4th Science Term 1 Unit 4 Science in Everyday Life Questions and Answers

4th Science Term 1 Unit 4 Science in Everyday Life
அன்றாட வாழ்வில் அறிவியல் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு அறிவியல் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 4th Science : Term 1 Unit 4 : Science in Everyday Life

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : அன்றாட வாழ்வில் அறிவியல்

கேள்விகள் மற்றும் பதில்கள்

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : அன்றாட வாழ்வில் அறிவியல் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், மதிப்பீடு, சரியான விடையைத் தேர்ந்தெடு, கோடிட்ட இடத்தை நிரப்புக, சரியா அல்லது தவறா எனக் கூறுக, பொருந்தாத ஒன்றை வட்டமிடு, பொருத்துக, சுருக்கமாக விடையளி, விரிவாக விடையளி, உயர் சிந்தனை வினாக்கள்.

மதிப்பீடு
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சில விலங்குகளின் இளம் உயிரிகளுக்கான முதன்மை ஆற்றல் ஆதாரம்
அ) நீர்
ஆ) கனிகள்
இ) பால்
[விடை : இ) பால்]
2. பாலில் உள்ள எந்த உயிர்ச்சத்து எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது?
அ) உயிர்ச்சத்து ஈ
ஆ) உயிர்ச்சத்து சி
இ) உயிர்ச்சத்து டி
[விடை : இ) உயிர்ச்சத்து டி]
3. மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பழங்கால உணவு வகைகளுள் ஒன்று
அ) நூடுல்ஸ்
ஆ) கேக்
இ) ரொட்டி
[விடை : இ) ரொட்டி]
4. ---------- பச்சையாக உண்ணப்படக்கூடிய ஓர் உணவாகும்.
அ) வெள்ளரி
ஆ) சப்பாத்தி
இ) ரொட்டி
[விடை : அ) வெள்ளரி]
5. பாடல்களைக் கேட்க உதவும் சிறு பொறிக் கருவி
அ) பென் டிரைவ்
ஆ) புகைப்படக்கருவி
இ) கையடக்க இசைக்கருவி
[விடை : இ) கையடக்க இசைக்கருவி]
ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. பாலாடைக் கட்டி மற்றும் பன்னீர் ------------ லிருந்து தயாரிக்கப்படுகிறது.
விடை : பால்
2. ------------ மூலம் ஊட்டச்சத்துகள் செரிமானத்திற்குத் தயாராகின்றன.
விடை : சமைத்தல்
இ. பொருத்துக.

கேள்விகள் (Questions):

1. கையடக்க இசைக்கருவி ‘- உலகத்துடன் தொடர்புகொள்ளல்
2. திறன்பேசி – தகவல் சேமித்தல்
3. கை மின் விளக்கு – விளையாடுதல்
4. விரலி – வெளிச்சம் தருதல்
5. கையடக்கக் கணினி – இசையை ஒலித்தல்

விடை (Answer):

