1st Grade Tamil Textbook Solutions | Term 3 Chapter 4 | Enna Vannam Vendum

1st Grade Tamil Textbook Solutions | Term 3 Chapter 4 | Enna Vannam Vendum

பருவம் 3 இயல் 4 | 1 ஆம் வகுப்பு தமிழ் - என்ன வண்ணம் வேண்டும்?

என்ன வண்ணம் வேண்டும்?

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 4 : என்ன வண்ணம் வேண்டும்?

வெள்ளை வண்ணம் வேணுமா? - அம்மா!

வெண்ணெய் கொஞ்சம் அள்ளிக்கோ!

கருப்புவண்ணம் வேணுமா? - அம்மா!

காக்கைக் குஞ்சிடம் வாங்கிக்கோ!

பச்சை வண்ணம் வேணுமா? - அம்மா!

கிளியைக்கண்டு பேசிக்கோ!

நீல வண்ணம் வேணுமா? - அம்மா!

நீயே கடலைப் பார்த்துக்கோ!

சிவப்பு வண்ணம் வேணுமா? – அம்மா!

செந்தாமரையைக் கேட்டுப்பார்!

மஞ்சள் வண்ணம் வேணுமா? - அம்மா!

வான நிலாவைத் தொட்டுக்கோ!

எல்லா வண்ணமும் வேணுமா? - அம்மா!

என்னை இடுப்பில் எடுத்துக்கோ!

- ஈரோடு தமிழன்பன்

வண்ணங்கள்

சிவப்பு மஞ்சள் நீலம்

வெள்ளை கருப்பு பச்சை

வண்ணங்கள் பட்டியல்

வாத்தின் வண்ணம் எழுதுவேன்

வாத்துகளின் படம்

விடை

மஞ்சள்

சிவப்பு

ஊதா

பச்சை

வெள்ளை