1st Standard EVS: My Wonderful Body | Term 1 Unit 2 | Samacheer Kalvi

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 1 அலகு 2 : எனது அற்புதமான உடல்

எனது அற்புதமான உடல்

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 1 அலகு 2

கற்றல் நோக்கங்கள்

❖ உடல் உறுப்புகளின் பெயர்களைக் கூறல்

❖ பல்வேறு புலன்களை அடையாளம் காணல்

❖ தன் சுத்தம் பேணுதல்

கற்றல் நோக்கங்கள்

நாம் பேசுவோமா!

❖ விளையாடுதல். நடத்தல், ஓடுதல், கேட்டல். பார்த்தல், நுகர்தல், சுவைத்தல் மற்றும் தொட்டு உணர்தல் போன்ற செயல்களை நாம் மேற்கொள்கிறோம்.

❖ சில உடல் உறுப்புகளை நம்மால் பார்க்க இயலும். சில உறுப்புகளைப் பார்க்க இயலாது. ஏனெனில், அவை உடலின் உள்ளே உள்ளன.

❖ சில உடல் உறுப்புகள் எண்ணிக்கையில் இரண்டாக உள்ளன. அவற்றுள் சிலவற்றை உங்களால் கூற முடியுமா?

இப்பாடலின் மூலம் நம் உடல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களை நாம் அறிவோமா!

பாடல் நேரம்

பாடல் நேரம்

தலையை ஆட்டு தலையை ஆட்டு

சொய்ங் சொய்ங் சொய்ங்.

கண்ணைச் சிமிட்டுகண்ணைச் சிமிட்டு

கிளிங் கிளிங் கிளிங்...

கையைத் தட்டு கையைத் தட்டு

கிளப் கிளப் கிளப்...

காலைத் தட்டு காலைத் தட்டு

தப் தப் தப்...

நம் உடல் உறுப்புகளை அறிவோமா!

உடல் உறுப்புகள்

உடல் உறுப்புகளின் பெயர்களை உரிய பாகத்தோடு இணைப்போமா?

உடல் உறுப்புகளை இணைத்தல்

படங்களை உற்றுநோக்கு

வருண் தன் உடலால் பல்வேறு இயக்கங்களை மேற்கொள்கிறான். அதே செயல்களை நாமும் செய்து பார்ப்போமா !

உடல் இயக்கங்கள்

நடத்தல், பிடித்தல், தோப்புக்கரணம், குதித்தல், மூக்கைத் தொடுதல், கண் புருவத்தை உயர்த்துதல், வளைதல், எறிதல், கயிறு தாண்டுதல், உதைத்தல், தூக்குதல், கண் இமைத்தல்.

இதே போன்று வேறு என்ன செயல்களை உன்னால் செய்ய முடியும்?

❖ நம் உடலில் உள்ள உறுப்புகளுள் சில எண்ணிக்கையில் இரண்டாகவும் சில ஒன்றாகவும் காணப்படுகின்றன.

❖ உங்கள் கை மற்றும் விரல்களில் கோடுகள் உள்ள இடங்களை உங்களால் மடக்க முடியும். முயற்சி செய்து பார்ப்போமா?

கை மடித்தல்

❖ நாம் பல்வேறு விதமான உணர்வுகளான மகிழ்ச்சி, சோகம், பயம், கோபம் போன்றவற்றை அனுபவிக்கிறோம். அந்த உணர்வுகளை நாம் முக பாவனைகள் மூலம் வெளிப்படுத்துகிறோம். இந்த முகபாவனைகளை செய்து பார்க்க நாம் முயற்சிப்போமா!

முக பாவனைகள்

படத்தில் இரண்டாக உள்ள உறுப்புகளை இரண்டு என்ற எண்ணுடனும் ஒரே ஒரு உறுப்பாக உள்ளவற்றை ஒன்று என்ற எண்ணுடனும் இணைப்போமா!

உறுப்புகளை எண்ணுதல்

முகபாவனைகளை வரைவோமா?

முகபாவனைகள் வரைதல்

உங்களுக்குத் தெரியுமா?

● ஒட்டகச்சிவிங்கிக்கு நீளமான கழுத்து உண்டு.

● யானைக்கு நீளமான தும்பிக்கை உண்டு.

ஒட்டகச்சிவிங்கி மற்றும் யானை

பாடல் நேரம்

வலது மற்றும் இடது

பாடலை நாம் பாடுவோமா!

