1st Grade Maths Term 3 Unit 5: Information Processing - Assembling Parts

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம் - பாகங்களைப் பொருத்துதல்

தகவல் செயலாக்கம் | பருவம் 3 அலகு 5 | 1 ஆம் வகுப்பு கணக்கு - பாகங்களைப் பொருத்துதல் | 1st Maths : Term 3 Unit 5 : Information Processing

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம்

பாகங்களைப் பொருத்துதல்

அலகு 5

தகவல் செயலாக்கம்

கலைச்சொற்கள்

பாகங்கள், பிரித்தல், பொருத்துதல், வழிமுறைகள்

பயணம் செய்வோம்

பாகங்களைப் பொருத்திப் பொம்மையை உருவாக்கலாமா?

பொம்மையின் பாகங்கள்

முதலில் பொம்மையின் அடிப்பாகத்தை வைப்பேன்.

அதன் மேல், அடுத்த பாகம்.

இப்பொழுது மூன்றாம் பாகம்.

ஆஹா! சரியான முறையில் அழகான பொம்மையை நாம் உருவாக்கிவிட்டோம்.

கற்றல்

பொருத்துதல்

பொருத்துதல் செயல்பாடு

தேவையான பொருள்கள்: எளிமையாகப் பிரித்தெடுத்து, மீண்டும் ஒன்று சேர்க்கக் கூடிய பாகங்கள் கொண்ட பொம்மைகள்.

செயல்முறை:

ஆசிரியர் பொம்மையை எடுத்து அதன் பாகங்களைப் பிரித்துக் கலைத்திட வேண்டும். வழிமுறையைக் கூறிக்கொண்டே கலைக்கப்பட்ட பாகங்களை ஒவ்வொரு பாகமாகச் சேர்த்து, மீண்டும் பொம்மையை உருவாக்க வேண்டும். கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டைப் போல, மற்றொரு பொம்மை உருவாக்குதலைக் குழுச்செயல்பாடாக மாணவர்களைச் செய்ய வைத்துப் பாடக்கருத்தை வலுப்படுத்தலாம்.

எடுத்துக்காட்டு

பொம்மை பாகங்கள் எடுத்துக்காட்டு

நீயும் கணித மேதைதான்

பாகங்கள் இங்கே! வண்டி எங்கே?

வண்டியின் பாகங்கள்

மேற்காணும் பாகங்களைப் பொருத்தி உருவாக்கப்பட்ட சரியான வண்டியினை (✔) செய்க.

சரியான வண்டியைத் தேர்ந்தெடு

கற்றல்

பாகங்களைப் பொருத்துதல் கற்றல்

செயல்பாடு

நானே பொருத்துவேன்.

1. வகுப்பை இரண்டு குழுக்களாகப் பிரிக்கவும்.

2. ஆசிரியர், குழுவினரை வார இதழ்கள் மற்றும் நாளிதழ்களில் உள்ள படங்களைச் சேகரிக்கச் செய்து, தனித்தனியே ஒவ்வொரு படத்தினையும் நான்கு சம பாகங்களாகப் பிரித்து வைக்க உதவி செய்யவும்.

3. ஒவ்வொரு குழுவும் மற்ற குழு கொடுக்கும் கலைக்கப்பட்ட படப் பாகங்களைப் பொருத்தி, சரியான படத்தை உருவாக்க வேண்டும்.

4. ஆசிரியர் இச்செயல்பாடுகளைப் பார்வையிட்டுப் பாராட்டி வலுவூட்ட வேண்டும்.

5. அடுத்த சுற்றில் குழுக்கள் இரண்டும் வேறு இரு சோடிப் படங்களைக் கொண்டு செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

குழு செயல்பாடு

செய்து பார்

படங்களைப் பொருத்தவும்.

படத்திற்குரிய பாகங்களைக் கோடிட்டு இணைக்கவும்.

படங்களை பாகங்களுடன் பொருத்துக

முயன்று பார்

மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடி.

மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடிக்கும் பயிற்சி

ஆசிரியருக்கான குறிப்பு: மேற்கண்டது போல, மேலும் பட அட்டைகளைத் தயார்செய்து, மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடிக்க ஊக்குவிக்கவும்.

செய்து பார்

விடுபட்ட பாகத்தை (✔) செய்க.

விடுபட்ட பாகத்தை தேர்ந்தெடுக்கும் பயிற்சி

செயல்பாடு

விலங்குகளின் சரியான பாகத்தை வட்டமிடவும்.

சரியான விலங்கு பாகத்தை வட்டமிடுக

செய்து பார்

கணித மாதிரிகளை அவற்றால் உருவாக்கப்பட்ட உருவத்துடன் பொருத்துக.

கணித மாதிரிகளை உருவங்களுடன் பொருத்துக

மகிழ்ச்சி நேரம்

சரியான முறையில் பொருத்தப்பட்ட பட அட்டைகளைக் கண்டுபிடித்து (✔) செய்க.

சரியாகப் பொருத்தப்பட்ட பட அட்டைகள்