Class 1 Maths Term 1 Unit 2: Numbers 1 to 9 | Samacheer Kalvi

1 ஆம் வகுப்பு கணக்கு - பருவம் 1 அலகு 2: எண்கள் 1 முதல் 9 வரை

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

எண்கள் 1 முதல் 9 வரை

கலைச்சொற்கள் : எண்கள் எண்ணுதல் அதிகம்/குறைவு வரிசை

பயணம் செய்வோம்

பயணம் செய்வோம்

குட்டிப் பூனை ஒன்று

தோட்டத்தில் எட்டி எட்டிப் பார்த்ததாம்;

சிட்டுக் குருவிகள் இரண்டு

அங்கே பறந்து பறந்து வந்தனவாம்;

சுட்டிக் குரங்குகள் மூன்று

மரத்தில் தாவித் தாவிக் குதித்தனவாம்;

புள்ளி மான்கள் நான்கு

காட்டில் மகிழ்ந்து மகிழ்ந்து ஓடினவாம்;

பயணம் செய்வோம் தொடர்ச்சி

கரு மேகங்கள் ஐந்து

வானில் கூடிக் கூடிச் சேர்ந்தனவாம்;

அழகு மயில்கள் ஆறு

தோகை விரித்து விரித்து ஆடியதாம்;

வானவில் வண்ணங்கள் ஏழு

விண்ணில் வரி வரியாய்த் தோன்றியதாம்;

வலையினைச் சிலந்தி எட்டுக்

கால்களால் பின்னிப் பின்னிக் கட்டியதாம்;

அழகு முயல்கள் ஒன்பது

இவற்றை துறு துறுவெனப் பார்த்தனவாம்.

ஆசிரியருக்கான குறிப்பு

ஆசிரியர், குழந்தைகளைச் செய்கையுடன் பாடச் செய்து, 1 முதல் 9 வரையுள்ள எண்களை அறிமுகப்படுத்துதல்.

ஒன்றுக்கொன்று பொருத்துதல்

கற்றல்

ஒன்றுக்கொன்று பொருத்துதல் கற்றல்

செய்து பார்

மேலேயுள்ள படங்களை உற்று நோக்கிப் பின்வருவனவற்றிற்கு வண்ணமிடுக.

வண்ணமிடும் பயிற்சி

கற்றல்

பொருத்துதல் பயிற்சி

செய்து பார்

செய்து பார் பொருத்துதல்

அதிகம் – குறைவு

செய்து பார்

கடிகாரங்களை ஒன்றுக்கொன்று பொருத்தி அதிகக் கடிகாரங்கள் உள்ள கட்டத்தை (✔) செய்க.

அதிக கடிகாரங்கள் பயிற்சி

குறைவான பொம்மைகள் உள்ள கட்டத்தை (✔) செய்க.

குறைவான பொம்மைகள் பயிற்சி

செய்து பார்

கீழ்க்காணும் கிளிகளை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி பொருத்துக.

கிளிகளை பொருத்துதல்

எண் 1

1 முதல் 9 வரையிலான எண்களை வெவ்வேறு முறைகளில் கற்போம்.

கற்றல்

எண் 1 கற்றல்

செய்து பார்

எண் 1 பயிற்சி

எண்ணி எழுதுக.

எண்ணி எழுதுக பயிற்சி

செயல்பாடு

விலங்குகளுக்கு எத்தனை வால் இருக்கும்?

விலங்கு வால்
விடை : விலங்குகளுக்கு ஒரு வால் இருக்கும்

எண் 2

கற்றல்

எண் 2 கற்றல்

செய்து பார்

எண் 2 பயிற்சி

முயன்று பார்

இரண்டு எண் உடைய நட்சத்திரங்களை வண்ணமிட்டு அதில் உள்ள அமைப்பைக் கூறுக.

நட்சத்திரம் வண்ணமிடும் பயிற்சி

நமது உடலில் எண்ணிக்கையில் இரண்டு உள்ள உறுப்புகளைப் பட்டியலிடுக.

விடை : கண்கள், காதுகள், கைகள், கால்கள்

எண் 3

கற்றல்

எண் 3 கற்றல்

செய்து பார்

எண் 3 பயிற்சி

கொடுக்கப்பட்டுள்ள படத்தை உற்று நோக்கி எண்ணிக்கையில் மூன்று உள்ளவற்றை வட்டமிடுக.

வட்டமிடும் பயிற்சி

கூடுதலாக அறிவோம்

3 ஐக் குறிக்கும் பிற பெயர்கள் சிலவற்றைக் காண்போம்.

