு/ பறவை - எருமை/ நாரை
  • இசைக்கருவி - மருத யாழ்
Marutham Features

2. மக்களும் அவர்தம் தொழில்களும்

  • ஊரன் – சிறு நிலக்கிறார்
  • உழவர் – உழவுத் தொழில் செய்பவர்
  • கடையர் - வணிகர்

3. மருத நில மண்

வளமான வண்டல் மண் மற்றும் செம்மண்ணைக் கொண்டுள்ளது.

வியக்கத்தக்க உண்மை

கல்லணை ஒரு பழமையான நீர்த்தேக்கம் ஆகும். இது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1,080 அடி, அகலம் 66 அடி மற்றும் உயரம் 18 அடி ஆகும். பழங்காலத்திலேயே நீரைத் திருப்பி கால்வாய் பாசன வசதி செய்வதில், இந்த நீர்த்தேக்கம் உலகளவில் நான்காம் இடம் பெற்றுள்ளது

Kallanai Dam

ஈ. கடல் / கடற்பகுதிகள் (நெய்தல் நிலம்)

புவியின் பெரும் நிலப்பரப்பில் பரவியிருக்கும் உப்பு நீர்த்தொகுதி 'கடல்' எனப்படும்.

கடலும் கடல் சார்ந்த பகுதியும் 'நெய்தல்' என அழைக்கப்படுகிறது.

Neithal Land

1. கருப்பொருள்

Neithal Theme
  • கடவுள் - வருணன் (மழைக்கடவுள்)
  • மக்கள் - பரதவர் (மீனவர்)
  • தொழில் - மீன் பிடித்தல்
  • மரம் / மலர் - புன்னை / செங்காந்தள்
  • விலங்கு /பறவை - மீன்/ கடற்காகம்
  • இசைக் கருவி - விளரி யாழ்
Neithal Features

2. மக்களும் அவர்தம் தொழில்களும்

  • சேர்ப்பன் - கடல் உணவு வணிகர்
  • புலம்பன் - தென்னைத் தொழில் செய்பவர்
  • பரதவர் - கடற்போர் வீரர், வணிகர்
  • நுளையர் - மீன் தொழில் செய்பவர்
  • அளவர் - உப்பளத் தொழில் செய்பவர்

3. நெய்தல் நில மண்

நெய்தல் நிலம் உவர் மண்ணால் ஆனது.

அறிந்த இடம், அறியாத உண்மை

தமிழகத்தின் சென்னை நகரில் அமைந்துள்ள இயற்கையான கடற்கரை மெரினா கடற்கரை ஆகும். உலகின் மிக நீளமான இரண்டாவது கடற்கரை இதுவாகும். இது இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் வங்காள விரிகுடாவை ஒட்டி, வட கடற்கரையில் வங்காளி ஜார்ஜ் கோட்டை முதல் தெற்கே பட்டினப்பாக்கம் வரை இதன் நீளம் 13 கி.மீ ஆகும். (அமெரிக்க நாட்டின் புளோரிடாவில் உள்ள மியாமி கடற்கரை உலகிலேயே மிக நீளமான கடற்கரை ஆகும்.)

Marina Beach

உ. வறண்ட நிலங்கள் (பாலை நிலம்)

குறைவான மழை அல்லது மழை எதனையும் காணாத நிலப்பகுதி வறண்ட 'நிலம்' எனப்படுகிறது.

வறட்சியை நோக்கிச் செல்லும் மணற்பாங்கான நிலம் 'பாலை நிலம்' எனப்படும். குறிஞ்சியும் முல்லையும் வறண்டு விடும்போது பாலையாக மாறுகிறது.

Palai Land

1. கருப்பொருள்

Palai Theme
  • கடவுள் - கொற்றவை (பெண் கடவுள்)
  • மக்கள் - எயினர், எயிற்றியர்
  • தொழில் - ஆநிரை கவர்தல்
  • மரம் / மலர் - உழிஞை, பாலை / கள்ளி, இலுப்பை
  • விலங்கு /பறவை - புலி, யானை / கழுகு
  • இசைக் கருவி - பாலை யாழ்
Palai Features

2. மக்களும் அவர்தம் தொழில்களும்

  • மறவர் - மாபெரும் போர்வீரர், வேட்டையாடுபவர்.
  • எயினர் - வீரர்.

3. பாலை நில மண்

மணலும் உவர் மண்ணும் உள்ள பகுதி பாலை ஆகும்.

செயல்பாடு

  • ஆசிரியரின் உதவியுடன், அருகில் உள்ள மலைப்பகுதிக்குச் சென்று அங்குள்ள மூலிகைகளையும் அவற்றின் பயன்பாடுகளையும் அறிந்து கொள்.
  • "மரங்கள் நம் நண்பர்கள்" ஏற்றுக் கொள்கிறாயா? உன் குழுவினருடன் விவாதி.
Activity