1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : காலம்
கலைச்சொற்கள்
காலம், முன்னர், பின்னர், வேகமாக, மெதுவாக
பயணம் செய்வோம்
முகிலுடன் ஒரு நாள்

செய்து பார்
காலை நேரச் செயல்பாடுகளுக்கு வண்ணமும், மாலை நேரச் செயல்பாடுகளுக்கு வண்ணமும் தீட்டுக.

செயல்பாடு
❖ காலை முதல் இரவு வரை நிகழும் செயல்பாடுகளைப் பட மின்னட்டைகளாகத் தயாரிக்கவும்.
❖ குழந்தைகளை வட்டமாக அமர வைக்கவும்.
❖ ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பட மின்னட்டையை வழங்க வேண்டும்.
❖ பட மின்னட்டையைப் பெற்ற மாணவர் அச்செயல்பாட்டினை சைகை மூலம் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்.
❖ பிற மாணவர்கள் அவருடைய சைகையை உற்றுநோக்கி அச்செயல்பாட்டையும், அது எந்த வேளையில் நிகழும் என்பதையும் கூற வேண்டும்.
❖ சரியாகச் செய்தவரைப் பாராட்டி, மற்றவர்களுக்கும் இச்செயல்பாட்டினைத் தொடரலாம்.
கற்றல்
ஒரு நாளில் கால நேர பொழுதுகளில் ஏற்படும் மாற்றங்கள்.

செய்து பார்
செயல்பாடுகளை அதற்குரிய கால நேரப் பொழுதுகளுடன் பொருத்துக.

முயன்று பார்
அன்றாட நிகழ்வுகளின் படங்களை உற்றுநோக்குக. கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு -இன் மேல் பொருத்தமான வண்ணம் தீட்டுக.

கற்றல்
முன்னர்-பின்னர்

முயன்று பார்
படங்களை உற்றுநோக்கி முன்னர் - பின்னர் நிகழ்வுகளின் அடிப்படையில் 1,2,3 என வரிசைப்படுத்துக.

செய்து பார்
படத்தை உற்றுநோக்கி முன்னர் - பின்னர் மாற்றத்திற்கேற்ப வண்ணமிடுக.

கற்றல்
பழையது – புதியது

செய்து பார்
பழைய பொருள்களை அதற்குரிய புதிய பொருள்களுடன் பொருத்துக.

கூடுதலாக அறிவோம்
பழங்காலத்தில் தகவல்களைப் பதிவு செய்ய ஓலைச்சுவடி பயன்படுத்தப்பட்டது. பின்னர் அதற்குப் பதிலாக புத்தகம் பயன்படுத்தப்படுகிறது.

கற்றல்
வேகமாக-மெதுவாக

நண்டு வேகமாகச் செல்லும்
நத்தை மெதுவாகச் செல்லும்,
செய்து பார்
வேகமாகச் செல்லும் வண்டியை (✔) செய்க

மகிழ்ச்சி நேரம்
வண்ணமிடலாமா?

எந்தப் படத்திற்கு விரைவாகவும் தெளிவாகவும் வண்ணமிட முடியும்? ஏன்?
கற்றல்
குறைந்த நேரம் - அதிக நேரம்

சிறிய வாளியில் நீர் நிரம்ப குறைந்த நேரமாகும்.
பெரிய வாளியில் நீர் நிரம்ப அதிக நேரமாகும்.
நீயும் கணித மேதைதான்
கிண்ணத்தில் உள்ள எண்ணெய்யைக் காலியாக உள்ள பாட்டிலுக்கு மாற்ற, இரண்டு கரண்டிகளில் எதனைத் தேர்ந்தெடுப்பாய்? ஏன்?

முயன்று பார்
யார் முதலில் பள்ளியைச் சென்றடைவார்? ஏன்?

பதில்: பையன் முதலில் அடைவார். ஏனெனில் பள்ளிக்கு அருகில் இருக்கிறார்.