1. கையடக்க இசைக்கருவி – இசையை ஒலித்தல்
2. திறன்பேசி – உலகத்துடன் தொடர்புகொள்ளல்
3. கை மின் விளக்கு – வெளிச்சம் தருதல்
4. விரலி – தகவல் சேமித்தல்
5. கையடக்கக் கணினி – விளையாடுதல்
ஈ. ஓரிரு தொடர்களில் விடையளிக்க.
1. பாலிலிருந்து பெறப்படும் உணவுப் பொருள்கள் யாவை?
விடை :
தயிர், வெண்ணெய், மோர், நெய், பாலாடைக்கட்டி, பன்னீர் மற்றும் இனிப்புகள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள்.
2. அடுதல் மூலம் தயாரிக்கப்படும் மூன்று உணவுகளின் பெயர்களை எழுதுக.
விடை :
ரொட்டி, பிஸ்கட், கேக்.
3. திறன்பேசி எந்தெந்த வழிகளில் நமக்கு உதவுகிறது?
விடை :
தகவல் தொடர்பு தவிர, இணைய அணுகல் மற்றும் கோப்புகளைச் சேமித்தல், புகைப்படங்கள் எடுத்தல், இடங்களை அறிதல் போன்ற பல சேவைகளில் திறன்பேசிகள் பயன்படுகின்றன.
4. உணவு என்றால் என்ன?
விடை :
உணவு என்பது நமது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. உணவு நமக்கு ஆற்றல் அளிக்கிறது. பொதுவாக உணவை நாம் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறுகிறோம். நமது உடலை நலமாக – வைத்துக் கொள்ளத் தேவையான ஊட்டச்சத்துகள் உணவில் அடங்கியுள்ளன.
உ. விரிவாக விடையளிக்க.
1. சமைப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நீக்கப்படுகின்றன. சமையலின் பிற நன்மைகளை எழுதுக.
விடை :
● உணவில் பின்வரும் பயனுள்ள மாற்றங்களைச் சமையல் ஏற்படுத்துகிறது.
● ஊட்டச்சத்துகள் உடடினயாகச் செரிமான மடைய உதவுகிறது.
● உணவை விரும்பும் தன்மை, மணம், சுவையுடன் தயாரிக்க உதவுகிறது.
● தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை இது அழிக்கிறது.
2. நாம் ஏன் பாலைப் பருக வேண்டும்?
விடை :
பாலைப் பருகுவதன் நன்மைகள் :
● எலும்புகளையும் பற்களையும் வலுப்படுத்துகிறது.
● இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கிறது.
● இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
● இது ஓர் ஆற்றல் மூலமாகும்.
ஊ. செயல் திட்டம்.
1. நீ பயன்படுத்தியுள்ள சிறு பொறிக் கருவிகளைப் பட்டியலிடுக.
2. பல்வேறு வகையான பால் பொருள்களை அட்டவணைப்படுத்துக.
செய்து பார்ப்போமா!

பாத்திரத்தில் நீரை ஊற்றுவது, ஆம்லெட் அல்லது தோசை மேல் மிளகுத் தூளை போடுவது, வெங்காயத்தின் தோலை உரிப்பது கொத்துமல்லி விதைகளைப் பொடியாக்குவது போன்ற செயல்களை உங்களால் செய்யமுடியும். பெரியோர்களுக்குச் சமையலறையில் எப்போதும் உதவுக.

Activity Image 1
பதிலளிப்போமா!
1. பச்சையாக உண்ணப்படக்கூடிய உணவிற்கான எடுத்துக்காட்டுகள்
விடை : காய்கறிகள், பழங்கள்
2. சமைத்து உண்ணப்படக்கூடிய உணவிற்கான எடுத்துக்காட்டுகள்
விடை : அரிசி, ரொட்டி வகைகள்
விவாதிப்போமா!

படத்தில் காட்டப்பட்டுள்ள பொருள்களைப் பார்த்து, அவற்றின் பயன்களை உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.

Activity Image 2
பதிலளிப்போமா!
1. ரொட்டி என்பது குறைந்த (குறைந்த / அதிக ) கொழுப்பு கொண்ட உணவு ஆகும்.
2. பிஸ்கட்டுகள் கோதுமை மாவு (கோதுமை மாவு / அரிசி மாவு) கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
3. பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் தொடர்புடையது கேக் (கேக் / பிஸ்கட்)
செயல்பாடு

உனக்கு அருகில் உள்ள ஓர் அடுமனைக்குச் சென்று ரொட்டி, பிஸ்கட் மற்றும் கேக் செய்யும் முறை பற்றி தெரிந்துகொள்

பதிலளிப்போமா!

கொடுக்கப்பட்டுள்ள மின்னணு சாதனங்களின் பெயர்களை எழுதுக.

(இணைய ஒளிப்படக் கருவி, ரிமோட் ஒலிபெருக்கி, புகைப்படக்கருவி, தலையணி ஒலிக்கருவி)

Activity Image 3