1st Grade Maths: Geometry - Introduction to Basic Shapes | Term 2 Unit 1

1st Grade Maths: Geometry - Introduction to Basic Shapes | Term 2 Unit 1

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : வடிவியல்

1st Maths : Term 2 Unit 1 : Geometry

அடிப்படை வடிவங்கள் - அறிமுகம்

அடிப்படை வடிவங்கள் : சதுரம், முக்கோணம், செவ்வகம், வட்டம்

பயணம் செய்வோம்

கடைக்குச் செல்வோமா?

கடை காட்சி

முயன்று பார்

முன் பக்கத்தில் உள்ள படத்திற்கு ஏற்ப கீழ்க்காணும் பொருட்களுக்கு வண்ணம் தீட்டுக.

வண்ணம் தீட்டும் பயிற்சி

கற்றல்

அடிப்படை வடிவங்களின் பெயர் அறிவோம்.

அடிப்படை வடிவங்கள் - சதுரம், செவ்வகம், முக்கோணம், வட்டம்

முயன்று பார்

மேற்கண்ட ஒவ்வொரு வடிவத்திற்கும் மேலும் ஓர் எடுத்துக்காட்டு தருக.

செய்து பார்

பொருளுக்கு உரிய ஒத்த வடிவத்தில் உன் விரல் ரேகையை வைக்கவும்.

விரல் ரேகை வைக்கும் பயிற்சி

செயல்பாடு

களிமண்ணில் கைவண்ணம்

உனக்குத் தெரிந்த வடிவங்களைக் களிமண்ணில் உருவாக்கி, காட்சிப்படுத்துக.

முயன்று பார்

புள்ளிகளை இணைத்து அடிப்படை வடிவங்களை உருவாக்குக.

புள்ளிகளை இணைக்கும் பயிற்சி

நீயும் கணித மேதைதான்

(i) மேலே உள்ள புள்ளிகளை இணைத்து அடிப்படை வடிவங்களை வெவ்வேறு அளவுகளில் வரைய முடியுமா?

(ii) மேற்கண்ட செயல்பாட்டில் புள்ளிகளை இணைத்து வட்டம் வரைய முடியுமா?

மகிழ்ச்சி நேரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒத்த வடிவங்களுக்கு ஒரே வண்ணம் தீட்டுக. அவற்றின் எண்ணிக்கையை எழுதுக.

வண்ணம் தீட்டி எண்ணும் பயிற்சி

விளையாட்டு - 1

கை தட்டுவோம்

கை தட்டும் விளையாட்டு

வழிமுறை:

❖ சதுரம், செவ்வகம், வட்டம் மற்றும் முக்கோணம் ஆகிய வடிவங்களைத் தரையின் மேல் வரைக.

❖ ஆசிரியர் கை தட்டத் தொடங்கியவுடன் மாணவர்கள் வடிவங்களைச் சுற்றி ஓட வேண்டும்.

❖ ஆசிரியர் கை தட்டுவதை நிறுத்தியவுடன் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த வடிவத்தின் மேல் நிற்க வேண்டும்.

❖ ஆசிரியர் ஏதேனும் ஒரு வடிவம் வரைந்த மின்னட்டையை எடுத்துக் காண்பிக்க வேண்டும். ஆசிரியர் காண்பித்த வடிவத்தின் மேல் நிற்கும் மாணவர்கள், கை தட்டிக்கொண்டே அவ்வடிவத்தின் பெயரைச் சத்தமாகக் கூற வேண்டும். (எ.கா: ஆசிரியர் சதுர வடிவ அட்டையைக் காண்பித்தால், சதுர வடிவத்தின் மேல் நிற்பவர்கள் கை தட்டிக்கொண்டே 'சதுரம்' என்று சத்தமாகக் கூற வேண்டும்.)

❖ இதேபோல் அனைத்து வடிவங்களையும் நன்கு அறியும்வரை விளையாட்டைத் தொடரவும்.

விளையாட்டு - 2

வடிவங்களாய் மாறுவோம்

வடிவங்களாய் மாறும் விளையாட்டு

வழிமுறை:

❖ மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 2 அல்லது 3 குழுக்களாகப் பிரிக்கவும்.

❖ ஆசிரியர் ஏதேனும் ஒரு வடிவத்தின் பெயரைக் கூறியவுடன் குழுக்களில் உள்ள மாணவர்கள் ஒன்று சேர்ந்து அந்த வடிவ அமைப்பில் நிற்க வேண்டும்.

❖ சரியாகவும், வேகமாகவும் வடிவமாக மாறிய குழுவைப் பாராட்டலாம்.

❖ இதே போன்று வெவ்வேறு வடிவங்களுக்கும் விளையாட்டைத் தொடரலாம்.