வலது மற்றும் இடது

சிக்குபுக்கு சிக்குபுக்கு தொடர்வண்டி (2)

நேரே போகுது தொடர்வண்டி (2)

சிக்குபுக்கு சிக்குபுக்கு தொடர்வண்டி (2)

இடப்பக்கம் திரும்புது தொடர்வண்டி (2)

வலப்பக்கம் திரும்புது தொடர்வண்டி (2)

இடக்கை இது சிக் சிக் சிக் (2)

வலக்கை இது புக் புக் புக் (2)

இதே போல் வலது கால் இடது கால், தலை மற்றும் உடல் முழுமைக்கும் பாடலைத் தொடர்ந்து பாடுவோமா!

உங்கள் கை விரல்களுக்கு பெயர் உண்டு. அவ்விரல்களின் பெயர்களை அறிவோமா!

விரல்களின் பெயர்கள்

❖ ஒவ்வொரு படத்திலும் வலது பக்கத்திற்கு உரியதை சிவப்பு நிறத்திலும் இடது பக்கத்திற்கு உரியதை நீல நிறத்திலும் வண்ணமிடலாமா!

வண்ணமிடும் பயிற்சி

❖ 'உங்களின் கட்டை விரல் ரேகை தனிச்சிறப்பானது. உங்கள் கட்டை விரல் ரேகையை முதல் கட்டத்தில் அச்சிடவும். உங்கள் நண்பனின் கட்டை விரல் ரேகையை அடுத்த கட்டத்தில் அச்சிடச் சொல்லவும். அவை இரண்டும் ஒரே மாதிரியாக உள்ளனவா?

கட்டை விரல் ரேகை

❖ உங்கள் நண்பர்களுடன் "ராஜா சொல்கிறேன்" அல்லது "ராணி சொல்கிறேன்" விளையாட்டை விளையாடலாமா?

விளையாட்டு

என் புலன்கள்

நான் பல்வேறு ஒலிகளை என் காதால் கேட்கிறேன். சில ஒலிகள் சத்தமாகவும் சில ஒலிகள் மென்மையாகவும் உள்ளன.

ஒலிகள்

ஒவ்வொரு நாளும் உங்களைச் சுற்றி நீங்கள் என்னென்ன ஒலிகளைக் கேட்கிறீர்கள்? உங்களுக்குப் பிடித்த ஒலி எது?

நாம் விளையாடலாமா!

உங்கள் கண்களைத் துணியால் கட்டவும். பிற மாணவர்களை உங்களைச் சுற்றி நிற்கச் சொல்லவும். ஒவ்வொரு மாணவரும் ஏதேனும் ஒரு விலங்கு போன்று ஒலி எழுப்ப வேண்டும். என்னென்ன ஒலிகள் எழுப்பப்பட்டன என்பதை நீங்கள் கூற வேண்டும். குரல் வந்த திசையைச் சுட்டிக் காட்டவும்.

விளையாட்டு

நாம் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை நம் கண்களால் பார்க்கிறோம். அங்கே பல்வேறு வடிவங்கள், அளவுகள். வண்ணங்களை நாம் பார்க்கிறோம்.

❖ படத்தை உற்றுநோக்கி அவர்கள் என்ன செய்கிறார்கள் எனக் கூறு.

செயல்பாடுகள்

❖ கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களைப் பார். நாமும் நம்முடைய உடலால் இந்த வடிவங்களை உருவாக்கலாமா!

உடல் வடிவங்கள்

உங்களுக்குத் தெரியுமா?

கழுகு, வல்லூறு, பருந்து போன்ற பறவைகள் வெகு உயரத்தில் இருந்தும் சிறிய பொருள்களையும் கூர்மையாகப் பார்க்கும் திறன் உடையவை.

பறவைகள்

நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை நாம் கண்ணால் பார்க்கிறோம். காதால் கேட்கிறோம். மேலும் தொட்டும், நுகர்ந்தும், சுவைத்தும் அறிகிறோம். இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு மற்றும் கசப்பு போன்ற பல வகையான சுவைகள் உள்ளன. நம்முடைய நாக்கு சுவையை அறிய உதவுகிறது. எடுத்துக்காட்டு: எலுமிச்சை புளிப்பு, மாம்பழம் இனிப்பு, பாகற்காய் கசப்பு, உங்களுக்கு என்ன சாப்பிடப் பிடிக்கும்?

