4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்
நாற்கரத்தின் பக்கங்களை அடையாளம் கண்டு அதன் சுற்றளவைக் காணுதல்
ஒரு மூடிய வடிவத்தின் சுற்றளவு அதன் அனைத்து பக்கங்களின் கூடுதல் ஆகும்.
நாற்கரத்தின் பக்கங்களை அடையாளம் கண்டு அதன் சுற்றளவைக் காணுதல்
சுற்றளவு
ஒரு மூடிய வடிவத்தின் சுற்றளவு அதன் அனைத்து பக்கங்களின் கூடுதல் ஆகும்.
எடுத்துக்காட்டுகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தின் பக்கங்களையும் அவற்றின் சுற்றளவுகளையும் காண்க.
(i) நாற்கரத்தின் பக்கங்கள் = \(AB, BC, CD, DA\)
(ii) நாற்கரத்தின் சுற்றளவு = \(AB + BC + CD + DA\)
(iii) நாற்கரத்தின் சுற்றளவு = \(3+8+6+2=19\)
(iv) நாற்கரத்தின் சுற்றளவு = 19 செ.மீ
(i) சதுரத்தின் சுற்றளவு = \(PQ + QR + RS + SP\)
(ii) சதுரத்தின் அனைத்து பக்கங்களும் சமம். \( = 8 + 8 + 8 + 8 = 32\)
(iii) சதுரத்தின் சுற்றளவு = 32 செ.மீ
(i) செவ்வகத்தின் சுற்றளவு = \(LM + MN + NO + OL\)
(ii) செவ்வகத்தின் எதிரெதிர் பக்கங்கள் சமம் \( = 9 + 3 + 9 + 3 = 24\)
(iii) செவ்வகத்தின் சுற்றளவு = 24 செ.மீ
(i) சாய்சதுரத்தின் சுற்றளவு = \(WX + XY + YZ + ZW\)
(ii) சாய்சதுரத்தின் அனைத்து பக்கங்களும் சமம் \( = 7 + 7 + 7 + 7 = 28\)
(iii) சாய்சதுரத்தின் சுற்றளவு = 28 செ.மீ
(i) இணைகரத்தின் சுற்றளவு = \(EF + FG + GH + HE\)
(ii) இணைகரத்தின் எதிரெதிர் பக்கங்கள் சமம் \( = 8 + 5 + 8 + 5 = 26\)
(iii) இணைகரத்தின் சுற்றளவு = 26 செ.மீ
(i) சரிவகத்தின் சுற்றளவு = \(IJ + JK + KL + LI\)
(ii) சரிவகத்தின் சுற்றளவு = \(7 + 5 + 3 + 4 = 20\)
(iii) சரிவகத்தின் சுற்றளவு = 20 செ.மீ
செயல்பாடு
உனது வகுப்பறையில் உள்ள மேசை, கரும்பலகை மற்றும் கதவின் சுற்றளவைக் கண்டுபிடி.