Class 1 Tamil Term 1 Chapter 1: Padi Aadi Vilayadalam | 1 ஆம் வகுப்பு தமிழ் பாடம் 1

பருவம் 1 இயல் 1 | 1 ஆம் வகுப்பு தமிழ் - பாடி ஆடி விளையாடலாம்

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : பாடி ஆடி விளையாடலாம்

பாடி ஆடி விளையாடலாம்

தமிழ் பாடப்புத்தகத்தின் முகப்பு பக்கம் - பாடி ஆடி விளையாடலாம்

காட்டுக்குள்ளே கொண்டாட்டம்

காட்டில் விலங்குகள் விளையாடும் காட்சி

பிடித்த விளையாட்டுகள் குறித்துப் பேசி மகிழ்வோம்

ஆலமரத்துல விளையாட்டு

ஆலமரத்தில் விலங்குகள் விளையாடும் பாடல் காட்சி

ஆலமரத்துல விளையாட்டு

அணிலே அணிலே கைதட்டு

குக்கூ குக்கூகுயில்பாட்டு

கொஞ்சும் கிளியே தலையாட்டு

குட்டிக்குரங்கே வாலாட்டு

குள்ள நரியே தாலாட்டு

சின்ன முயலே மேளங்கொட்டு

சிங்கக்குட்டியே தாளந்தட்டு

எல்லாருந்தான் ஆடிக்கிட்டு

ஏலேலேலோ பாடிக்கிட்டு

ஒன்றாகத்தான் சேர்ந்துகிட்டு

ஓடிவாங்க துள்ளிக்கிட்டு

விளையாடலாம் வாங்க

மாணவர்கள் வரிசையாக நடக்கும் விளையாட்டு

இடிக்காமல் நடப்போம்

இடுப்பில் கை

வைத்தபடி ஒருவரோடு

ஒருவர் இடிக்காமல் நடப்போம்

பல்வேறு விலங்குகள் போல நடிக்கும் செயல்பாடு

நடிப்போம் நடிப்போம்

விரும்பியபடி மாறி நடித்துக்காட்டுவோம்

கா... கா...

கா.. கா...

மியாவ்! மியாவ்!

இலையும்.... காயும்.....

படத்தைப் பார்த்துக் கதை கூறி மகிழ்வோம்

படக் கதை - இலையும் காயும்