Properties of Quadrilaterals - 4th Standard Maths Term 1 Unit 1 Geometry

Properties of Quadrilaterals - 4th Standard Maths Term 1 Unit 1
வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - நாற்கர குடும்பத்தின் பண்புகள் | 4th Maths : Term 1 Unit 1 : Geometry
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

நாற்கர குடும்பத்தின் பண்புகள்

நாற்கரம், சதுரம், செவ்வகம், சாய்சதுரம், இணைகரம், சரிவகம்

நாற்கரம்

1. நான்கு பக்கங்கள் கொண்ட மூடிய வடிவம் நாற்கரமாகும். 2. நாற்கரத்திற்கு நான்கு பக்கங்கள் (AB, BC, CD, DA) நான்கு முனைகள் (A,B,C,D) மற்றும் இரண்டு மூலைவிட்டங்கள் (AC, BD) உள்ளன.
Quadrilateral Diagram

சதுரம், செவ்வகம், சாய்சதுரம், இணைகரம் மற்றும் சரிவகம் ஆகியவை நாற்கர குடும்பத்தைச் சேர்ந்தவை.

சதுரம்

Square Diagram
1. நான்கு சமபக்கங்களைக் கொண்டது. (PQ = QR = RS = SP) 2. நான்கு முனைகளைக் கொண்டது. (P, Q, R, S) 3. சம நீளமுள்ள இரண்டு மூலைவிட்டங்களைக் கொண்டது. (PR = QS)

எடுத்துக்காட்டு

சுண்டாட்டப் பலகை, சதுரங்க பலகை, படம்

Examples of Square

செவ்வகம்

Rectangle Diagram
1. நான்கு பக்கங்களைக் கொண்டது. (WX, XY, YZ, ZW) 2. அதன் எதிரெதிர் பக்கங்கள் சமமானவை. (WX = ZY; XY = WZ) 3. நான்கு முனைகளைக் கொண்டது. (W, X, Y, Z) 4. சம நீளமுள்ள இரண்டு மூலைவிட்டங்களைக் கொண்டது. (WY = ZX)

எடுத்துக்காட்டு

மிதியடி, கரும்பலகை, அஞ்சல் அட்டை

Examples of Rectangle

சாய்சதுரம்

Rhombus Diagram
1. நான்கு சமபக்கங்களைக் கொண்டது. (LM = MN = NO = OL) 2. நான்கு முனைகளைக் கொண்டது. (L, M, N, O) 3. இரண்டு மூலைவிட்டங்களைக் கொண்டது. (LN, MO) 4. மூலைவிட்டங்களின் நீளங்கள் சமமல்ல.

எடுத்துக்காட்டு

பட்டம், தள நிரப்பிகள் (Tiles), குறீயிட்டுப் பலகை

Examples of Rhombus

இணைகரம்

Parallelogram Diagram
1. நான்கு பக்கங்களைக் கொண்டது. (EF, FG, GH, HE) 2. அதன் எதிரெதிர் பக்கங்கள் இணையானவை மற்றும் சம நீளமானவை. (EF=HG; EH = FG) 3. நான்கு முனைகளைக் கொண்டது. (E, F, G, H)

எடுத்துக்காட்டு

அழிப்பான்

Eraser

சரிவகம்

1. ஒரு சரிவகம் நான்கு பக்கங்களைக் கொண்டது (LM, MN, NO, OL) 2. ஒரு ஜோடி எதிர்பக்கங்கள் இணையானவை (LM, LO)
Trapezoid Diagram
3. நான்கு முனைகளைக் கொண்டது (L, M, N, O) 4. இரண்டு மூலைவிட்டங்களைக் கொண்டது (LN, MO)

எடுத்துக்காட்டு

மேசை, கைப்பை

Examples of Trapezoid

செயல்பாடு

வடிவங்களின் பண்புகளைக் கலந்துரையாடுக.

Tags : Geometry | Term 1 Chapter 1 | 4th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு.