1st Grade Maths: Term 3 Unit 2 - Numbers from 21 to 99 | Samacheer Kalvi

1st Grade Maths: Term 3 Unit 2 - Numbers from 21 to 99 | Samacheer Kalvi

கலைச்சொற்கள்

எண்கள், முன்னோக்கி, பின்னோக்கி, தாவி எண்ணுதல்

கற்றல்: 10-இன் குடும்பம்

பத்துகளின் குடும்பம்

ஆசிரியருக்கான குறிப்பு

விதைகள், மணிகள், குச்சிகள், கூழாங்கற்கள் போன்ற எளிதில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி மேற்காணும் எண்களை மாணவர்களிடத்தில் வலுவூட்டலாம்.

செய்து பார்

எண்களை எழுதுக.

எண்களை எழுதுதல் பயிற்சி

முயன்று பார்

கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கேற்ப கட்டங்களை வண்ணமிடுக.

வண்ணமிடுதல் பயிற்சி

செய்து பார்

பொருத்துக.

பொருத்துக பயிற்சி

நீயும் கணித மேதைதான்

வேறுபட்டதை (✔) செய்க.

வேறுபட்டதை கண்டறிதல்

ஆசிரியருக்கான குறிப்பு

சமமான எண்ணிக்கை உடையவற்றை செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ வரிசைப்படுத்தினாலும் மதிப்பு மாறாது.

கற்றல்: எண்கள் 21 முதல் 30 வரை

எண்கள் 21-30

கற்றல்: எண்கள் 31 முதல் 40 வரை

எண்கள் 31-40

கற்றல்: எண்கள் 41 முதல் 50 வரை

எண்கள் 41-50

செய்து பார்

எண்களை எழுதுக.

எண்களை எழுதுதல் பயிற்சி 2

செயல்பாடு

தேவையான பொருள்கள்:

ஒவ்வொன்றும் பத்துக் குச்சிகள் கொண்ட 4 கட்டுகள் மற்றும் 10 உதிரி குச்சிகள்

எண்கள் 1 முதல் 50 வரை எழுதப்பட்ட எண்ணட்டைகள்

வழிமுறை:

வகுப்பிலுள்ள மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்கவும்.

ஒரு குழுவிற்குக் குச்சிகளையும், மற்ற குழுவிற்கு எண் அட்டைகளையும் கொடுக்கவும்.

ஒரு குழு காட்டும் எண்ணட்டைக்கேற்ப, மற்ற குழு அந்த எண்ணிற்குரிய குச்சிகளை எடுத்து வைக்க வேண்டும்.

எடுத்து வைக்கப்பட்ட குச்சிகள் சரியான எண்ணிக்கையில் உள்ளனவா என எண்ணட்டைகள் வைத்துள்ள குழு, சரிபார்க்க வேண்டும்.

மாணவர்கள் எண்களை நன்கு அறியும் வரை, ஆசிரியர் இச்செயல்பாட்டினைத் தொடரலாம்.

முயன்று பார்

வண்ணமிடப்பட்ட கட்டங்களை எண்ணி எழுதுக.

வண்ண கட்டங்களை எண்ணுதல்

கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கேற்பக் கட்டங்களுக்கு வண்ணமிடுக.

எண்ணிற்கு ஏற்ப வண்ணமிடுதல்

மகிழ்ச்சி நேரம்

விடுபட்ட எண்களை எழுதுக.

விடுபட்ட எண்களை நிரப்புதல்

கற்றல்: எண்கள் 51 முதல் 99 வரை

எண்கள் 51-99 எண்கள் 51-99 அட்டவணை

செய்து பார்

எண்களை எழுதுக.

எண்களை எழுதுதல் பயிற்சி 3

முயன்று பார்

லட்டுகள் எத்தனை? முட்டைகள் எத்தனை?

லட்டுகள் மற்றும் முட்டைகளை எண்ணுதல்

விளையாட்டு: எண் சக்கரம்

எண் சக்கரம் விளையாட்டு

தேவையானபொருள்கள்:

படத்தில் உள்ளது போன்ற சுழலட்டை

99 மணிகள் / விதைகள் / குச்சிகள் - 2 சோடிகள்

வழிமுறை:

வகுப்பிலுள்ள மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் 99 மணிகள் / விதைகள் / குச்சிகள் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒரு மாணவனை அழைத்துச் சுழலட்டையைச் சுழலச் செய்து, ஓர் எண்ணை உருவாக்கச் செய்தல்.

இரு குழுவினரும் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற எண்ணிற்கேற்ப மணிகள் / குச்சிகள் / விதைகளைக் கொண்டு பத்துகளையும், ஒன்றுகளையும் உருவாக்கி அடுக்க வேண்டும். (எடுத்துக்காட்டாக 34 என்ற எண்ணைப்பெற்றால், 3 பத்துகளாகவும் 4 ஒன்றுகளாகவும் அமைக்க வேண்டும்.)

பின்னர் இரு குழுவினரும் தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற எண்களை ஒருவருக்கொருவர் ஒப்பிட்டு எது பெரியது / எது சிறியது என்று கூற வேண்டும்.

நீயும் கணித மேதைதான்

எண் அட்டவணையை நிரப்புக.

எண் அட்டவணை

2-இல் தொடங்கும் எண்களை எழுதுக.

2 20 21 22 23 24 25 26 27 28 29

6-இல் தொடங்கும் எண்களை எழுதுக.

6 61 62 63 64 65 66 67 68 69

1-இல் முடியும் எண்களை எழுதுக.

1 21 31 41 51 61 71 81 91

4-இல் முடியும் எண்களை எழுதுக.

4 24 34 44 54 64 74 84 94

மேலே உள்ள அட்டவணையில் ஒரே எண் தொடர்ந்து இருமுறை வரும் கட்டங்களை வண்ணமிடுக. அவற்றைக் கீழ்வரும் கட்டங்களில் எடுத்து எழுதுக.

ஒரே எண்கள்

எண் அமைப்புகளை நிறைவு செய்க.

அ. 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90

ஆ. 5, 15, 25, 30, 35, 40, 45, 50, 55, 60

இ. 3, 13, 23, 33, 43, 53, 63, 73, 83, 93

மகிழ்ச்சி நேரம்

முன்னோக்கி எண்ணி விடுபட்ட எண்களை எழுதுக.

முன்னோக்கி எண்ணுதல்

பின்னோக்கி எண்ணி விடுபட்ட எண்களை எழுதுக.

பின்னோக்கி எண்ணுதல்