வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு | 4th Maths : Term 1 Unit 1 : Geometry
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்
கவராயத்தைக் கொண்டு வட்டம் வரைதல்
கவராயம் ஒரு பக்கம் கூரிய முனையும் மறுபக்கம் பென்சில் பொருத்தகூடிய திருகு அமைப்பும் கொண்ட கருவி ஆகும்.
கவராயத்தைக் கொண்டு வட்டம் வரைதல்
கவராயம் ஒரு பக்கம் கூரிய முனையும் மறுபக்கம் பென்சில் பொருத்தகூடிய திருகு அமைப்பும் கொண்ட கருவி ஆகும்.
எடுத்துக்காட்டு
5 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தினைக் கவராயத்தைப் பயன்படுத்தி வரைக.
படி 1
கவராயத்தை எடுத்து அதில் பென்சிலைப் பொருத்துக.
படி 2
அளவுகோலின் உதவியுடன் 5 செ.மீ அளவினைக் கவராயத்தைப் பயன்படுத்தி எடுக்க.
படி 3
கவராயத்தின் கூர்முனையைத் தாளின் மீதுள்ள ஒரு புள்ளியில் பொருத்துக.
படி 4
பென்சிலை தொடங்கிய புள்ளியை அடையும் வரை சுழற்றுக.