1st Tamil: Term 3 Chapter 1 - Inippu Seiyalama | இனிப்பு செய்யலாமா?

பருவம் 3 இயல் 1 | 1 ஆம் வகுப்பு தமிழ் - இனிப்பு செய்யலாமா?

1 ஆம் வகுப்பு தமிழ்: பருவம் 3 இயல் 1 - இனிப்பு செய்யலாமா?

இனிப்பு செய்யலாமா?

இனிப்பு செய்யலாமா? பாடத்தின் முகப்பு படம்

நண்பர்கள் இனிப்பு செய்யக் கூடினர்

கேழ்வரகு மாவு எடுத்து வருகிறது சேவல்

வெல்லம் சுமந்து வருகிறது கட்டெறும்பு

தேன் எடுத்து வருகிறது தேனீ

நெய் எடுத்து வருகிறது வெட்டுக்கிளி

தேங்காய் எடுத்து வருகிறது சுண்டெலி

இனிப்பு தயார் ஆகிறது

அடடே! கேழ்வரகு உருண்டை விருந்து. நாமும் சாப்பிடலாமா?!

பெயரைச் சொல்வேன்: எழுத்தை அறிவேன்

பெயரைச் சொல்வேன்: எழுத்தை அறிவேன்

படமும் சொல்லும்

கெண்டி செங்கல் கட்டெறும்பு

எண்ணெய் தெரு நெல்

பெட்டி மெழுகுவத்தி வெல்லம்

படமும் சொல்லும் பயிற்சி

எழுத்தை எடுப்பேன்: பெயரைச் சொல்வேன்

எழுத்தை எடுப்பேன்: பெயரைச் சொல்வேன் பயிற்சி

எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்: வட்டமிடுவோம்

மெ லெ யெ பெ நெ

எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்: வட்டமிடுவோம் பயிற்சி

கண்டுபிடிப்பேன்: வட்டமிடுவேன்

கண்டுபிடிப்பேன்: வட்டமிடுவேன் பயிற்சி

படித்துப் பார்ப்போம்

பெயர் : வெ.நெல்சன்

வகுப்பு : முதல் வகுப்பு

முகவரி : 4/12.தெற்குத் தெரு.

செங்கல்பட்டு - 18

படித்துப் பார்ப்போம் எடுத்துக்காட்டு

எழுதிப் பழகுவேன்

எழுதிப் பழகுவேன் பயிற்சி

படிப்போம் எழுதுவோம்

தெப்பம் வெப்பம்

செடி வெடி

செருப்பு நெருப்பு

நெய் மெய்

படிப்போம் எழுதுவோம் சொற்கள்

படிப்பேன் வரைவேன்

கட்டெறும்பு

செங்கல்

மெழுகுவத்தி

பெட்டி

படிப்பேன் வரைவேன் பயிற்சி

பெயரை எழுதுவேன்

பெயரை எழுதுவேன் பயிற்சி

விடை

பெட்டி

மெழுகுவத்தி

வெல்லம்

நெல்லிக்காய்

கட்டெறும்பு

இணைத்து எழுதுவேன்

இணைத்து எழுதுவேன் பயிற்சி இணைத்து எழுதுவேன் பயிற்சி

விடை

1. நெற்றி

2. வெற்றி

1. தெப்பம்

2. வெப்பம்

1. பெட்டி

2. மெட்டி

1. மெட்டு

2. வெட்டு

கண்ணாடி

கண்ணாடி கவிதை

மெத்தப் பெரிய கண்ணாடி

வீட்டில் என்னிடம் இருக்கிறது

நித்தம் நித்தம் அதன் முன்னால்

நின்றே அழகு பார்த்திடுவேன்

எப்படி எப்படி செய்தாலும்

என்போல் அதுவும் செய்திடுமே

நன்மை செய்தால் நன்மை தான்

நம்மை நாடி வந்திடுமே

- அழ . வள்ளியப்பா

பெயரைச் சொல்வேன்; எழுத்தை அறிவேன்

பெயரைச் சொல்வேன்; எழுத்தை அறிவேன் - 2

படமும் சொல்லும்

கேழ்வரகு சேவல் தேங்காய்

பேருந்து மேகம் வேர்

படமும் சொல்லும் பயிற்சி - 2

எழுத்தை எடுப்பேன்; பெயரைச் சொல்வேன்

எழுத்தை எடுப்பேன்; பெயரைச் சொல்வேன் பயிற்சி - 2

எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்: வட்டமிடுவோம்

கே மே ஙே வே றே

எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்: வட்டமிடுவோம் பயிற்சி - 2

படித்துப் பார்ப்போம்

உள்ளே வருக

வெளியே

பேருந்து நிறுத்தம் - சேலம்

படித்துப் பார்ப்போம் எடுத்துக்காட்டு - 2

எழுதிப் பழகுவேன்

எழுதிப் பழகுவேன் பயிற்சி - 2

படிப்போம் எழுதுவோம்

தேள் கேள் சேய் தேய்

வேலி சேர் நேர் தேர்

தேடு மேடு தேக்கு மேற்கு

படிப்போம் எழுதுவோம் சொற்கள் - 2

படிப்பேன் வரைவேன்

படிப்பேன் வரைவேன் பயிற்சி - 2

தேங்காய்

பேருந்து

சேவல்

தேனீ

பெயரை எழுதுவேன்

பெயரை எழுதுவேன் பயிற்சி - 2

விடை

மேகம் கேழ்வரகு. சேவல் வேலி தேள் தேன்கூடு

இணைத்து எழுதுவேன்

இணைத்து எழுதுவேன் பயிற்சி - 2

விடை

மேளம் மேகம்

தேன் தேள்

வேர்

தேர்

நேர்

சேர்

நிரப்புவேன்

நிரப்புவேன் பயிற்சி

விடை

மேகம் பார்

கோதுமை மாவு

பேருந்து நிறுத்தம்

கண்ணாடியில் கண்டுபிடிப்பேன்: இணைப்பேன்

கண்ணாடியில் கண்டுபிடிப்பேன்: இணைப்பேன் பயிற்சி

விடை

கெண்டி

பேருந்து

சேவல்

கட்டெறும்பு

வேர்

நெல்

நிரப்புவேன்

நிரப்புவேன் பயிற்சி - 2

விடை

நெல்

வெங்காயம்

கேடயம்

மேம்பாலம்

வந்தது யார்?

வெல்லம் தேடி கட்டெறும்பு வந்தது. வண்டு வந்தது.

ஈக்கள் வந்தன.

கிளி வந்தது.

அடுத்து வந்தது யார்?

வண்ணமிட்ட எழுத்துகளை எடுத்து எழுதினால் தெரிந்துவிடும்.

வந்தது யார்? புதிர்

விடை : வெட்டுக்கிளி

புள்ளிகளை இணைத்து வண்ணம் தீட்டுவேன்

வண்ணம் தீட்டும் பயிற்சி

பறக்கலாம் கண்ணே!

பறக்கலாம் கண்ணே கதை

கண்ணே! வெளியே வா!

எதற்கு அம்மா?

உயரே பறக்கலாம்

எனக்குப் பறக்கத் தெரியாதே

உன் சிறகு வளர்ந்து உள்ளது பார்

அடடே! ஆமாம் அம்மா!

ஐ... மேலே பறக்கிறேன்!

நானும் வருகிறேன் உணவு தேடலாம்