4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள்
குறியீட்டை அடையாளம் கண்டு பொருளை விளக்குதல்
குறியீட்டை அடையாளம் கண்டு பொருளை விளக்குதல்
விவசாயம்
அனிதாவின் காய்கறித் தோட்டம் செவ்வக வடிவில் உள்ளது. அது 4 சமபாகங்களாக பிரிக்கப்பட்டு பயிரிடப்பட்டுள்ளது. ஒரு பாகத்தில் கத்தரிக்காயும், ஒரு பாகத்தில் பூசணிக்காயும் மற்ற இரண்டு பாகங்களில் வெண்டையும் பயிரிடப்பட்டுள்ளது.
4 சமபாகம் = 1 முழுமை
கத்தரிக்காய் பயிரிடப்பட்ட பகுதி = நான்கில் ஒன்று அல்லது
பூசணிக்காய் பயிரிடப்பட்ட பகுதி = கால்பாகம் அல்லது நான்கில் ஒன்று அல்லது
வெண்டை பயிரிடப்பட்ட பகுதி = அரைபாகம் அல்லது நான்கில் இரண்டு அல்லது
வெண்டைக்காய் மற்றும் பூசணிக்காய் பயிரிடப்பட்ட பகுதி =
அல்லது நான்கில் மூன்று அல்லது முக்கால் பாகம்.