மும்மை, மும்முறை

எண் 4

கற்றல்

எண் 4 கற்றல்

செய்து பார்

எண் 4 பயிற்சி

கொடுக்கப்பட்டுள்ள படத்தை உற்று நோக்கி எண்ணிக்கையில் நான்கு உள்ளவற்றை வட்டமிடுக.

வட்டமிடும் பயிற்சி 2

கூடுதலாக அறிவோம்

அடிப்படைத் திசைகள் நான்கு வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு.

திசைகள்

எண் 5

கற்றல்

எண் 5 கற்றல்

செய்து பார்

எண் 5 பயிற்சி

எவையேனும் ஐந்து பானைகளை வண்ணமிடுக.

பானைகள் வண்ணமிடும் பயிற்சி

எங்ஙனம் தேர்ந்தெடுத்தாய்?

கூடுதலாக அறிவோம்

நமது உடலில் ஐந்து புலன் உறுப்புகள் உள்ளன. அவை கண், காது, மூக்கு, நாக்கு, மற்றும் தோல்.

செய்து பார்

படத்தைப் பார்த்து ஒத்த உருவங்களை எண்ணி அதன் எண்ணிக்கையை கட்டத்தில் நிரப்புக.

உருவங்களை எண்ணி நிரப்பும் பயிற்சி

செயல்பாடு

சில மணிகளை எடுத்துக் கொள்ளவும். ஆசிரியர் கூறும் எண்ணிற்கேற்ற, மணிகளை எடுக்கச் செய்து, குழந்தையின் எண்ணுதல் திறனை மதிப்பிடல்.

ஆசிரியருக்கான குறிப்பு

1 முதல் 5 வரையிலான எண்ணிக்கை உடைய எண்களை மட்டும் பயன்படுத்தவும்.

எண் 6

கற்றல்

எண் 6 கற்றல்

செய்து பார்

எண் 6 பயிற்சி

செயல்பாடு

படத்தில் காணும் நட்சத்திரத்தைக் குச்சிகளைக் கொண்டு உருவாக்கவும். எத்தனை குச்சிகள் தேவைப்படும்?

நட்சத்திரம்
6 குச்சிகள் தேவைப்படும்

முயன்று பார்

ஆறு எழுத்துகள் உடைய வார்த்தைகளை அடையாளம் கண்டு அடிக்கோடிடுக.

பதினொன்று பத்தொன்பது எழுத்துக்கள் கரும்பலகை குழந்தைகள் வண்ணங்கள், எண்கள்

விடை : பத்தொன்பது, கரும்பலகை, குழந்தைகள், வண்ணங்கள்

எண் 7

கற்றல்

எண் 7 கற்றல்

செய்து பார்

எண் 7 பயிற்சி

எவையேனும் ஏழு மரங்களுக்கு வண்ணமிடுக.

மரங்கள் வண்ணமிடும் பயிற்சி

எங்ஙனம் தேர்ந்தெடுத்தாய்?

செயல்பாடு

வானவில்

வானவில்லில் காணப்படும் நிறங்கள் எத்தனை?

விடை : வானவில்லில் காணப்படும் நிறங்கள் 7

வானவில் உருவாக்கி வண்ணம் தீட்டி மகிழ்.

எண் 8

கற்றல்

எண் 8 கற்றல்

செய்து பார்

எண் 8 பயிற்சி

எட்டுப் பந்துகள் கொண்ட தொகுப்பை வட்டமிடுக. இதை வெவ்வேறு விதங்களில் உருவாக்க இயலுமா?

பந்துகள் பயிற்சி

செயல்பாடு

கொடுக்கப்பட்ட பெங்குயின்களுக்கு கறுப்பு வண்ணம் தீட்டுக.

பெங்குயின்கள் வண்ணமிடும் பயிற்சி

எத்தனை பெங்குயின்களுக்கு வண்ணமிட்டுள்ளாய்? 8

எண் 9

கற்றல்

எண் 9 கற்றல்

செய்து பார்

எண் 9 பயிற்சி

எவையேனும் ஒன்பது பூக்களுக்கு வண்ணமிடுக.

மாற்று முறைகளில் வண்ணமிடும் வழியினைக் கூறுக.

பூக்கள் வண்ணமிடும் பயிற்சி

எண் ஒன்பது உடைய பட்டங்களுக்கு வால் வரையவும்.

பட்டங்கள் பயிற்சி

மகிழ்ச்சி நேரம்

படத்தில் உள்ள உருவங்களை எண்ணிச் சரியான எண்ணை வட்டமிடுக.

மகிழ்ச்சி நேரம் பயிற்சி