எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பெருக்கல் (ஈரிலக்க எண்கணை ஈரிலக்க எண்ணால் மற்றும் மூவிலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் பெருக்குதல்) | 4th Maths : Term 2 Unit 2 : Numbers
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்
பெருக்கல் (ஈரிலக்க எண்கணை ஈரிலக்க எண்ணால் மற்றும் மூவிலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் பெருக்குதல்)
நேப்பியர் முறையிலும் (Lattice Algorithm) தரப்படுத்தப்பட்ட வழி முறையிலும், ஈரிலக்க எண்ணை ஈரிலக்க எண்ணாலும் மூவிலக்க எண்ணை ஓரிலக்க எண்ணாலும் பெருக்குதல்.
பெருக்கல் (ஈரிலக்க எண்கணை ஈரிலக்க எண்ணால் மற்றும் மூவிலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் பெருக்குதல்)
1. நேப்பியர் முறையிலும் (Lattice Algorithm) தரப்படுத்தப்பட்ட வழி முறையிலும், ஈரிலக்க எண்ணை ஈரிலக்க எண்ணாலும் மூவிலக்க எண்ணை ஓரிலக்க எண்ணாலும் பெருக்குதல்.
ஈரிலக்க எண்ணை ஈரிலக்க எண்ணால் பெருக்குதல்:
நேப்பியர் முறை:
பெருக்குக: \( 48 \times 36 \)
\( 48 \times 36 = 1728 \)
பெருக்குக: \( 96 \times 72 \)
\( 96 \times 72 = 6912 \)
தரப்படுத்தப்பட்ட வழிமுறை:
பெருக்குக: \( 48 \times 36 \)
\( 36 = 30 + 6 \)
ஒரு பள்ளியில் ஒவ்வொரு வகுப்பறையிலும் 24 மேசைகள் உள்ளன. அப்ள்ளியில் 18 வகுப்பறைகள் இருந்தால், மொத்த மேசைகளின் எண்ணிக்கையைக் கண்டறியவும்.
தீர்வு:
ஒவ்வொரு வகுப்பறையிலுள்ள மேசைகளின் எண்ணிக்கை = 24
18 வகுப்பறையிலுள்ள மேசைகளின் எண்ணிக்கை = \( 18 \times 24 \)
\( 24 = 20 + 4 \)
தரப்படுத்தப்பட்ட வழிமுறை:
பெருக்குக: \( 18 \times 24 \)
மூவிலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் பெருக்குதல்.
நேப்பியர் வழிமுறை
\( 282 \times 9 \)
\( 282 \times 9 = 2538 \)
\( 647 \times 6 \)
\( 647 \times 6 = 3882 \)
தரப்படுத்தப்பட்ட வழிமுறை
\( 282 \times 9 \)
\( 282 \times 9 = 2538 \)
படி: 1
ஒன்றுகளைப் பெருக்கவும் :
2 ஒன்றுகள் \( \times 9 = 18 \) ஒன்றுகள்
\( = 10 \) ஒன்றுகள் \( + 8 \) ஒன்றுகள்
ஒன்றாம் இடத்தில் 8 ஐ எழுதவும், மீதி 1 ஐ பத்தாம் இடத்தில் எழுதவும்.
படி: 2
பத்துகளைப் பெருக்கவும் :
8 பத்துகள் \( \times 9 = 72 \) பத்துகள்
72 பத்துகள் \( + 1 \) பத்துகள் \( = 73 \) பத்துகள்
\( = 70 \) பத்துகள் \( + 3 \) பத்துகள்
\( = 7 \) நூறுகள் \( + 3 \) பத்துகள்
பத்தாம் இடத்தில் 3 ஐ எழுதவும், மீதி 7 ஐ - நூறாம் இடத்தில் எழுதவும்.
படி: 3
நூறுகளைப் பெருக்கவும்:
2 நூறுகள் \( \times 9 = 18 \) நூறுகள்,
18 நூறுகள் \( + 7 \) நூறுகள் \( = 25 \) நூறுகள்.
\( = 20 \) நூறுகள் \( + 5 \) நூறுகள்
\( = 2 \) ஆயிரங்கள் \( + 5 \) நூறுகள்
ஒரு புத்தகத்தில் 396 பக்கங்கள் உள்ளன. 9 புத்தகங்களில் எத்தனை பக்கங்கள் இருக்கும்?
தீர்வு:
ஒரு புத்தகத்தில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை = 396 பக்கங்கள்
9 புத்தகங்களில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை = \( 396 \times 9 \)
= 3564 பக்கங்கள்.