1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்
தாவி எண்ணுதல்
பயணம் செய்வோம்
'நண்பா! நான்'
கற்களில் மட்டும் தாவி" இங்கு வந்துள்ளேன்.
சரி. அப்போ நான்
கற்களில் மட்டும் தாவி' அங்கு வருவேன்.



கற்றல்
இரண்டிரண்டாக முன்னோக்கி எண்ணுதல்.

எண்கோட்டினைப் பயன்படுத்திப் பின்வருவனவற்றை நிரப்புக.
1 3 5 7 9 11 13 15 17 19 21
மூன்று மூன்றாக முன்னோக்கி எண்ணுதல்.

எண்கோட்டினைப் பயன்படுத்திப் பின்வருவனவற்றை நிரப்புக.
1 4 7 10 13 16 19
இரண்டிரண்டாகப் பின்னோக்கி எண்ணுதல்.

எண்கோட்டினைப் பயன்படுத்திப் பின்வருவனவற்றை நிரப்புக.
20 18 16 14 12 10 8 6 4 2
மூன்று மூன்றாகப்பின்னோக்கி எண்ணுதல்.

எண்கோட்டினைப் பயன்படுத்திப் பின்வருவனவற்றை நிரப்புக.
20 17 14 11 8 5 2
செய்து பார்
இரண்டிரண்டாக எண்ணி நிரப்புக.

மூன்று மூன்றாக எண்ணி நிரப்புக.

செயல்பாடு

❖ மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்பக் குழுக்களாகப் பிரிக்கவும்.
❖ ஒவ்வொரு குழுவினருக்கும் ஒவ்வொரு மாத நாள்காட்டியைக் கொடுக்கவும்.
❖ இருவேறு வண்ணங்களில் பொட்டுகளைக் கொடுக்கவும். (எடுத்துக்காட்டு: 2-களுக்கு வண்ணப் பொட்டும், 3-களுக்கு
வண்ணப் பொட்டும் பயன்படுத்துமாறு அளித்தல்.)
❖ ஒரு குழு இரண்டிரண்டாக முன்னோக்கி எண்ணும் செயல்பாட்டிற்கு, 2-இல் தொடங்கி ஒவ்வொரு தாவுதலுக்கும் வண்ணப் பொட்டுகளை ஒட்ட வேண்டும்.
❖ இதேபோல் மற்ற குழு மூன்று மூன்றாக முன்னோக்கி எண்ணும் செயல்பாட்டிற்கு, 3-இல் தொடங்கி ஒவ்வொரு தாவுதலுக்கும் வண்ணப் பொட்டுகளை ஒட்ட வேண்டும்.
❖ குழுவை மாற்றியும் இச்செயல்பாட்டினைச் செய்துபார்க்கலாம் .
நீயும் கணித மேதைதான்
விடுபட்ட எண்களை எழுதுக.
❖ 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20
❖ 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30
❖ மேற்காணும் தொடரில் உள்ள அமைப்புகளை உற்றுநோக்குக. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள விதியினைக் கூறுக.
மகிழ்ச்சி நேரம்
இரண்டிரண்டாக, மூன்று மூன்றாகத் தாவி வரும் எண்களைக் கண்டறிந்து, அவற்றில் இரண்டிரண்டாகத் தாவி வரும் எண்ணிற்கு வண்ணமும், மூன்று மூன்றாகத் தாவி வரும் எண்ணிற்கு
வண்ணமும் தீட்டுக.

எந்த எண்களுக்காவது ஒன்றுக்கும் மேற்பட்ட வண்ணம் தீட்டப்பட்டுள்ளதா? ஆம் எனில், அவை எந்தெந்த எண்கள்? பட்டியலிடுக.