சுவைகள்

நம்முடைய மூக்கு பல வகையான மணங்களை நுகர உதவுகிறது.

எவற்றின் மணம் உங்களுக்குப் பிடிக்கும்? எவற்றின் மணம் உங்களுக்குப் பிடிக்காது?

மணங்கள்

❖ உங்கள் பள்ளி வளாகத்தில் இயற்கை உலாச் செல்வோமா!

தாவரங்களையும் மண்ணையும் தொட்டு உணர். மலரைத் தொட்டுப்பார். அதுமென்மையாக இருக்கும். மரக்கட்டையைத் தொட்டுப்பார். அது கடினமாக இருக்கும். என்னென்ன பொருள்களைத் தொட்டுப்பார்க்க நீ விரும்புகிறாய்?

தொடு உணர்வு

❖ உங்கள் நண்பனின் கண்களைத் துணியால் கட்டவும். உங்கள் நண்பனிடம் வேறுபட்ட உணவுப் பொருள்களைக் கொடுத்து அவற்றைநுகர்ந்தும், சுவைத்தும், உணர்ந்தும் அவை என்னபொருள் என்பதைக் கண்டுபிடித்துக் கூறச் சொல்லவும்.

இது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

ஹை... எனக்குத் தெரியுமே... இது எலுமிச்சம் பழம்

விளையாட்டு

உங்களுக்குத் தெரியுமா?

நாய்

நாயின் நுகர்வுத் திறன் மனிதனின் நுகர்வுத் திறனை விட 40 மடங்கு அதிகம்.

கதை நேரம்

இவள் பெயர் மாலா அவள் காலையில் துயில் எழுகிறாள். இது தான் கிருமி. கண்களுக்குக் தெரியாது. மிகச் சிறியது. உடலைத் தாக்குவதற்கு காத்துக் கொண்டிருக்கிறது. காலையில் எழுந்ததும் பல் துலக்குகிறாள். குளிக்கிறாள் சோப்பு கிருமியைத் தாக்குகிறது. சுத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறாள். கிருமி சோகமாகி விட்டது பள்ளிக்குச் செல்கிறாள் பின்னர் இடைவேளையின் போது கழிவறைக்குச் செல்கிறாள். கழிவறைக்குச் சென்று வந்த பின் சோப்பு போட்டுக் கை கழுவவில்லை. கிருமி மகிழ்ச்சியாகி விட்டது, மாலாவின் நகங்களுக்குள் கிருமி சென்று விட்டது. மதிய உணவு உண்கிறாள். மாலாவின் வயிற்றுக்குள் கிருமி செல்கிறது. மாலாவின் உடல்நலம் பாதிப்படைகிறது. மருத்துவரிடம் செல்கிறாள் மாலாவிடம் உணவு உண்பதற்கு முன்பும் கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் சோப்பு போட்டுக் கைகளை கழுவ வேண்டும் என்று கூறினார். மருத்துவர் மாலாவிற்கு மருந்து தருகிறார். மாலா குணமடைந்து விட்டாள்.

கிருமி கதை

நாம் நம்முடைய கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் மாலாவைப் போல் நம் உடல் நலமும் பாதிக்கப்படும். நம்முடைய கைகளைச் சரியான முறையில் கழுவுவது எப்படி என்பதை கீழ்காணும் படங்களிலிருந்து அறிந்து கொள்வோமா!

கை கழுவும் முறை

நாம் தினமும் காலை. இரவு என இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும். தினமும் சரியான பல் துலக்கும் முறையைப் பின்பற்றுவோமா!

பல் துலக்கும் முறை

தினசரி செயல்பாடுகள்

சுகாதாரமான தினசரி கழிவறைப் பயன்பாடு - கழிவறையைப் பயன்படுத்திய பின் நம்மை நாம் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

கழிவறைப் பயன்பாடு

❖ இந்தப் படங்கள் நம் தினசரி செயல்பாடுகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றை வரிசைப்படுத்துவோமா!

தினசரி செயல்பாடுகள் வரிசைப்படுத்தல்

❖ உங்களைச் சுத்தமாக வைத்திருக்க உதவும் பொருள்களுக்கு (✔) குறியீடுக.

சுத்தப்படுத்தும் பொருள்கள்